இந்தியாவில் குறையும் பாதிப்பு- 18,870 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி- 378 பேர் மரணம்
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. இந்தியாவில் நேற்று ஒரு நாளில் 18,870 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் 378 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அமெரிக்காவில் நேற்று மட்டும் ஒரே நாளில் 1,799 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் நேற்று ஒருநாள் மட்டும் 4,18,186 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று மீண்டவர்கள் எண்ணிக்கை 4,95,782. கொரோனாவால் நேற்று 7,860 பேர் பலியாகி உள்ளனர்.

மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் நேற்று 99,261 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அமெரிக்காவில் 92,854 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று குணமடைந்தனர். அந்த நாட்டில் கொரோனாவால் 1,799 பேர் நேற்று உயிரிழந்தனர். அமெரிக்காவை தொடர்நது இங்கிலாந்தில் 34,526 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ரஷ்யாவில் கொரோனா மரணங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ரஷ்யாவில் நேற்று மட்டும் 852 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.

இந்தியாவில் குறைவு
இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நாட்டில் நேற்று மொத்தம் 18,870 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் கொரோனாவால் 378 பேர் உயிரிழந்தனர். கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 28,178 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியா நிலவரம்
இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,37,16,451. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,29,86,180. நாட்டில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,47,751 . நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,82,520. இந்தியாவில் நேற்று மட்டும் 54,13,332 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் மொத்தம் 87,66,63,490 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கேரளாவில் அதிகம்
நாட்டில் கேரளாவில்தான் அதிக கொரோனா பாதிப்பு உள்ளது. கேரளாவில் நேற்று 11,196 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. மேலும் கேரளாவில் 149 பேர் நேற்று கொரோனாவால் உயிரிழந்தனர். மகாராஷ்டிராவில் 2,844 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மகாராஷ்டிராவில் 60 பேர் நேற்று கொரோனாவால் உயிரிழந்தனர். தமிழகத்தில் 1630 பேருக்கு நேற்று கொரோனா கண்டறியப்பட்டது. தமிழகத்தில் கொரோனாவால் 17 பேர் மட்டுமே நேற்று உயிரிழந்தனர்.
-
இரவோடு இரவாக பொழிந்த குண்டு மழை.. அமைதி பேச்சுவார்த்தை நடக்கும் போது டிரம்ப் தாக்குதல்.. பதற்றம் -
பிடுங்கப்படும் அதிபரின் பவர்.. ஈரான் போரில் படுதோல்வி? 3 மாதங்களை கடந்தும் திணறும் டிரம்ப்! -
அடங்க மறுக்கும் ஈரான்.. 2.O தாக்குதலுக்கு ரெடியாகிறதா அமெரிக்கா! டிரம்பின் திட்டம் இதுதான்! -
நான் வந்துட்டேன்டா..மீண்டும் உச்சம் தொட போகும் தங்கம்! அந்த ஒரு வார்த்தைக்காக தான் உலகமே வெயிட்டிங்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications