Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மனித மண்டை ஓடு மாதிரி செவ்வாய் கிரகத்தில் கிடந்த மர்ம பொருள்! எப்படி வந்தது? விஞ்ஞானிகள் தீவிர ஆய்வு

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: சூரிய குடும்பத்தில் பூமிக்கு அடுத்ததாக அதாவது, 4-வது கோளாக இருக்கும் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ சாத்தியக் கூறுகள் உள்ளதா? என விஞ்ஞானிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டுள்ள நிலையில், செவ்வாயின் மேற்பரப்பில் மர்மமான பாறை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. மண்டை ஓடு போல காட்சியளிப்பதால் அது என்னவாக இருக்கும் என்ற திகைப்பில் விஞ்ஞானிகள் தீவிர ஆய்வில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

பூமியை போலவே வேறு கிரகத்திலும் உயிர்கள் வாழ சாத்தியம் உள்ளதா என்ற ஆய்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதில் குறிப்பாக செவ்வாய் கிரகத்தின் மீது விஞ்ஞானிகள் கவனம் உள்ளது. நிலவுக்கு அடுத்தபடியாக செவ்வாய் கிரகத்தில்தான் தீவிர ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் இந்த ஆய்வில் முன்னணி வகிக்கின்றன.

nasas-mars-rover-pictured-mysterious-skull-shaped-rock-on-the-red-planet


செவ்வாய் கிரக மேற்பரப்பு

சூரிய குடும்பத்தில் பூமியை தவிர பிற கோள்கள் என எடுத்துக்கொண்டால் செவ்வாய் கிரகம் தான் மனிதன் வாழ்வதற்கு உகந்த இடமாக இருக்கலாம் என்றும், அதனால் மனித குடியேற்றம் அடுத்து செவ்வாய் கிரகத்தில் தான் அமையும் என்பது விஞ்ஞானிகளின் வாதமாக உள்ளது. பூமியில் இருந்து சுமார் 22 கோடி கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இந்த கிரகத்தில் என்னதான் இருக்கிறது என்பதை கண்டறிந்து மர்மத்தை அவிழ்க்க தீவிர ஆய்வில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக இந்த ஆய்வில் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் முன்னணியில் உள்ளது. நாசா செவ்வாய் கிரகத்திற்கு ரோவர் ஒன்றை அனுப்பியுள்ளது. இந்த ரோவர் செவ்வாய் கிரகத்தில் பல்வேறு ஆய்வுகளை மேற்கோண்டு வருகிறது. செவ்வாய் கிரகத்தில் மேற்பரப்பில் உள்ளவற்றை படம் பிடித்தும் அனுப்புகிறது. இவற்றை வைத்து விஞ்ஞானிகள் தீவிர ஆய்வினை மேற்கொண்டு வருகிறார்கள்.


மனித மண்டை ஓடு வடிவில் பாறை

இந்த நிலையில், தான் நாசாவின் ரோவர் அனுப்பிய படம் ஒன்று விஞ்ஞானிகளை திகைக்க வைத்துள்ளது. அதாவது, செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் மர்மமான பொருள் ஒன்று தென்படுகிறது. மனித மண்டை ஓடு வடிவிலான ஒரு பாறை ஒன்று கிடப்பதை கண்டு விஞ்ஞானிகள் வியந்து போயுள்ளனர். இந்த பாறை எப்படி உருவானது என்பது யூகிக்க முடியாத அளவு உள்ளது. மர்மமான இந்த பாறையை நாசா விஞ்ஞானிகள் "Skull Hill" என்று அழைக்கிறார்கள்.

கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி பெர்சவெரன்ஸ் ரோவர் இதை கண்டறிந்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் உள்ள ஜெசீரோ கிரேட்டர் ரிம் என்ற இடத்தில் மாஸ்ட்கேம் Z இண்ஸ்ட்ரூமெண்ட் மூலம் கண்டறிந்துள்ளது. ஸ்கல் பாறையை தவிர்த்து பிற இடங்களில் சிவப்பு நிறத்திலான பாறைகள், தூசுகளாக உள்ளன. ஆனால், இந்த ஸ்கல் மட்டும் கருப்பு நிறத்தில் தென்படுகிறது. கொஞ்சம் வளைவானதாகவும் உள்ளது.

nasas-mars-rover-pictured-mysterious-skull-shaped-rock-on-the-red-planet


எப்படி இங்கு வந்தது?

பாறையில் சிறிய அளவு மட்டுமே வெளியே தெரிகிறது. எனவே, இந்த பாறை எப்படி தோன்றியது என்பது மர்மமாக உள்ளது. அரிப்பு காரணமாக Skull Hill வெளியே தெரிந்து இருக்கலாம் என்று நாசா விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். அல்லாது ஏதாவது ஒரு பொருள் விழுந்ததின் தாக்கமாக இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள். தற்போது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கும் ஸ்கல் ஹில்ஸின் நிறமானது, இதற்கு முன்பு ரோவரால் காலே பள்ளத்தாக்கில் கண்டுபிடிக்கப்பட்ட விண்கல்லை நினைவூட்டுவதாக விஞ்ஞானிகள் கூறினர்.

இந்த பாறை எங்கிருந்து வந்தது என்பதை புரிந்து கொள்வதற்காக விஞ்ஞானிகள் பணியாற்றி வருவதாகவும் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் விரைவில் மனித குடியேற்றம் சாத்தியம் என்று உலக பெரும் பணக்காரர் எலான் மஸ்க்கும் கூறி வரும் நிலையில், தற்போது செவ்வாய் கிரகத்தில் காணப்படும் பல விசித்திரங்கள் விஞ்ஞானிகள் கோள்களின் தன்மையை கண்டறிய உதவும் என்பதை மறுப்பதற்கு இல்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+