அமெரிக்க பள்ளியில் 15 வயது மாணவர் நடத்திய துப்பாக்கிச் சூடு.. 3 பேர் பலி, பலர் படுகாயம்.. பரபர தகவல்
வாஷிங்டன்: அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 15 வயது மாணவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 மாணவர்கள் கொல்லப்பட்டனர். மேலும், 8 பேர் படுகாயமடைந்தனர்.
அமெரிக்காவின் மிச்சினக் மாகாணத்தில் ஆக்ஸ்போர்ட் என்ற நகர் உள்ளது. அங்குள்ள உயர்நிலைப் பள்ளியில் இன்று மிக மோசமான ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் அதிகரித்துள்ளதால், அதற்கான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், இது போன்ற சம்பவம் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளியில் துப்பாக்கிச்சூடு
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள ஆக்ஸ்போர்ட் நகரில் உள்ள உயர்நிலைப் பள்ளி ஒன்றில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இன்றைய தினம் பள்ளிக்கு வந்த 15 வயதான சிறுவன், திடீரென தான் மறைத்து வைத்திருந்த செமி ஆட்டோமெட்டிக் துப்பாக்கியை வெளியே எடுத்துச் சுற்றியுள்ளவர்களை நோக்கிச் சுடத் தொடங்கினார். இந்த கொடூரத் துப்பாக்கிச் சூட்டில் 3 மாணவர்கள் கொல்லப்பட்டனர். "இது 'துக்ககரமான, வெட்கக்கேடானது மற்றும் முற்றிலும் நியாயமற்றது'.. நாடாளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் இல்லாமல், தெருக்களில் இருப்பவர்கள் சட்டங்களை இயற்ற ஆரம்பித்துவிட்டார்கள் என்றால், இதுவும் ஜிஹாதி தேசம்தான். இப்படி விரும்பிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டிருந்தார்... இதனால், கங்கனா மீது சீக்கிய அமைப்பினர் போலீசில் புகார் தந்த நிகழ்வும் உண்டு.

3 பேர் பலி
அமெரிக்காவில் துப்பாக்கி வாங்க பெரிய கட்டுப்பாடுகள் இல்லை என்பதால், இதுபோல பொது இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடப்பது வழக்கமான ஒரு நிகழ்வாக மாறிவிட்டது துயரமான செய்தியாகும். இருப்பினும், இந்த ஆண்டு அமெரிக்கப் பள்ளி வளாகங்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களிலேயே இது தான் மிக மோசமானதாகும். இந்த சம்பவத்தில் 3 மாணவர்கள் கொல்லப்பட்டது மட்டுமின்றி, ஒரு ஆசிரியர் உட்பட 8 பேர் படுகாயமடைந்தனர்.

போலீசார் விசாரணை
ஆக்ஸ்ஃபோர்ட் உயர்நிலைப் பள்ளியில் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தபோது, மதியம் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளதாக ஓக்லாண்ட் கவுண்டி ஷெரிப் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதில் 16 வயது சிறுவன் ஒருவர் மற்றும் 14 மற்றும் 17 வயதான சிறுமிகள் கொல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தகவல் அறிந்து வந்த போலீசாரிடம் மாணவன் சரணடைந்தான். அவரிடம் இருந்து துப்பாக்கி பறிமுதல் செய்த போலீசார், சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

என்ன காரணம்
இந்தத் துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் குறித்துத் தெரியவில்லை. இருப்பினும், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த போது, அந்த மாணவன் அமைதியாகச் சரணடைந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதில் கொல்லப்பட்ட 3 பேரும் அதே பள்ளியில் படித்து வந்த மாணவர்கள் என்றே தெரிகிறது. காயமடைந்தவர்களில் 6 பேர் உடல்நலை சீராக உள்ளது. இருவருக்கு மட்டும் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு
மாணவர் பயன்படுத்தியது செமி ஆட்டோமெட்டிக் துப்பாக்கி என்பதால் வெறும் 5 நிமிடத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட குண்டுகளை அச்சிறுவன் சுட்டுள்ளான். பள்ளி வளாகத்தில் நடந்த இந்தத் துப்பாக்கிச் சூடு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது கொல்லப்பட்ட அந்த 3 போரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலா அல்லது எதர்ச்சியைாக அவர்கள் கொல்லப்பட்டனரா என்பது குறித்துத் தெளிவான தகவல்கள் இல்லை. இது குறித்ததும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைவர்கள் இரங்கல்
இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அமெரிக்க அதிபர் பைடன், மிச்சிகன் ஆளுநர் கிரெட்சென் விட்மர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அமெரிக்கப் பள்ளி வளாகத்தில் மாணவர் ஒருவரே துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications