"நித்தியானந்தா ஏமாற்றிவிட்டார்!" கைலாசா உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்த அமெரிக்காவின் நியூயார்க் நகரம்
கைலாசா விவகாரத்தில் அமெரிக்க நகரம் முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது.
வாஷிங்டன்: இந்தியாவில் இருந்து தப்பியோடிய சாமியார் நித்தியானந்தா இப்போது மீண்டும் பேசுபொருளாகியுள்ளார். இதற்கிடையே அமெரிக்காவின் நியூயார்க் நகரம் கைலாசாவுடன் போட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு காலத்தில் அதிக பக்தர்களுடன் பிரபல சாமியாராக இருந்தவர் நித்தியானந்தா.. கர்நாடகாவில் பிடதியில் ஆசிரமம் நடத்தி வந்த இவர், ஒரு கட்டத்தில் பல்வேறு பாலியல் புகார்களில் சிக்கினார். இதனால் சில காலம் இவர் சிறையிலும் இருந்திருந்தார்.
இதையடுத்து சில மாதங்கள் தலைமறைவாக இருந்த நித்தியானந்தா, வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. சில காலமாகவே அவர் எங்கு இருக்கிறார் என்றே உறுதியாக தெரியவில்லை. ஆன்மீக வீடியோக்களை மட்டுமே அவர் வெளியிட்டு வந்தார்.

கைலாசா
இதற்கிடையே சில காலத்திற்கு முன்பு, அவர் திடீரென கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கியுள்ளதாக அறிவித்தார். இது இந்துக்களுக்கான நாடாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், தனது புதிய நாட்டிற்கு தனிக்கொடி, நாணயம் உள்ளிட்டவற்றை வெளியிட்டார். இப்படி சர்வதேச அளவில் இது பெரும் பரபரப்பை கிளப்பிய போதிலும், அந்த கைலாசா எங்கே இருக்கிறது என்பது குறித்து இதுவரை யாருக்குமே தெளிவாக தெரியவில்லை. இந்தச் சூழலில் கைலாசா பிரதிநிதி என்று கூறி பெண் ஒருவர் ஐநா மாநாட்டில் கலந்து கொண்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அமெரிக்க நகரத்துடன் ஒப்பந்தம்
இதனால் மீண்டும் இப்போது கைலாசாவும் நித்தியானந்தாவும் பேசுபொருளாகியுள்ளது. முன்னதாக சில மாதங்களுக்கு முன்பு, அமெரிக்காவின் நியூயார்க் நகரம் (Newark city) கைலாசா நாட்டுடன் சிஸ்டர் சிட்டி ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தனர். இது கைலாசாவுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் என்று நித்தியானந்தா ஆதரவாளர்கள் கூறி வந்தனர். இந்தச் சூழலில் அமெரிக்காவில் இருக்கும் நியூயார்க் நகரம் கைலாசாவுடன் போட்டிருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இத்தகவலை நியூயார்க் ஊடகத்துறை செயலாளர் சூசன் கரோஃபாலோ உறுதி செய்துள்ளார்.

ஒப்பந்தம் ரத்து
இது தொடர்பாக சூசன் கரோஃபாலோ மேலும் கூறுகையில், "கைலாசா குறித்து நாங்கள் அறிந்தவுடன், நியூயார்க் கவுன்சில் உடனடியாக நடவடிக்கை எடுத்தது. ஜனவரி மாதம் போடப்பட்ட சிஸ்டர் சிட்டி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது" என்றார். நியூயார்க் நகர கவுன்சில் இப்படியொரு தெளிவான விளக்கத்தை கொடுத்துவிட்ட போதிலும், அமெரிக்காவே கைலாசாவுக்கு அங்கீகாரம் கொடுத்துவிட்டதை போல பொய்யான தகவல்களை நித்தியானந்தா ஆதரவாளர்கள் இணையத்தில் தொடர்ந்து பரப்பி வருகின்றனர்.

போலி தகவல்
சொல்லப்போனால், கடந்த ஜன. மாதம் நியூயார்க் நகரத்திற்கும் கைலாசாவுக்கும் இடையேதான் தான் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் நியூயார்க் மேயர் பராக்கா கலந்து கொண்டார். இருப்பினும், அமெரிக்காவே தங்களுக்கு அங்கீகாரம் கொடுத்ததை போலவே நித்தியானந்தா ஆதரவாளர்கள் இணையத்தில் செய்திகளை பரப்பி வந்தனர். சர்ச்சையில் சிக்கியுள்ள இதுபோன்ற நகரத்துடன் சிஸ்டர் சிட்டி ஒப்பந்தங்களை மேற்கொள்ள முடியாது என்று நியூயார்க் கவுன்சில் உறுப்பினர் லூயிஸ் குயின்டானா தெரிவித்தார்.

எப்படி
அமெரிக்காவின் உள்ளூர் அமைப்புகளுக்கு சர்வதேச அளவிலான தொடர்புகள் இருக்காது. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, ஒரு குழுவால் தங்கள் உண்மையான நாடு என்று காட்டி ஒப்பந்ததை எப்படி எளிதாக ஏற்படுத்த முடிகிறது என்பதையே இந்தச் சம்பவம் விளக்குகிறது.. கைலாசா ஒரு அங்கீகரிக்கப்பட்ட நாடு என்ற இமேஜை உருவாக்கவே நித்தியானந்தா ஆதராவளர்கள் தொடர்ந்து முயன்று வருகின்றனர். இந்தச் சூழலில் தான் நியூயார்க் நகர் கவுன்சிலும் அதன் ஒப்பந்ததை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

எங்கே கைலாசா
நித்தியானந்தா உருவாக்கியுள்ள இந்த நாடு எங்கே இருக்கிறது என்று யாருக்கும் இதுவரை தெளிவாக தெரியவில்லை.. இது நாடு ஈக்வடார் அருகே உள்ள தீவு ஒன்றில் உள்ளதாக கூறப்படுகிறது. அந்த தீவை வாங்கியே நித்தியானந்தா கைலாசாவை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், நித்தியானந்தா தங்கள் நாட்டில் இல்லை என்று ஈக்வடார் அரசு பிபிசியிடம் தெரிவித்திருந்தது. இந்துக்களால் புனிதமாகக் கருதப்படும் திபெத்தில் உள்ள கைலாச மலையின் பெயரை நித்தியானந்தா தனது இடத்திற்கு வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல ஐநா சபையும் கைலாசாவை இதுவரை அங்கீகரிக்கவில்லை.
போலி தகவல்
சொல்லப்போனால், கடந்த ஜன. மாதம் நியூயார்க் நகரத்திற்கும் கைலாசாவுக்கும் இடையேதான் தான் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் நியூயார்க் மேயர் பராக்கா கலந்து கொண்டார். இருப்பினும், அமெரிக்காவே தங்களுக்கு அங்கீகாரம் கொடுத்ததை போலவே நித்தியானந்தா ஆதரவாளர்கள் இணையத்தில் செய்திகளைப் பரப்பி வந்தனர். சர்ச்சையில் சிக்கியுள்ள இதுபோன்ற நகரத்துடன் சிஸ்டர் சிட்டி ஒப்பந்தங்களை மேற்கொள்ள முடியாது என்று நியூயார்க் கவுன்சில் உறுப்பினர் லூயிஸ் குயின்டானா தெரிவித்தார்.

எப்படி
அமெரிக்காவின் உள்ளூர் அமைப்புகளுக்குச் சர்வதேச அளவிலான தொடர்புகள் இருக்காது. இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, ஒரு குழுவால் தங்கள் உண்மையான நாடு என்று காட்டி ஒப்பந்தத்தை எப்படி எளிதாக ஏற்படுத்த முடிகிறது என்பதையே இந்தச் சம்பவம் விளக்குகிறது.. கைலாசா ஒரு அங்கீகரிக்கப்பட்ட நாடு என்ற இமேஜை உருவாக்கவே நித்தியானந்தா ஆதரவாளர்கள் தொடர்ந்து முயன்று வருகின்றனர். இந்தச் சூழலில் தான் நியூயார்க் நகர் கவுன்சிலும் அதன் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

எங்கே கைலாசா
நித்தியானந்தா உருவாக்கியுள்ள இந்த நாடு எங்கே இருக்கிறது என்று யாருக்கும் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.. இது நாடு ஈக்வடார் அருகே உள்ள தீவு ஒன்றில் உள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த தீவை வாங்கியே நித்தியானந்தா கைலாசாவை உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், நித்தியானந்தா தங்கள் நாட்டில் இல்லை என்று ஈக்வடார் அரசு பிபிசியிடம் தெரிவித்திருந்தது. இந்துக்களால் புனிதமாகக் கருதப்படும் திபெத்தில் உள்ள கைலாச மலையின் பெயரை நித்தியானந்தா தனது இடத்திற்கு வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல ஐநா சபையும் கைலாசாவை இதுவரை அங்கீகரிக்கவில்லை.












Click it and Unblock the Notifications