டிரம்ப் வெற்றிக்கு பின்.. திடீரென நாட்டு மக்களிடையே உரையாற்றிய ஜோ பைடன்.. என்ன சொன்னார் தெரியுமா?
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வென்ற நிலையில், அவர் அடுத்தாண்டு ஜன. மாதம் புதிய அதிபராகப் பதவியேற்க இருக்கிறார். அதிபர் தேர்தலுக்குப் பிறகு முதல்முறையாக நாட்டு மக்களிடையே உரையாற்றிய பைடன், அமைதியான முறையில் அதிகாரப் பரிமாற்றம் நடக்கும் என உறுதியளித்தார். மேலும், ஜனநாயகத்தில் மக்களின் விருப்பம் எப்போதும் மேலோங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
உலகமே எதிர்பார்த்துக் காத்திருந்த அமெரிக்க அதிபர் தேர்தல் ஒரு வழியாக நடந்து முடிந்துவிட்டது. இந்தத் தேர்தலில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை குடியரசு கட்சியின் டிரம்ப் வீழ்த்தினார்.

இதன் மூலம் அமெரிக்காவின் 47வது அதிபர் என்ற சிறப்பை அவர் பெற்றார். ஏற்கனவே கடந்த 2016- 2020 காலகட்டத்தில் டிரம்ப் அதிபராக இருந்துள்ள நிலையில், இப்போது மீண்டும் அப்பதவிக்குத் தேர்வாகியுள்ளார்.
நாட்டு மக்களிடையே உரை: இதற்கிடையே அதிபர் தேர்தலில் முடிவுகள் வெளியான பிறகு முதல்முறையாக சிட்டிங் அதிபர் பைடன் நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அதிகார பரிமாற்றம் அமைதியான முறையில் நடைபெறும் எனக் குறிப்பிட்ட அவர், ஜனநாயகத்தில் மக்கள் விருப்பமே எப்போதும் மேலோங்கி நிற்கும் எனக் குறிப்பிட்டார். அதேபோல கமலா ஹாரிஸை பாராட்டிய அவர், கடைசி வரை களத்தில் கமலா ஹாரிஸ் கடும் போட்டி கொடுத்ததாகவும் குறிப்பிட்டார்.
பைடன் மேலும் பேசுகையில், "கமலா ஹாரிஸ் முடிந்தவரை முயற்சி செய்தார். கமலா ஹாரிஸும் அவரது டீமும் தாங்கள் செய்ததை நினைத்துப் பெருமைப்பட வேண்டும். நேற்றைய தினம் நான் புதிய அதிபராக ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்ப்பை தொடர்பு கொண்டு பேசினேன். அவருக்கு வாழ்த்து சொன்னேன்.
அதிகார பரிமாற்றம்: மேலும் அமைதியான முறையில் அதிகார பரிமாற்றம் நடக்கும். இதற்காக எனது டீம் டிரம்ப் டீம் உடன் இணைந்து பணியாற்றும். அமெரிக்க மக்கள் இதைத் தான் விரும்புவார்கள்.. நான் கமலா ஹாரிஸிடமும் பேசினேன். அவர் மக்களுக்காகச் சேவையாற்றும் மிகச் சிறந்த ஒரு நபர். அதேநேரம் இந்த தேர்தல் தோல்வியைச் சமாளிப்பது ஜனநாயகக் கட்சிக்குக் கடினம் தான்.
இருவருமே நாட்டிற்காக தங்கள் விஷனை முன்வைத்துப் போட்டியிட்டார்கள். நாட்டு மக்கள் இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்கிறார்கள். நாட்டு மக்களின் தேர்வை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். நான் அதிபராக எனது கடமையைச் செய்வேன். நான் எதைச் சொல்லி பதவிப் பிரமாணம் செய்தேனோ அதன்படி நடப்பேன்.. அரசியலமைப்பை மதிப்பேன்.. ஜனவரி 20ம் தேதி அமெரிக்காவில் அமைதியான முறையில் அதிகார மாற்றம் நடக்கும்.
துவண்டு விடாதீர்கள்: பொது வாழ்க்கையில் பின்னடைவுகளைத் தவிர்க்க முடியாதது. அதேநேரம் இதைக் கண்டு ஜனநாயக கட்சியினர் துவண்டு போய்விடக்கூடாது. இது கடினமான நேரம் என்பது எனக்குத் தெரியும். உங்கள் கவலை எனக்குப் புரிகிறது.. ஆனால் ஒன்றை மறந்துவிடாதீர்கள். நாம் மிகச் சிறந்த ஒரு ஆட்சியைக் கடந்த 4 ஆண்டுகளில் வழங்கி இருக்கிறோம். இது நான் அதிபராக இருந்ததால் இல்லை.. நாம் அனைவரும் இணைந்ததால் சாதிக்க முடிந்தவை" என்று தெரிவித்தார்.
டிரம்ப் படைத்த சாதனை: அமெரிக்க அதிபராக டிரம்ப் தேர்வாவது இது 2வது முறை.. கடந்த 2016ல் நடந்த அதிபர் தேர்தலில் அவர் ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தி அதிபராகத் தேர்வானார். 2020இல் நடந்த அதிபர் தேர்தலில் அவர் பைடனிடம் தோல்வியடைந்த நிலையில், இப்போது 2024ல் அவர் கமலா ஹாரிஸை வீழ்த்தி மீண்டும் அதிபராகியுள்ளார். அமெரிக்காவில் ஒபாமா, புஷ் எனப் பலரும் தொடர்ந்து இரண்டு முறை அதிபராக இருந்துள்ளனர். ஆனால், இதுபோல இடைவெளி விட்டு ஒருவர் அதிபராவது 132 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஈரானை நம்புவது ஆபத்து.. டிரம்ப் டீமிற்குள்ளேயே வந்த எதிர்ப்பு.. "அவரே" சொல்லிட்டாராம்! பதற்றம் -
"எனக்கு பிடிக்கலைனா குண்டு போடுவேன்.." அமைதி ஒப்பந்தம் வந்த பிறகும்.. விடாமல் மிரட்டும் டிரம்ப் -
தோற்றது ஈரான் இல்லை! டிரம்ப் தான்.. ரூ.28 லட்சம் கோடியை தாரை வார்க்கும் அமெரிக்கா.. பின்னணி -
$300 பில்லியன் கொடுக்க முடியாது.. டிரம்ப் திட்டவட்டம்! ஈரான் முடிவு என்ன? அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில்












Click it and Unblock the Notifications