உலக வங்கியின் தலைவராகும் அஜய் பங்கா? யார் இந்த இந்திய வம்சாவளி? சொந்த மாநிலம் எது தெரியுமா?
அமெரிக்காவின் வாஷிங்டனை தலைமையிடமாக கொண்டு உலக வங்கி செயல்பட்டு வருகிறது.
வாஷிங்டன்: உலக வங்கியின் தலைவராக டேவிட் மல்பாஸ் உள்ளார். இவர் அந்த பொறுப்பில் இருந்து விலகிய நிலையில் உலக வங்கியின் புதிய தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த அஜய் பங்காவின் பெயரை அமெரிக்க அதிபர் ஜோபைடன் பரிந்துரைந்துள்ளார். ஜோபைடன் பரிந்துரைத்த இந்த அஜய் பங்கா யார்? என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
World Bank எனும் உலக வங்கி என்பது வளரும் நாடுகளின் முதலீட்டு திட்டங்களுக்கு கடன்கள் வழங்கும் ஓர் பன்னாட்டு நிதி நிறுவனமாகும். இதன் நோக்கம் என்பது வளரும் நாடுகளில் நிலவும் வறுமையை குறைப்பதாகும்.
மேலும் வெளி முதலீடு, பன்னாட்டு வணிகங்களை உருவாக்கி கொடுப்பதிலும் உலக வங்கியின் முக்கிய பங்காற்றி வருகிறது. இதனால் உலக வங்கியின் தலைவர் என்பது பொதுவாக அமெரிக்காவை சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.

அஜய் பங்கா பரிந்துரை
அந்த வகையில் தான் உலக வங்கி தலைவராக டேவிட் மல்பாஸ் இருந்து வந்தார். இவரது பதவிக்காலம் முடிவதற்குள் பொறுப்பில் இருந்து விலகி உள்ளார். இதனால் உலக வங்கிக்கான புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான பணிகள் தொடங்கி உள்ளன. இந்நிலையில் தான் உலக வங்கிக்கான புதிய தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த அஜய் பங்காவை அமெரிக்க அதிபர் ஜோபைடன் பரிந்துரை செய்துள்ளார். காலநிலை மாற்றம் உள்பட அவசரமான சவால்களை சமாளிக்கும் நபராக இருப்பார் என ஜோபைடன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மாறும் டிரெண்ட்
சர்வதேசய நாணய நிதியத்தின் தலைவராக தொன்றுதொட்டு ஐரோப்பியாவை சேர்ந்தவர்கள் நியமனம் செய்யப்பட்டு வருவது போல் உலக வங்கியின் தலைவராக எப்போதும் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் தான் நியமனம் செய்யப்படுவார்கள். இந்த நிலையில் தான் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க குடியுரிமை பெற்ற அஜய் பங்கா பரிந்துரை செய்யப்பட்டுள்ளார் என்பது முக்கிய அம்சமாகும்.

மாஸ்டர் கார்டு நிறுவனத்தில்...
உலக வங்கியின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள அஜய் பங்காவின் வயது 63 ஆகும். இவர் மாஸ்டர்கார்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக 11 ஆண்டுகள் வரை பணியாற்றினார். தற்போது ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனத்தின் துணைத் தலைவராக பணியாற்றுகிறார். மேலும் சுமார் 30 ஆண்டுகளாக உலகளாவிய நிறுவனங்களில் பணியாற்றிய மற்றும் வழிநடத்திய அனுபவம் கொண்டவர்.

மகாராஷ்டிராவை சேர்ந்தவர்
இவர் இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர். புனேவில் பிறந்த அஜய் பங்காவின் முழுப்பெயர் அஜய் பால் பங்கா என்பதாகும். இவர் டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் அகமதாபாத்தி்ல உள்ள இந்திய மேலாண் நிறுவனம் (ஐஐஎம்) ஆகியவற்றில் பொருளாதார படிப்புகளை முடித்தார். அதன்பிறகு நெஸ்லே நிறுவனத்தில் பணியாற்றி தொடங்கினார். இதையடுத்து பெப்சிகோ உணவு நிறுவனத்தில் பணியாற்றினார். மேலும் பல நிறுவனங்களில் ஆலோசகராக செயல்பட்ட இவர் கடந்த 2015ல் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் வர்த்தக கொள்கை மற்றும் பேச்சுவார்த்தை தொடர்பான ஆலோசனை குழுவில் அங்கம் வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications