7 மணி நேரம் முடங்கிய பேஸ்புக்.. மன்னிச்சுடுங்க.. வருத்தப்பட்ட நம்ம குட் "மார்க்" ஸக்கர்பெர்க்!
வாஷிங்டன்: பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் முடங்கியதற்கு பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஸக்கர்பெர்க் மன்னிப்பு கோரியுள்ளார்.
Recommended Video
இளைய தலைமுறையினர் முதல் பெரியவர்கள் வரை பொழுதுப்போக்கு அம்சமாக கருதுவது பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் ஆப், இன்ஸ்டா உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களைத்தான்.
இவை இல்லாமல் ஒரு நாளும் பொழுது விடியாது, பொழுது போகாது. வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே இவை மாறிவிட்டன. இவை பொழுதுப்போக்கிற்கு சிலர் பயன்படுத்தினாலும் பெரும்பாலானோர் பயனுள்ளபடியே பயன்படுத்தி வருகிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

சினிமா பிரபலங்கள்
அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் மக்களுடனும் ரசிகர்களுடனும் இணைய இந்த சமூகவலைதளங்கள் ஒரு பாலமாக இருக்கின்றன. இவற்றின் மூலம் தாங்கள் பேச நினைப்பதை உடனடியாக பதிவாக வெளியிட்டு நொடி பொழுதில் அந்த கருத்து லட்சக்கணக்கானோரை சென்றடைய செய்கிறார்கள்.

இன்ஸ்டா
போன் இல்லாமல் இருக்க முடியாது என்ற காலம் போய் இது போன்ற சமூகவலைதள அக்கவுண்ட்கள் இல்லாதவர்கள் விரல் விட்டு எண்ணிவிடலாம். உலக அளவில் இந்தியாவில் தான் பேஸ்புக் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் பேஸ்புக், இன்ஸ்டா, வாட்ஸ் ஆப், ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்கள் முடங்கின.

தொழில்நுட்பக் கோளாறு
இது பயனாளிகளை அதிர்ச்சிக்குள்ளாகியது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த தடங்கல் ஏற்பட்டதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்திருந்தது. சுமார் 6 மணி நேரத்திற்கு பின்னர் இந்த சமூகவலைதள பக்கங்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு வந்தன. இந்த 6 மணி நேர முடக்கத்தால் பேஸ்புக்கிற்கு 6 பில்லியன் டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ 50 ஆயிரம் கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளது.

பங்கு சந்தை வீழ்ச்சி
பங்கு சந்தையிலும் வீழ்ச்சி ஏற்பட்டதால் பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஸக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பும் 140 பில்லியன் டாலரிலிருந்து 121.6 டாலருக்கு சரிந்துவிட்டது. மக்களின் சிரமத்திற்கு மார்க் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில் வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மெசன்ஜர் செயலிகள் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளன.

சேவை
உங்களுக்கு பிடித்தமானவர்கள், அக்கறை கொண்டவர்களை தொடர்பு கொள்ள எங்கள் சேவையை எந்த அளவுக்கு நம்பியுள்ளீர்கள் என தெரியும். இடையூறுக்கு மன்னிக்கவும் என குறிப்பிட்டுள்ளார். அது போல் பேஸ்புக் தலைமை தொழில்நுட்ப அதிகாரி மைக் ஷ்ரோப்ஃபர் தடங்கலுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

ஒரு மணி நேரத்தில்
கடந்த 2019ஆம் ஆண்டும் பேஸ்புக் சேவை முடங்கியது. ஆயினும் ஒரு மணி நேரத்தில் சரி செய்யப்பட்டுவிட்டது. நேற்று ஏற்பட்டது மிகப் பெரிய சேவை பாதிப்பு என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் 6 மணி நேர முடக்கத்திற்கு பின்னர் இவை மீண்டும் மக்கள் மகிழ்ச்சியாக சமூகவலைதளங்களில் மூழ்க தொடங்கினார்கள்.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications