Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பரஸ்பர வரி ரத்து.. ரஷ்யாவிடமிருந்து மீண்டும் எண்ணெய்யை வாங்குமா இந்தியா? வெளியான தகவல்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: டிரம்ப் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது போட்ட பரஸ்பர வரியை, அந்நாட்டு உச்சநீதிமன்றம் சட்டவிரோதம் என அறிவித்திருக்கிறது. எனவே, இந்த வரிகள் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கின்றன. இப்படி இருக்கையில் பரஸ்பர வரியை காட்டி இந்தியா உடன் செய்யப்பட்ட ஒப்பந்தம் இனியும் தொடருமா? என கேள்வி எழுந்திருக்கிறது. குறிப்பாக ரஷ்யாவிடமிருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய்யை வாங்குமா? என கேள்வி எழுந்திருக்கிறது.

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குகிறோம் என்று சொல்லிதான் 25% வரியை டிரம்ப் நம் தலையில் கட்டினார். அதேபோல, இந்தியா போட்ட வரிக்க பதிலாக 25% என மொத்தமாக 50% நம் தலையில் வந்து விடிந்தது.

India US Trade deal

இந்திய பொருட்கள்

இந்த வரியை காரணம் காட்டி இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தத்திற்கு டிரம்ப் அழைப்பு விடுத்தார். நீண்ட இழுபறிக்கு பின்னர் சமீபத்தில்தான் வர்த்த்க ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி அமெரிக்க பொருட்களுக்கு நாம் எந்த வரியும் விதிக்க மாட்டோம். பதிலுக்கு நம்முடைய பொருட்களுக்கு அமெரிக்கா 18% வரியை போடும். இதனால் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்காவில் பெரிய அளவில் கிராக்கி இருக்காது.

கடும் எதிர்ப்பு

இது ஒருபுறம் எனில், மறுபுறம் அமெரிக்காவிலிருந்து வேளாண் பொருட்கள் இந்தியாவுக்குள் வருவது இரண்டாவது பிரச்சனை. இத இந்திய விவசாயிகளை மொத்தமாக காலி செய்துவிடும் என்று விவசாய சங்கங்கள் எச்சரித்துள்ளன. உள்ளூர் விவசாயிகளும் இந்த வர்த்த ஒப்பந்தத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.

ரஷ்ய எண்ணெய்

இந்த சூழலில்தான் மத்திய அரசு அமெரிக்காவின் பேச்சை கேட்டுக்கொண்டு ரஷ்யாவிடமிருந்து வாங்கி வந்த கச்சா எண்ணெய்யை நிறுத்தியது. இதற்கு பதிலாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருக்கும் வெனிசுலாவிலிருந்த எண்ணெய் வாங்க திட்டமிட்டு வருகிறது. ரஷய் நமக்கு சலுகை விலையில் எண்ணெய்யை கொடுத்தது. ஆனால், அமெரிக்கா அப்படி கொடுக்காது. இதனால் கொஞ்சம் நாட்கள் கழித்து, பெட்ரோல், டீசல் விலை உயரும்.

ஒப்பந்தம் ரத்தாகுமா?

ஆனால், அமெரிக்க நீதிமன்றம்தான் பரஸ்பர வரியை சட்ட விரோதம் என அறிவித்து ரத்து செய்துவிட்டதே! இனிமேலும் எதற்காக டிரம்பின் பேச்சை கேட்டுக்கொண்டு ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை தவிர்க்க வேண்டும்? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றன. மட்டுமல்லாது விவசாயிகள் கடுமையாக எதிர்க்கும் இந்தியா-அமெரிக்கா புதிய வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

அமெரிக்க நீதிமன்றம்

இப்படி செய்ய முடியுமா? என்று தெரியாது. ஆனால், செய்தால் அது இந்தியாவுக்கு பலன் கொடுக்கும். இதில் இன்னொரு சிக்கல் இருக்கிறது. அமெரிக்க சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்திதான் இன்று 10% வரியை டிரம்ப் அறிவித்திருக்கிறார். நாம் ஒப்பந்தத்தை ரத்து செய்தால் இதுபோல கூடுதலான வரியை டிரம்ப் விதிக்க வாய்ப்பு இருக்கிறது. இதை செய்ய அமெரிக்க நீதிமன்றம் அனுமதிக்குமா? என்றால் அது கேள்விக்குறிதான்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+