நானே இந்தியாவின் ரசிகை தான்.. மோடியிடம் கேள்வி கேட்டதால் ட்ரோல்! போட்டோவோடு பெண் நிருபர் பதிலடி
வாஷிங்டன்: அமெரிக்க பத்திரிகையாளர் சந்திப்பில் பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பிய பெண் பத்திரிகையாளர் சப்ரினா சித்திக்கின் தந்தை, தாய் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் எனக்கூறி சிலர் கடுமையாக விமர்சனம் செய்கின்றனர். இந்நிலையில் தான் ‛நான் இந்தியாவின் ரசிகை' என பெருமையோடு போட்டோக்கள் வெளியிட்டு தன்னை ட்ரோல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றார். கடந்த வியாழக்கிழமை அமெரிக்க வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோபைடன் ஆகியோர் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
இந்த வேளையில் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு இருநாடுகளின் தலைவர்களும் பதிலளித்தனர். அப்போது பெண் பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்வி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த கேள்வியை சப்ரினா சித்திக் என்ற பெண் பத்திரிகையாளர் எழுப்பினார்.
அவர் பிரதமர் மோடியிடம்,‛‛இந்தியா என்பது உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இருக்கிறது. ஆனால் உங்கள் அரசு மத சிறுபான்மையினருக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாகவும், எதிர்கருத்து கூறுபவர்களை மவுனமாக்கும் செயல்களில் ஈடுபடுவதாகவும் பல மனித உரிமை குழுக்கள் கூறுகின்றன. இந்தியாவில் முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மை மக்களின் உரிமைகளை மேம்படுத்துவதற்கும், பேச்சுரிமையை நிலைநிறுத்துவதற்கும் அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?'' என கேட்டார்.
இதற்கு பிரதமர் மோடி, ‛இந்தியா ஜனநாயக நாடு. ஜனநாயகம் ஒவ்வொருவரின் டிஎன்ஏவிலும் உள்ள. ஜனநாயகத்தின் படியே வாழ்ந்து வருகிறோம். அதன்படியே அரசியலமைப்பு சட்டம் எழுதப்பட்டுள்ளது. எனவே சாதி, மதம் அல்லது மதத்தின் அடிப்படையில் பாகுபாடு என்ற கேள்விக்கு இடமில்லை'' என்றார். இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சப்ரினா சித்திக் என்பவர் வால்ஸ்டீரிட் பத்திரிகையாளராக வெள்ளை மாளிகை தொடர்பான செய்திகளை சேகரித்து வழங்குகிறார். இவரது தந்தை ஒருங்கிணைந்த இந்தியாவில் பிறந்தாலும் வளர்ந்தது பாகிஸ்தானில் தான். அதன்பிறகு பாகிஸ்தானை சேர்ந்தவரை திருமணம் செய்து அமெரிக்காவில் குடியேறினார். சப்ரினா சித்திக் அமெரிக்காவில் தான் பிறந்தார். இதனால் சப்ரினா சித்திக் உள்நோக்கத்துடன் கேள்வி கேட்டதாக சிலர் ட்விட்டரில் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.
குறிப்பாக அவரது தந்தை-தாய் ஆகியோர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள். இதனால் தான் முஸ்லிம்கள் பாதுகாப்பு தொடர்பாக அவர் பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்டுள்ளார் எனக்கூறி தொடர்ந்து விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த கமெண்ட்டுகளில் சப்ரினா சித்திக் மிகவும் வருத்தத்துக்கு உள்ளானார்.

மேலும் அவர் தன்னை ட்ரோல் செய்யும் நபர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வருத்தத்தோடு ட்விட்டரில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அந்த பதிவில் அவர் 2 போட்டோக்களை வெளியிட்டுள்ளது. முதல் போட்டோ சப்ரினா சித்திக் தனது தந்தையுடன் சேர்ந்து 2011 உலககோப்பை கிரிக்கெட் போட்டியை வீட்டில் இருந்து பார்க்கிறார். அதில் அவர் இந்திய அணியின் ஜெர்ஜியை அணிந்துள்ளார். 2வது போட்டோவில் 2015 உலக கோப்பை போட்டியில் இந்திய அணியின் ஜெர்ஜியை அணிந்து சப்ரினா சித்திக் உள்ளார். இதன்மூலம் தான் இந்தியாவின் ரசிகை என பெருமையாக மீண்டும் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த ட்விட்டர் பதிவில் தனது வருத்தத்தையும் அவர் வெளிப்படுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர், ‛‛சிலர் எனது பர்ஷனல் விஷயங்களை எடுத்து பேசி வருகின்றனர். அவர்களுக்கு ஒரு முழுமையாக போட்டோவை வழங்குவது மட்டுமே சரியானதாக இருக்கும். மேலும் சில நேரங்களில் நீங்கள் யார் என்பதை விட உங்களின் அடையாளங்களே முன்நிறுத்துவது சிக்கலான ஒன்றாகும்'' என தன்னை பாகிஸ்தானை சேர்ந்த பெற்றோரின் மகள் என விமர்சனம் செய்த விஷயத்தில் மனவருத்தத்தை பதிவு செய்துள்ளார். இதனை பார்த்த பலரும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications