டிரம்பிடம் பணிய மறுத்த ஜோர்டான் மன்னர்.. முகத்துக்கு நேராக கூறிய வார்த்தை! காசாவால் பெரிய ட்விஸ்ட்
வாஷிங்டன்: காசாவில் இருக்கும் மக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஜோர்டான் மன்னரை நேரில் அழைத்து அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார். ஆனால் டொனால்ட் டிரம்புக்கு முகத்துக்கு நேராக ஜோர்டான் மன்னர் பணிய மறுத்ததோடு, காசா மக்களை வெளியேற்ற கூடாது என்று கூறியது அமெரிக்காவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
இஸ்ரேலின் போர் நடவடிக்கையால் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் கட்டடங்கள் அனைத்தும் உருக்குலைந்து விட்டன. தற்போது இந்த போர் என்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் ஒப்பந்தம் அடிப்படையில் இந்த போர் முடிவுக்கு வந்துள்ளது.

இதற்கிடையே தான் கடந்த 4ம் தேதி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்தார். அப்போது காசா மீதான போர் விவகாரங்கள் பற்றி இருவரும் விவாதித்தனர். அதன்பிறகு பத்திரிகையாளர்கள் சந்திப்பை இருவரும் நடத்தினர்.
அப்போது டொனால்ட் டிரம்ப், ‛‛காசாவை அமெரிக்கா கைப்பற்ற உள்ளது. தற்போதைய காசா அழிவின் விளிம்பில் உள்ளது. மீண்டும் மீண்டும் அங்கு காசா மக்களை வசிக்க சொல்வது மோதலுக்கு வழிவகுக்கும். இதனால் அமெரிக்கா காசாவை கைப்பற்றி மேம்படுத்த உள்ளது. கட்டட கழிவுகள் அகற்றப்பட்டு புதிய வீடுகள் கட்டி கொடுக்கப்படும். வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். அதன்பிறகு அனைத்து மக்களும் அங்கு வாழலாம். இந்த பணிக்காக காசாவில் உள்ள மக்கள் வெளியேற வேண்டும். அவர்களை பிற நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும்'' என்று கூறினார்.
டொனால்ட் டிரம்பின் இந்த பேச்சை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வரவேற்றார். மாறாக இஸ்லாமிய நாடுகள் கடுமையாக எதிர்த்துள்ளன. காசா பாலஸ்தீனியர்களின் சொந்த மண். அவர்களை அமெரிக்கா வெளியேற்ற முடியாது. இதனை விடமாட்டோம் என்று இஸ்லாமிய நாடுகள் கூறி வருகின்றன. ஆனால் டொனால்ட் டிரம்ப் காசாவில் இருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றுவதில் உறுதியாக உள்ளார்.
குறிப்பாக காசாவில் இருந்து வெளியேற்றப்படுவோரை எகிப்து, ஜோர்டான் நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். ஆனால் இருநாடுகளும் மறுத்து வருகின்றன. இந்நிலையில் தான் ஜோர்டான் மன்னர் 2ம் அப்துல்லா, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். டொனால்ட் டிரம்ப் அழைப்பை ஏற்று ஜோர்டான் மன்னர் 2ம் அப்துல்லா அமெரிக்கா சென்றார். வெள்ளை மாளிகையில் டொனால்ட் டிரம்ப்பை ஜோர்டான் மன்னர் 2ம் அப்துல்லா சந்தித்தார். அப்போது அவரிடம் டொனால்ட் டிரம்ப், ‛‛காசாவை நாங்கள் கட்டுப்பாட்டில் வைத்து முன்னேற்றம் செய்ய உள்ளோம். காசாவில் இருந்து வெளியேறும் மக்களை நீங்கள் (ஜோர்டான்) ஏற்றுக்கொள்ள வேண்டும்'' என்று கூறினார்.
அதற்கு ஜோர்டான் மன்னர் 2ம் அப்துல்லா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். காசா மக்களை அமெரிக்கா வெளியேற்றுவதை அவர் விரும்பவில்லை. அதேபோல் காசாவில் இருந்து பாலஸ்தீனியர்களை ஏற்கவும் ஜோர்டான் மன்னர் 2ம் அப்துல்லா மறுப்பு தெரிவித்துள்ளார். அதோடு, ‛‛காசா விஷயத்தில் ஒன்றை மட்டும் தான் எங்களால் உடனடியாக செய்ய முடியும். காசாவில் தற்போது புற்றுநோய் உள்பட கடும் உடல்நல பிரச்சனைகளால் 2 ஆயிரம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எங்கள் நாட்டின் வைத்து சிகிச்சை வேண்டுமானால் கொடுக்க முடியும்'' என்று கூறியுள்ளார்.
ஜோர்டான் மன்னர் 2ம் அப்துல்லாவின் இந்த பதில் என்பது டொனால்ட் டிரம்ப்புக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் டொனால்ட் டிரம்ப் உடனான சந்திப்பு பற்றி ஜோர்டான் 2ம் அப்துல்லா தனது வலைதள பக்கத்தில் முக்கிய விஷயத்தை தெரிவித்துள்ளார்.
அதில், ‛‛பாலஸ்தீனத்தின் காசா மற்றும் மேற்கு கரையில் இருந்து பாலஸ்தீனியர்களை கட்டாயமாக இடமாற்றம் செய்வதை நாங்கள் விரும்பவில்லை. இதில் உறுதியாக இருக்கிறோம். இந்த விவகாரத்தில் அரபு நாடுகளின் ஒருங்கிணைப்பு தேவை. மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளை செய்ய தயாராக இருக்கிறோம். மேலும் காசாவில் இருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றாமல் அங்கு குடியிருப்புகளை கட்டமைக்க வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கமாக உள்ளது. '' என்று கூறியுள்ளார்.
பாலஸ்தீனியர்களை ஜோர்டான் ஏற்க மறுப்பதற்கு முக்கிய காரணங்களாக சில விஷயங்கள் உள்ளன. அதாவது பாலஸ்தீனத்தின் அண்டை நாடாக ஜோர்டான் உள்ளது. இதுவும் இஸ்லாமிய நாடு தான். தற்போது அங்கு 1.13 கோடி மக்கள் உள்ளனர். இதில் 30 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாலஸ்தீனியர்கள் தான் என்று கூறப்படுகிறது. 1948 ல் இஸ்ரேல் உருவானது. அன்று முதல் இஸ்ரேல் - பாலஸ்தீனம் பிரச்சனை உள்ளது.
இந்த பிரச்சனையில் இருந்து விடுபட பாலஸ்தீனியர்கள் ஜோர்டானுக்குள் அகதிகளாக நுழைந்தனர். இப்படியான சூழலில் இன்னும் காசாவில் இருந்து பாலஸ்தீனியர்களை அகதிகளாக ஏற்க ஜோர்டான் விரும்பவில்லை. அதோடு ஜோர்டானும் பணபலம் மிக்க நாடு இல்லை. ஜோர்டான் அமெரிக்காவின் உதவியை தான் பெரிதும் நம்பி உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்கா, ஜோர்டானுக்கு 750 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு பல்வேறு பொருளாதார உதவிகளை செய்து வருகிறது. அதோடு தனியாக 350 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ராணுவ உதவிகளையும் பெற்று வருகிறது. அமெரிக்காவை சார்ந்து ஜோர்டான் இயங்கி வருவதால் எளிதாக அந்த நாட்டை பணிய வைத்து காசாவில் இருந்து வெளியேற்றம் செய்யப்படுபவர்களை அங்கு குடியமர்த்த வைக்கலாம் என்று டொனால்ட் டிரம்ப் நினைத்தார். ஆனால் ஜோர்டான் மன்னர் 2ம் அப்துல்லா, டொனால்ட் டிரம்பின் கோரிக்கையை நிராகரித்துள்ளார். இது டொனால்ட் டிரம்ப்புக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications