வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கமலா ஹாரிஸ் முதல் சர்வதேச பயணம்.. திடீர் கோளாறால் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்.. என்ன நடந்தது

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் தனது முதல் சர்வதேச பயணமாக குவாத்தமாலாவுக்கு கிளம்பிய சிறிது நேரத்திலேயே அவரது விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகத் தனி விமானம் மீண்டும் வாஷிங்டனில் தரையிறக்கப்பட்டது.

அமெரிக்காவின் துணை அதிபராக உள்ளவர் கமலா ஹாரிஸ் அந்நாட்டின் முதல் பெண் துணை அதிபர் என்ற சிறப்பை பெற்றுள்ளவர்.

இவர் நேற்று தனது முதல் சர்வதேச அரசு பயணமாக மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான குவாத்தமாலாவுக்கு அமெரிக்க விமானப் படைக்குச் சொந்தமான தனி விமானம் மூலம் புறப்பட்டார்.

Kamala Harriss Flight Forced To Land Soon After Take-Off

புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ராணுவ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை விமானிகள் கண்டறிந்தனர். இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் மீண்டும் வாஷிங்டன் விமானப்படைத் தளத்தில் தரையிறக்கப்பட்டது.

 ஆசிய வம்சாவழியினர் மீது வெறுப்புணர்வு காட்டாதீங்க.. அமெரிக்கர்களிடம் கமலா ஹாரிஸ் உருக்கம் ஆசிய வம்சாவழியினர் மீது வெறுப்புணர்வு காட்டாதீங்க.. அமெரிக்கர்களிடம் கமலா ஹாரிஸ் உருக்கம்

இதையடுத்து சுமார் 1.5 மணி நேரத்திற்குப் பிறகு, மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் கவுத்தமாலா புறப்பட்டுச் சென்றார். தான் நலமாக இருப்பதாகவும் சிறு பிரார்த்தனை மட்டும் செய்ததாகவும் கமலா ஹாரிஸ் தெரிவித்தார்.

Kamala Harriss Flight Forced To Land Soon After Take-Off

கமலா ஹாரிஸின் விமானத்தில் ஏற்பட்டது மிகச் சிறிய தொழில்நுட்ப கோளாறு தான் என்றும் இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே விமானம் மீண்டும் தரையிறக்கப்பட்டதாகவும் கமலா ஹாரிஸ் செய்தித் தொடர்பாளர் சிமோன் சாண்டர்ஸ் குறிப்பிட்டார்.

தனது முதல் சர்வதேச பயணத்தில் குவாத்மாலா மற்றும் மெக்சிகோ நாடுகளுக்குச் செல்லும் கமலா ஹாரிஸ் சட்ட விரோத குடியேற்றத்திலுள்ள ஆபத்துகள் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து மக்களிடையே உரையாற்றவுள்ளார்.

English summary
Kamala Harris first international trip interrupted by a technical glitch
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X