லாட்டரியில் 3 கோடி பரிசு கிடைச்சுது.. அதுக்கு பிறகு என் சந்தோஷமே போச்சு.. புலம்பும் கோடீஸ்வரர்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: கொடுக்கிற தெய்வம் கொட்டி கொடுக்கும் என்பது போல ஒரே நாளில் லாட்டரியில் பரிசு அடித்து பல கோடிகளுக்கு அதிபதியான அதிர்ஷ்டசாலி நபர், ஒருவர் லாட்டரியில் பணம் கிடைத்த பிறகுதான் தனது நிம்மதியே போயிவிட்டதாக தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருக்கிறார். இணையத்தில் நெட்டிசன் கள் மத்தியில் அவரது பதிவு வேமகாக பரவி வருகிறது.

சூர்ய வம்சம் சரத்குமார் மாதிரி ஒரே பாட்டில் கோடீஸ்வரர் ஆவதெல்லாம் லாட்டரியில் பரிசு அடித்தால்தான் உண்டு என பலரும் பகல் கனவு கண்டு கொண்டிருப்பார்கள். லாட்டரியால் பரிசு அடித்தவர்களை விட பெரும் பொருளாதர இழப்பை சந்தித்தவர்களே அதிகம் என்பது மறுக்க முடியாத உண்மை.

lottery usa weird

இதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும்.. லாட்டரியில் பரிசு அடித்தாலே போதும் லைஃப்பில் செட்டில் ஆகிவிடலாம்... வாழ்நாளில் பட்ட கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்து போயிடும் என பலரும் நினைத்துக் கொண்டிருக்க ரெட்டிட் சமூக வலைத்தளத்தில், நெட்டிசன் ஒருவர் லாட்டரியில் ரூபாய் 3 கோடி பரிசு அடித்த பின்னர் தனது நிம்மதி எல்லாம் போயிவிட்டதாக பதிவிட்டு இருக்கிறார். நெட்டிசன்கள் மத்தியில் அவரது பதிவு விவாதப் பொருளாகியுள்ளது.

லாட்டரியில் 3.20 கோடி ரூபா பரிசுத்தொகை வென்ற அந்த நபர் தனது பெயரை வெளியிடாமல், சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:- கார்ப்ரேட் நிறுவனத்தில் எக்ஸ்கியூட்டி உதவியாளராக பணி செய்து வரும் எனக்கு இவ்வளவு தொகை கிடைத்தது. பணப்பிரச்சினையை தீர்த்து வைத்தது. பணத்திற்காக யாரையும் சார்ந்து இருக்காமல் சுதந்திரமாக இருக்க முடிகிறது.

அதேவேளையில் நான் தனிமைப்படுத்தப்பட்டது ஆகிவிட்டேன். ஏனெனில் நான் யார் மீதெல்லாம் அன்பு வைத்து இருந்தேனோ அவர்களை எல்லாம் நம்ப முடியாத நிலைக்கு வந்துவிட்டது. எனது நண்பர்கள், குடும்பத்தினருக்கு நான் பணம் கொடுத்து உதவாததால், யாருமே தற்போது இல்லை. எனது பிறந்த நாளை கொண்டாட தயாராக இல்லை. ஆனால் என்னிடம் மிகவும் மகிழ்ச்சியாக வந்து பணம் கேட்கிறார்கள்.

அவர்களுடைய பணம் போல உரிமை கொண்டாடி கேட்கிறார்கள். லாட்டரியில் பணம் அடித்த பிறகு தன்னம்பிக்கையும் குறைந்துவிட்டது. பாக்சிங் மற்றும் சுற்றுலா என போன்றவற்றில் ஈடுபட்டு பொழுதை கழிக்க நினைத்தாலும் அதுவும் வெற்றி அடைய வில்லை. பணத்தை செலவு செய்ய எனக்கு பிடிக்காது என்பதால் இதற்காக பணம் செலவு செய்யவும் எனக்கு விருப்பம் இல்லை.

அதே வேளையில், சுயநலம் மிக்க நண்பர்கள், குடும்பத்தினர் என்னை விட்டு பிரிந்தததில் எனக்கு மகிழ்ச்சிதான் என்றும், லாட்டரியில் கிடைத்த உண்மையான பரிசுத்தொகையை நான் யாரிடமும் சொல்லவில்லை என்றும் கூறியிருக்கிறார். ஆண்டுக்கு ரூ.3.76 கோடியில் இருந்து 4.30 கோடி வரை லாட்டரியில் தனக்கு கிடைக்கும் என்றும் கூறியிருக்கிறார்.

தற்போது கிடைத்த பரிசுத்தொகை மூலமாக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் 7.52 கோடிக்கு வீடு ஒன்றை வாங்கியிருக்கிறாராம் அந்த அமெரிக்க நபர். அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் லாட்டரி விற்பனைக்கு அனுமதி இருக்கிறது. பெட்டிக்கடை முதல் சூப்பர் மார்க்கெட் வரை பல இடங்களிலும் அங்கு லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும்.

இப்படியான ஒரு லாட்டரியை வாங்க்கித்தான் இந்த நபர் கோடிகளில் பணத்தை வென்று இருக்கிறார் என அவரது பதிவுக்கு கீழே பலரும் கமெண்ட் போட்டு வருகிறார்கள். அதேவேளையில், இன்னமும் தனது வேலையை கைவிடாமல் அதையும் செய்து வருகிறாராம் அந்த அதிர்ஷ்டசாலி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+