"எப்புட்றா.!" அழுக்கு பேண்ட், கிழிந்த சட்டை! பாவமாக சுற்றும் உலக கோடீஸ்வரர்கள்! வேற லெவல் AI.. வாவ்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: இப்போது செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ கருவிகள் ஒவ்வொரு நேரத்தில் அடுத்த கட்டத்திற்குப் பாய்ந்து வருகிறது. இதனிடையே ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட பெரும் பணக்காரர்களின் படங்கள் இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

இப்போது தொழில்நுட்பத்தில் நடந்து கொண்டிருக்கும் மிகப் பெரிய பாய்ச்சல் என்றால் சந்தேகமே இல்லாமல் அது ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைச் சொல்லலாம்.

அதிலும் குறிப்பாக இந்த சாட் ஜிபிடி ஏஐக்கான தரத்தை அடுத்த லெவலுக்கு எடுத்துச் சென்றுவிட்டது. சாட் ஜிபிடி நாம் பார்க்கும் முதல் ஏஐ கருவி இல்லை என்ற போதிலும், இதுவரை நாம் பார்த்ததிலேயே மிகவும் வலிமையான ஒரு ஏஐ கருவியாக இந்த சாட் ஜிபிடி தான் இருக்கிறது.

Netizens are amazed to see AI generated Images of world billionaires being poor

சாட் ஜிபிடி: இந்த சாட் ஜிபிடி நாம் கேள்வி கேட்டாலும் மிகவும் துல்லியமான பதிலைச் சொல்லும்... அதுவும் சில நொடிகளில். அந்தளவுக்கு மிகவும் பவர்புல்லான ஒரு ஏஐ கருவியாகவே சாட் ஜிபிடி இருந்து வருகிறது. கேள்வி மட்டுமில்லை, எதாவது காமெடி கேட்டால் காமெடி சொல்லும். கவிதை எழுதித் தரும்.. எவ்வளவு ஏன் காதல் கடிதத்தைக் கூட அற்புதமாக எழுதித் தரும். அந்தளவுக்கு மிகவும் பவர்புல்லாக இருந்தது.

சாட் ஜிபிடியின் வருகை ஏஐ துறைக்கு மிகப் பெரிய பூஸ்டை கொடுத்துள்ளது. அதன் பின்னர் பல்வேறு ஐஏ கருவிகளும் உலகத்தைக் கலக்கி வருகிறது. இந்த ஏஐ கருவிகள் சந்தேகத்திற்கு இடமின்றி இணையத்தில் மிகவும் விவாதிக்கப்படும் ஒன்றாக மாறியுள்ளது. ஏஐ பயன்பாடு என்பது நிச்சயம் மிகப் பெரியளவில் வேலையிழப்பிற்குக் காரணமாக அமையும் என்றே ஆய்வாளர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

Netizens are amazed to see AI generated Images of world billionaires being poor

பரவும் படங்கள்: இப்படி சீரியஸான விவாதம் ஒரு பக்கம் நடக்கும் அதேநேரம் இவற்றைப் பயன்படுத்திப் பல வேடிக்கையான செயல்களும் நடந்தே வருகிறது. இவையும் இணையத்தில் டிரெண்டாகியே வருகிறது. அப்படித்தான் இணையத்தில் ஒருவர் ஏஐ கருவியைப் பயன்படுத்தி உருவாக்கியுள்ள போட்டோக்களை பகிர்ந்துள்ளார்.

இதை அவர் இணையத்தில் பதிவிட்ட மறுநொடியை இணையம் முழுக்க இதுவே பேச்சாக இருக்கிறது. மிட்ஜோனி என்ற ஏஐ கருவியைப் பயன்படுத்தி கோகுல் பிள்ளை என்பவர் மிகப் பெரிய செல்வந்தர்கள் வறுமையில் இருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையாக உருவாக்கியுள்ளார். இதில் டிரம்ப் முதல் எலான் மஸ்க் வரை உலகின் டாப் பெரும் பணக்காரர்கள் அனைவரும் இடம்பெற்றுள்ளனர்.

அதேபோல இந்தியாவின் டாப் பணக்காரர் முகேஷ் அம்பானியும் கூட இதில் இடம்பெற்றுள்ளார். இந்த அனைத்து பெரும் பணக்காரர்களும் குடிசை பகுதியில் இருப்பதைப் போன்ற படங்களை ஏஐ கருவி உருவாக்கியுள்ளது.

Netizens are amazed to see AI generated Images of world billionaires being poor

பெரும் கோடீஸ்வரர்கள்: "ஸ்லம்டாக் மில்லியனர்கள்" என்ற தலைப்பில் அவர் இதை அவர் பதிவிட்டு, வேறு யாரையாவது மிஸ் செய்துவிட்டேனா என்றும் கேட்டுப் பதிவிட்டுள்ளார். இதில் முதலில் இருப்பதே டிரம்ப் தான். சற்று பருமனாக இருக்கும் டிரம்ப், இதில் வெறும் பனியனை போட்டுக் கொண்டு, மெலிந்து இருக்கிறார். அடுத்து பில் கேட்ஸ் சட்டை கூட போடாமல், மிகவும் பாவம் போல போஸ் கொடுத்துள்ளார். எப்போதும் இணையத்தில் பரபரப்பைக் கிளப்பும் எலான் மஸ்க், இதில் அழுக்கு சட்டையுடன் இருந்தாலும் கூட சற்று ஸ்டைலாகவே இருக்கிறார்.

இது மட்டுமின்றி முகாஷ் அம்பானி, மார்க் ஜூக்கர்பெர்க் (பேஸ்புக் நிறுவனர்), வாரன் பபெட் (முதலீட்டாளர்), அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் (அமேசான் நிறுவனர்) ஆகியோரின் படங்களும் இதில் உள்ளது. இந்தப் படங்கள் தான் இணையத்தில் இப்போது தீயாகப் பரவி வருகிறது. இது பார்க்க அப்படியே உண்மை போலவே இருப்பதாகவே பலரும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

அதேநேரம் சிலர் எச்சரிக்கை செய்யவும் தவறவில்லை.. ஒருவர் குறித்த தவறான தகவல்களைப் பரப்ப மிட்ஜெனியை பயன்படுத்தினால் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தவே செய்யும்... இது அச்சத்தையே தருவதாகப் பதிவிட்டுள்ளனர்.'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+