மன்னிக்கவே மாட்டோம்.. இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல் பற்றி.. ஒருவழியாக வாய் திறந்த அமெரிக்கா
வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்கா இது தொடர்பாக தனது மவுனத்தை கலைத்துள்ளது. இனம், மத அடிப்படையில் தாக்குதல் நடத்துபவர்களை மன்னிக்க முடியாது எனவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமெரிக்கா வெள்ளை மாளிகை அதிகாரி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு உயர் கல்வி கற்கவும் அங்குள்ள டெக் நிறுவனங்களில் பணியாற்றவும் ஆயிரக்கணக்காக இந்தியர்கள் அங்கு வசித்து வருகிறார்கள். அமெரிக்காவில் கல்வி பயில செல்லும் மாணவர்கள் ஆண்டுதோறும் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், தான் சமீப காலமாக அமெரிக்காவில் பயின்று வரும் இந்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக இந்த ஆண்டில் மட்டும் இதுவரை நான்கு இந்திய வம்சாவளி மாணவர்கள் பலியாகியுள்ளனர். இந்த நிலையில், இந்திய மாணவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக முதல் முறையாக அமெரிக்கா தனது மவுனத்தை கலைத்துள்ளது. பாலினம், இனவாதம் அடிப்படையிலான வன்முறைக்கு மன்னிப்பே கிடையாது என்று வெள்ளை மாளிகை அதிகாரி தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் கம்யூனிகேசன்ஸ் ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி இந்த தகவலை தெரிவித்தார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது நிர்வாகம், இது போன்ற தாக்குதல்களை கட்டுப்படுத்த தீவிரமாக பணியாற்றி வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் தாக்குதல் நடத்துபர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதற்காக உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுகிறோம்" என்றார்.
-
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications