இடியை இறக்கிய டிரம்ப்.. இந்தியா - அமெரிக்க வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை திடீர் ஒத்திவைப்பு! பின்னணி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியா-அமெரிக்கா இடையேயான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நாளை தொடங்கி 3 நாட்கள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தான் தற்பேது அந்த பேச்சுவார்த்தை திடீரென்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை விதித்தார். பரஸ்பர வரி என்ற வகையில் 25 சதவீதமும், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் 25 சதவீதம் என்று 50 சதவீதத்தை விதித்தார்.

india-us-trade-deal-trade-deal-3-day-meeting-postponed-by-us-due-to-tariff-verdict

இதில் பரஸ்பர வரியில் 7 சதவீதத்தையும், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் விதிக்கப்பட்ட 25 சதவீத வரியையும் டிரம்ப் சமீபத்தில் ரத்து செய்தார்.

இதனால் நம் நாட்டுக்கு 18 சதவீத வரி மட்டும் அமலுக்கு வந்தது. இந்த வரி குறைப்புக்கு முக்கிய காரணம் என்னவென்றால் இந்தியா - அமெரிக்கா இடையேயான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் தான்.

இந்த இடைக்கால ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா - அமெரிக்கா இடையே இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நாளை (ஜனவரி 23) முதல் 3 நாட்கள் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த பேச்சுவார்த்தை அமெரிக்காவில் நடப்பதாக இருந்தது. இந்நிலையில் தான் தற்போது அந்த பேச்சுவார்த்தை திடீரென்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் அமெரிக்க உச்சநீதிமன்றம் டிரம்ப் விதித்த வரிகள் செல்லாது என்று நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தது. இது டிரம்புக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் டிரம்ப் அடங்கவில்லை. தீர்ப்புக்கு பிறகு முதற்கட்டமாக 10 சதவீதம் அடுத்ததாக 5 சதவீதம் என்று 15 சதவீத வரியை விதித்துள்ளார். இதனால் குழப்பம் நிலவி வருகிறது.

இந்நிலையில் தான் உச்சநீதிமன்ற தீர்ப்பை முழுமையாக ஆய்வு செய்த பின்னரே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. இதனால் நாளை நடைபெற இருந்த பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+