இந்தியா உடனான டீல்.. சொதப்பியது யார்? "டிரம்ப் கூட.." வெள்ளை மாளிகையில் என்ன நடந்தது.. பரபர ஆடியோ
வாஷிங்டன்: இந்தியா அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் (India US trade deal) கடந்த சில மாதங்களாகவே அப்போது இறுதியாகும் இப்போது இறுதியாகும் எனச் சொல்லப்பட்டாலும் சில காரணங்களால் அந்த டீல் இறுதியாகாமலேயே உள்ளது. இதற்கிடையே அந்த விவகாரத்தில் என்ன சிக்கல்.. டீல் இறுதியாகாமல் இருக்க என்ன காரணம் என்பது குறித்து சில தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
இந்தியா- அமெரிக்கா இடையே கடந்த பல ஆண்டுகளாகவே சிறப்பான உறவு இருந்து வந்தது. ஆனால் டிரம்ப் வந்த பிறகு கடந்த ஓராண்டாக இது கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா மீது டிரம்ப் 50% வரியை விதித்துள்ளார். இதனால் இந்தியா அமெரிக்கா வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் முடியும் எனச் சொல்லப்பட்டது.

இழுபறி
இருப்பினும், பல்வேறு காரணங்களால் வர்த்தக ஒப்பந்தம் இறுதியாகாமல் இழுபறியிலேயே இருந்து வருகிறது. இதற்கிடையே டிரம்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டெட் க்ரூஸ் என்பவரின் ஆடியோ வெளியாகி இப்போது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அதில் டிரம்ப் நிர்வாகத்தில் மிகப் பெரிய பிளவு இருப்பதாக க்ரூஸ் விமர்சிக்கிறார். அவர் அந்த ஆடியோவில் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் மற்றும் அதிபர் டிரம்ப்பைக் காட்டமாக விமர்சித்துள்ளார். டிரம்பின் வரி அரசியலைக் கடுமையாக சாடியுள்ளார்.
மேலும், இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தைத் தடுத்ததே துணை அதிபர் வேன்ஸ் மற்றும் வெள்ளை மாளிகை ஆலோசகர் பீட்டர் நவரோ தான் என்றும் குற்றஞ்சாட்டினார். சில சமயம் டிரம்ப்பும் கூட இந்த வர்த்தக ஒப்பந்தம் இறுதியாகாமல் போகக் காரணம் என அவர் சாடியுள்ளார்.
சர்ச்சை ஆடியோ
2025 நடுப்பகுதியில் நன்கொடை திரட்டும் நிகழ்ச்சியில் க்ரூஸ் பேசிய ஆடியோ தான் இவை. சுமார் 10 நிமிடங்கள் இருக்கும் இந்த ஆடியோவை கொடுத்ததே குடியரசு துறை வட்டாரங்கள் தான் எனச் சொல்லப்படுகிறது. இந்தப் பேச்சுகளில், அவர் தன்னை தடையற்ற வர்த்தகத்தையும், தலையீடு இல்லாத வர்த்தகத்தையும் ஆதரிக்கும் நபர் போலக் காட்டிக் கொள்கிறார். 2028 அதிபர் தேர்தலில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வது போலவும் தெரிகிறது.
அதிபர் டிரம்பின் வர்த்தகக் கொள்கையைக் கேலி செய்த க்ரூஸ், அமெரிக்காவின் வரி அறிவிப்புகளால் பொருளாதாரம் சீர்குலைந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். மேலும், இதனால் அதிபர் மீது பதவி நீக்க மசோதா கூட மீண்டும் கொண்டு வரப்படும் சூழல் இருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.. 2025 ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் டிரம்ப் வரியை முதலில் அறிவித்த போது, தானும் சில எம்பிக்களும் அதிபருடன் பேசி, அவரை தனது வரி முடிவை வாபஸ் பெற வைக்க வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
வரி விவகாரம்
நள்ளிரவைத் தாண்டியும் இந்த போன் கால் நீட்டித்ததாகவும் இருப்பினும், டிரம்ப்பை தங்களால் ஒப்புக்கொள்ள வைக்க முடியவில்லை என்றும் தெரிவித்தார்.. டிரம்ப் அப்போது மோசமான மூடில் இருந்ததாகத் தெரிவித்த க்ரூஸ், தங்களிடம் கத்தியதாகவும் திட்டியதாகவும் தெரிவித்தார். வரியால் பொருட்கள் பல்வேறு பொருட்களின் விலையும் அதிகரிக்கும் என்றும் இதனால் 2026 மிட் டேர்ம் தேர்தலில் தோல்வி அடையலாம் என்றும் எச்சரித்தேன்.
இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்
இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்று கொள்ளும்படி வெள்ளை மாளிகைக்குப் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியதாகவும் க்ரூஸ் நன்கொடையாளர்களிடம் தெரிவித்தார். பல தரப்பு வலியுறுத்திய போதும் அது ஒப்புக்கொள்ளப்படாமல் போக என்ன காரணம் என்று ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு க்ரூஸ், வெள்ளை மாளிகை பொருளாதார ஆலோசகர் பீட்டர் நவரோ, வேன்ஸ் மற்றும் சில சமயங்களில் டிரம்ப்பும் இதற்குக் காரணம் எனக் குறிப்பிட்டார்.
-
வந்த வேலை முடிந்தது.. 2-3 வாரத்தில் குட் நியூஸ்! ஈரான் குறித்து பேசிய டிரம்ப்! இந்தியா தப்பிக்குமா? -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
நேட்டோவில் இருந்து விலகும் அமெரிக்கா? உலக நாடுகளுக்கே அதிர்ச்சி கொடுத்த டிரம்ப்.. இப்படி ஆகிடுச்சே -
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
வளைகுடாவில் அமெரிக்காவுக்கு இன்னொரு தலைவலி.. ஈராக்கில் சர்வதேச செய்தியாளர் கடத்தல்.. ஷாக் வீடியோ -
துபாய்க்கு இப்போ தான் உசுரே வந்துருக்கு..ஈரானை முடக்கிய அமெரிக்கா? டிரம்ப் சொன்ன வார்த்தை.. அடுத்து? -
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது?












Click it and Unblock the Notifications