ரகசிய விசிட் அடித்த ஏலியன்களால் கர்ப்பமான பெண்கள்.. அமெரிக்க புலனாய்வு துறை ஆவணங்களால் பரபரப்பு
வாஷிங்டன்: UFOs என்று குறிப்பிடப்படும் ஏலியன்கள் குறித்து அமெரிக்கப் புலனாய்வுத் துறை சேகரித்து வைத்துள்ள தகவல்களின் ஆவணங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த பிரபஞ்சத்தில் நமது பூமியைப் போலவே பல்வேறு கிரகங்களில் மனிதர்கள் வாழும் சூழல் இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர். உலகெங்கும் இது தொடர்பான ஆய்வுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
UFOs (unidentified flying object) எனப்படும் பறக்கும் தட்டுகள் குறித்து தகவல்களை அமெரிக்கப் புலனாய்வு அதிகாரிகள் நீண்ட காலமாகவே சேகரித்து வருகின்றனர்.

அமெரிக்கப் புலனாய்வுத் துறை
இந்நிலையில், UFOs என்று குறிப்பிடப்படும் ஏலியன்கள் குறித்த அமெரிக்கப் புலனாய்வுத் துறையின் சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் பல சாட்சிகள் அளித்த தகவலின்படி பல UFOs மனிதர்களுடன் உடலுறவு கொண்டதாக அமெரிக்கப் புலனாய்வுத் துறை ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த ஏலியன் மூலம் பெண் ஒருவர் கர்ப்பமாகி உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பென்டகன் ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தி சன் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏலியன்கள்
தகவல் அறியும் உரிமைக் கோரிக்கையின் கீழ் இந்தத் தகவல்கள் பெறப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 'Anomalous Acute and Subacute Field Effects on Human and Biological Tissues'என்று தலைப்பிடப்பட்ட ஆவணத்தில் இவை குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணில் இருந்து வரும் மர்மப் பொருட்கள் அல்லது ஏலியன் போன்ற அமைப்புகளால் மனிதர்களின் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதில் விவரிக்கப்பட்டுள்ளது.

பிரச்சினைகள்
கடத்தல், கர்ப்பம், பாலியல் சம்பவங்கள், டெலிபதி, மற்றும் டெலிபோர்ட்டேஷன் போன்ற வினோதமான நிகழ்வுகள் குறித்தும் அதில் கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற ஏலியன்களுக்கும் மனிதர்களுக்கும் இடையே மொத்தம் ஐந்து பாலியல் சந்திப்புகள் இதில் பதிவாகி உள்ளது. ஏலியன்களை சந்திக்கும் மனிதர்களுக்குக் காயம் ஏற்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், மனிதர்களுக்குக் கதிர்வீச்சு பாதிப்பு, மூளை பிரச்சினைகள், நரம்பு பிரச்சினை ஆகியவையும் ஏற்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க நலன்கள்
இதுபோன்ற ஏலியன்கள் அமெரிக்க நலன்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. வான்வழியில் இது போன்ற பறக்கும் தட்டுகளை அருகில் சந்திக்கும் போது மனிதர்கள் காயமடைவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்களில் பெரும்பாலும் மின்காந்த கதிர்வீச்சுடன் தொடர்புடைய காயங்களே ஏற்படுகிறது. கதிர்வீச்சினால் ஏற்படும் வெப்பம் மற்றும் தீக்காயங்கள், மூளையில் ஏற்படும் பாதிப்பு மற்றும் நரம்புகளைப் பாதிக்கும் திறன் ஆகியவை அதிகம் ஏற்படுகிறது.

பென்டகன்
பென்டகனின் ரகசிய பறக்கும் தட்டுகள் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இந்த 1500 பக்க டிஐஏ ஆவணங்களின் மற்றொரு பகுதிகளில் பேய்களுடன் சந்திப்புகள் என்பதை விவரிக்கும் பகுதிகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதில் பேய்கள் உள்ளிட்ட அமானுஷ்ய சக்திகள் உடனான சந்திப்புகள் குறித்தும் அதில் விளக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications