கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை செய்த வட கொரியா.. அலறும் அமெரிக்கா!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கி அழிக்கும் புதிய ஏவுகணையை வடகொரியா சோதனை செய்து உள்ளதாக அமெரிக்கா குற்றம்சாட்டி இருக்கிறது.

கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி மற்றும் மார்ச் 4 ஆம் தேதி நடத்தப்பட்ட ஏவுகணை சோதனை உளவு செயற்கைக்கோளை உருவாக்குவதற்காக அனுப்பப்பட்டது என வட கொரியா தெரிவித்து இருக்கிறது.

இதுகுறித்து தெரிவித்துள்ள அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகமான பெண்டகன், வட கொரியா நடத்தி இருக்கும் சோதனை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை போல் இருப்பதாக சந்தேகித்துள்ளது.

 மாறுவேட ஏவுகணை சோதனை

மாறுவேட ஏவுகணை சோதனை

பெண்டகனின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவிக்கையில், "வட கொரியா 5,500 கிலோ மீட்டர் தூரம் பாயும் ஏவுகணை சோதனை நடத்தினால், அது அமெரிக்காவை தாக்கும். அவை அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் திறன் கொண்டவை. வட கொரியா இதை விண்வெளி ஏவுகணை தளம் போல் காட்டுகிறது. இதற்கு அமெரிக்கா சார்பில் கடும் கண்டனத்தை பதிவு செய்கிறோம். இதன் மூலம் வடகொரியா ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி இருக்கிறது. வட கொரியாவின் ஏவுகணை சோதனை பதற்றங்களை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பை சீர்குலைக்கும் வகையில் உள்ளது." என கண்டித்து உள்ளார்.

 ஜப்பான், தென் கொரிய கண்டனம்

ஜப்பான், தென் கொரிய கண்டனம்

வட கொரியாவின் ஏவுகணை சோதனைக்கு அதன் அண்டை நாடுகளான தென் அமெரிக்காவும் ஜப்பானும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. வட கொரியா பல ஆண்டுகளாக உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் ராணுவ அணிவகுப்புகளிலும் ஏவுகணைகளை முன்னிருத்தியது வடகொரியா.

 அமெரிக்காவை அச்சுறுத்தும் வட கொரியா

அமெரிக்காவை அச்சுறுத்தும் வட கொரியா

வட கொரியா பல ஆண்டுகளாக மேற்கொண்டு வந்த குறுகிய தூர ஏவுகணை சோதனை தென் கொரியா ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தி வந்த நிலையில், தற்போது அது கையில் எடுத்துள்ள கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை அமெரிக்காவை அச்சுறுத்தி இருக்கிறது. வல்லரசுகளாக கருதப்படும் அமெரிக்கா, சீனா, ரஷியா ஆகிய நாடுகளிடம் மட்டுமே இருக்கும் கண்டம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வட கொரியா சோதித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

 வடகொரியாவிடம் உள்ள ஏவுகணைகள்

வடகொரியாவிடம் உள்ள ஏவுகணைகள்

வட கொரியா வசம் உள்ள வாசாங் 15 என்ற ஏவுகணை 13,000 கி.மீ, தொலைவில் சென்று தாக்கும் திறன் கொண்டது. வாசாங் 14 ஏவுகணை 10,400 கி.மீ, வாசாங் 12 - 4,500 கி.மீ. என நெடுந்தூரம் தாக்கும் பல ஏவுகணைகளை வட கொரியம் தன் வசம் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+