ரசிகர்களை அடிமையாக்கி.. விபச்சாரத்தில் தள்ளிய இன்ஸ்டாகிராம் பெண் பிரபலம் கைது! பகீர் பின்னணி

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் வசித்து வரும் பிரபல இன்ஸ்டாகிராம் பிரபலம் பெண்களை ஏமாற்றிக் கடத்தி அவர்களை விபச்சாரத்தில் தள்ளியுள்ளார். இரண்டு பேர் மாயமான வழக்கில் எஃப்.பி.ஐ விசாரணை நடத்திய நிலையில், அதில் தான் இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எஃப்.பி.ஐ இந்த வழக்கை விசாரிக்க விசாரிக்கப் பல பூதங்கள் கிளம்பியுள்ளன. இது குறித்து நாம் பார்க்கலாம்.

பிரேசில் நாட்டை சேர்ந்த முன்னாள் மாடல் ஒருவர் செயல்களைக் கேட்டால் நமக்குத் தலையே சுற்றிவிடும். அமெரிக்காவில் செட்டிலான இவர், நாம் யாரும் யோசித்துக் கூட பார்க்காத கொடூரங்களை அரங்கேற்றியுள்ளார். இது குறித்து நாம் பார்க்கலாம்.

US world

இன்ஸ்டாகிராம் மாடல்: அமெரிக்காவில் செட்டிலான பிரபல பிரேசில் இன்ஸ்டாகிராம் மாடல் கேட் டோரஸ். கடந்த 2022ல் இவருடன் வசித்து வந்த இரண்டு பெண்கள் மாயமானார்கள். இதையடுத்து இது தொடர்பான வழக்கை அமெரிக்காவின் எஃப்.பி.ஐ விசாரிக்கத் தொடங்கியுள்ளது. அப்போது தான் இந்த மாடல் பெண்களைக் கடத்தி, அவர்களை அடிமைகளாக வைத்திருப்பது தெரிய வந்தது.

இது தொடர்பாக டோரஸால் கடத்தப்பட்டு பெண்கள் கூறுகையில், "அவர் இன்ஸ்டாகிராமில் பல வீடியோக்கள் போடுவார். பிரேசில் நாட்டில் மிக மோசமான நிலையில், இருந்த அவர் இப்போது ஹாலிவுட் நட்சத்திரங்களுடன் இருப்பதாகவும்.. இதுவே தனது சக்சஸ் ஸ்டோரி என்றும் கூறுவார். அதை நம்பி சென்றே நாங்கள் இதில் சிக்கிக் கொண்டோம்" என்கிறார்கள்.

US world

லியோனார்டோ டிகாப்ரியா: ஒரு காலத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோவை இந்த கேட் டோரஸ் டேட்டிங் செய்ததாகவும் கூறப்படுகிறது. அவர் தனது இன்ஸ்டாகிராம் வீடியோவில் மோடிவெஷன் வீடியோக்களை வெளியிடுவது மட்டுமின்றி, தன்னால் வரும் காலத்தில் என்ன நடக்கும் என்பதையும் துல்லியமாகக் கணிக்க முடியும் என கூறி வந்துள்ளார். இதனால் அவர் அந்நாட்டில் பிரபலமான ஒரு நபராகவே இருந்துள்ளார்.

இப்படி இருந்ததாலேயே பலரும் இந்த கேட் டோரஸை நம்பியுள்ளனர். முதலில் ஒரு பெண் பிரேசில் நாட்டில் இருந்து கேட் டோரஸை சந்திக்க வந்துள்ளார். 2019இல் அவர் வேலைக்குச் சேர்ந்துள்ளார். டோரஸின் செல்ல பிராணிகளைக் கவனித்துக் கொள்வதும், சமைத்துக் கொடுப்பதும் தான் வேலை என சொல்லியுள்ளார். ஆனால், அந்த பெண் டோரஸ் வீட்டிற்கு வந்த போது அது பெரிய ஷாக். டோரஸ் ஒன்றும் ஹாலிவுட் பிரபலங்கள் இருக்கும் இடத்தில் தங்கவில்லை. அவரது வீடு மிக மோசமான நிலையில் இருந்துள்ளது. சம்பளம் கூட தராமல் டோரஸ் அந்த பெண்ணை வேலை வாங்கியுள்ளார்.

கொடுமை: சில மாதங்கள் பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அந்த பெண் இறுதியில் அங்கிருந்து ஓடிவிட்டாராம். இதையடுத்து டோரஸ் டிசைர் மற்றும் லெட்டிசியா என்ற இரண்டு பெண்களை இதேபோல ஏமாற்றி அழைத்து வந்துள்ளார். அதன் பிறகே டெக்சாஸில் உள்ள ஒரு வீட்டில் வசிக்க தொடங்கியுள்ளனர். அப்போது தான் கேட் டோரஸ் எல்லை மீற ஆரம்பித்துள்ளார்.

அதாவது தன்னை நம்பி வந்த பெண்களை ​​உள்ளூர் ஸ்ட்ரிப் கிளப்பில் வேலை செய்யும்படி கட்டாயப்படுத்தியுள்ளார். மேலும், ரூமை விட்டு வெளியே செல்லக் கூட பெர்மிஷன் என்று கொடூரமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். மேலும், சம்பளம் எதுவும் தராமல் அடிமை போல நடத்தியுள்ளார்.

விபச்சாரம்: கேட் டோரஸ் இத்துடன் நிற்கவில்லை. அவர்கள் இரண்டு பேரையும் விபச்சாரத்திற்கும் தள்ளியுள்ளார். தினசரி விபச்சாரத்தில் குறிப்பிட்ட தொகையைச் சம்பாதிக்கவில்லை என்றால் இரவு வீட்டிற்குள் கூட அவர்களை அனுமதிக்கமாட்டாராம். அவர்கள் வீதிகளிலேயே தூங்க வேண்டி இருக்குமாம். இப்படிப் பல கொடுமைகளைச் செய்துள்ளார்.

அந்த இரண்டு பெண்களின் பெற்றோர் அளித்த புகாரிலேயே கேட் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணை முடிந்த நிலையில், கேட் டோரஸுக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+