Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமெரிக்காவில் இந்தியர் செய்த ஒரு சின்ன தவறு.. இப்போ 15 வருடம் ஜெயிலில் தவிக்க போகிறார்.. பாவம்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் வசித்து வந்த இந்தியர் ஒருவரை அந்நாட்டு போலீசார் இப்போது கைது செய்துள்ளனர். அவர் ஒரே நேரத்தில் இரண்டு நிறுவனங்களில் வேலை செய்ததாகக் கூறி, அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர். இது தொடர்பான விசாரணை நடந்து வரும் சூழலில், அவருக்கு 15 ஆண்டுகள் வரை சிறையில் தண்டனை கிடைக்கலாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்காவில் கணிசமான அளவுக்கு இந்தியர்கள் வசித்து வருகிறார்கள். இந்தியர்கள் பலரும் முதலில் அங்கு வேலைக்காகச் சென்று அப்படியே செட்டிலாகி விடுகிறார்கள். அவர்களின் பிள்ளைகளும் அங்கேயே இருந்துவிடுகிறார்கள். இதனால் அமெரிக்க மக்கள் தொகையில் இந்திய வம்சாவளியினர் கணிசமான அளவில் இருக்கிறார்கள்.

Indian-Origin Man Faces 15 Years in US Prison for Moonlighting NW police arrests Mehul Goswami

இந்திய வம்சாவளி நபர்

அப்படி நியூயார்க் நகரில் வேலை செய்து வரும் இந்திய வம்சாவளி நபர் தான் மெஹுல் கோஸ்வாமி.. 39 வயதான இந்திய வம்சாவளி இளைஞரான இவரை உள்ளூர் போலீசார் மூன் லைடிங் புகாரில் கைது செய்துள்ளனர். ஒரு நபர் இரு நிறுவனங்களில் பார்ட் டைம் வேலை செய்வது தவறில்லை. ஆனால், ஒரே நபர் இரு நிறுவனங்களில் புல் டைம் வேலை செய்வதே மூன் லைடிங் என அழைக்கப்படும்.

என்ன நடந்தது!

நியூயார்க் மாநில தகவல் தொழில்நுட்பச் சேவை அலுவலகத்தில் பணிபுரிந்தபடியே, இவர் வெளியே ஒப்பந்ததாரராகவும் வேலை செய்து வந்திருக்கிறார். இதன் காரணமாகவே அவரை நியூயார்க் போலீசார் கைது செய்தனர். நியூயார்க் மாநில இன்ஸ்பெக்டர் ஜெனரல் அலுவலகமும், சரடோகா கவுண்டி ஷெரிப் அலுவலகமும் இணைந்து நடத்திய விசாரணை கோஸ்வாமி தவறு செய்தது உறுதியானது. அவரது இந்தச் செயல் $50,000 டாலர் வரிப் பணம் தவறாகப் பயன்படுத்தியதற்குச் சமம் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நியூயார்க் அரசின் அலுவலகத்தில் ஒர்க் ஃபர்ம் ஹோம் முறையில் கோஸ்வாமி பணியாற்றிக் கொண்டிருந்தார். இதற்கிடையே கடந்த 2022 மார்ச் மாதம் அவர் மால்டாவில் உள்ள குளோபல்ஃபவுண்டரீஸ் என்ற செமிகண்டக்டர் நிறுவனத்திலும் ஒப்பந்ததாரராக வேலை செய்ய ஆரம்பித்துள்ளார்.

இரு வேலைகளைச் செய்தார்

அந்நாட்டுச் சட்டப்படி அவர் இதுபோல ஒரே நேரத்தில் இரு நிறுவனங்களில் வேலை செய்வது சட்டப்படி குற்றம்.. ஒரு அரசு ஊழியராகத் தனது கடமைகளைச் செய்ய வேண்டிய நேரத்தில் அவர் ஒரு தனியார் நிறுவனத்திற்காக வேலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. கோஸ்வாமி இதுபோல ஒரே நேரத்தில் இரு வேலைகளைச் செய்வதாகச் சொல்லி யாரோ ஒருவர் மெயில் மூலம் புகாரளித்துள்ளார். அதைத் தொடர்ந்தே விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து இன்ஸ்பெக்டர் ஜெனரல் லூசி லாங் கூறுகையில், "அரசு ஊழியர்கள் நேர்மையுடன் சேவை செய்ய வேண்டும். கோஸ்வாமியின் இந்தச் செயல் அந்த மக்கள் நம்பிக்கை உடைப்பதாக இருக்கிறது. அரசுக்கு வேலை செய்வதாகக் கூறிக் கொண்டு, வேறு ஒரு வேலை செய்வது மக்கள் வரிப் பணத்தை வீணடிப்பதாகும்" என்று தெரிவித்தார்.

கைது

இதுபோல மூன்லைட் செய்த குற்றச்சாட்டிற்காகக் கடந்த வாரம், சரடோகா கவுண்டி போலீசார் கோஸ்வாமியை கைது செய்தது. கடுமையான குற்றப் பிரிவுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.. இதற்கு அவருக்கு அதிகபட்சம் 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். கைது செய்யப்பட்ட கோஸ்வாமி, பின்னர் மால்டா டவுன் நீதிமன்றத்தில் நீதிபதி ஜேம்ஸ் ஏ. ஃபாசி முன் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் மீதான வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+