பதுங்கி இருக்கும் ஈரான்..இஸ்ரேல் காலுக்கு கீழ் கன்னிவெடி! நாங்களும் வருவோம்..குறுக்கே வந்த அமெரிக்கா
வாஷிங்டன்: கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில் இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் பதில் தாக்குதல் நடத்தினால் நாங்களும் இஸ்ரேலுடன் சேர்ந்து போரிட வேண்டி இருக்கும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து மட்டுமே தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல் ஈரான் மீது, ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கு விதமாக நேற்று முன் தினம் திடீரென தாக்குதல் நடத்தியது.

20க்கும் மேற்பட்ட ராணுவ நிலைகளை குறி வைத்து நூற்றுக்கும் மேற்பட்ட போர் விமானங்கள் மூலம் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டது. குறிப்பாக ஈரான் தலைநகரான டெஹ்ரானில் அடித்தடுத்து வெடிச்சத்தம் கேட்டது.
அதே நேரத்தில் ஈரான் தங்களது வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் இஸ்ரேலின் தாக்குதலை முறியடித்ததாக ஈரான் ராணுவம் கூறியுள்ளது. ஈரானில் என்ன வகையான சேதங்கள் ஏற்பட்டது என்பது குறித்தான எந்த தகவலும் அப்போது வெளியாகவில்லை. அதே நேரத்தில் ஈரானில் விமான போக்குவரத்து முழுமையாக ரத்து செய்யப்பட்டது. மேலும் இஸ்ரவேல் நடவடிக்கைக்கு எதிராக பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் கூறியுள்ளது.
இந்த நிலையில் ஈரான் மீது நடத்தப்பட்ட துல்லிய தாக்குதல் சில மணி நேரங்களில் முடிவுக்கு வந்ததாக இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் ரியல் அட்மிரல் டேனியல் ஹகரி உறுதி செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில்," இஸ்ரேலுக்கு எதிராக ஈரானின் தாக்குதலுக்கு நாங்கள் பதிலடி கொடுத்தோம். அந்த பதிலடி முடிந்துவிட்டது. ஈரானில் ராணுவ இலக்குகள் மீது துல்லியமான தாக்குதல் நடத்தினோம். இதனால் இஸ்ரேலுக்கு எதிரான அச்சுறுத்தல் முறியடிக்கப்பட்டு இருக்கிறது. ஈரான் மீண்டும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினால், இஸ்ரேலை தாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம்" எனக் கூறியிருந்தார்.
அதே நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானுக்கு சேதங்கள் நடைபெற்றதாக மேற்கத்திய ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன. குறிப்பாக சுமார் 3 மணி நேரம் நடந்த தொடர் தாக்குதலில் ஈரான் பயன்படுத்தி வந்த ஏவுகணைகள்,ட் ரோன்களை உற்பத்தி செய்யும் ஆலைகள் மற்றும் ரேடார் சாதனங்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இஸ்ரேலின் இந்த அத்துமீறலை ஈரான் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. அவர்கள் நம்மை குறித்து தப்பு கணக்கு போட்டுள்ளனர். இதனை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டிய நேரம். இது இதை நாம் நிச்சயம் செய்ய வேண்டும் என ஈரான் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி கூறியிருந்தார்.
இதனால் எப்போது வேண்டுமானாலும் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஈரான் ராணுவமும் தங்களது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் கவுண்டவுன் போட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தக்கூடாது என அமெரிக்கா கூறி இருக்கிறது.
இது தொடர்பாக பேசிய அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஆன கரீம் ஜீன் பியர் இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஈரான் பதில் தாக்குதல் நடத்தக்கூடாது. ஒருவேளை எச்சரிக்கையை மீறி தாக்குதல் நடத்தினால் இஸ்ரேலை பாதுகாப்பதற்கு அமெரிக்கா உதவும் என தெரிவித்திருக்கிறார். இதனால் இஸ்ரேல் ஈரான் இடையேயான போர், ஈரான் அமெரிக்கா இடையேயான போர் போல மாறும் வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர் உலக அரசியல் நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications