ஈரானுக்கு ஆதரவு தெரிவித்த மறுநிமிடமே.. ஏவுகணை சோதனை செய்து மிரட்டிய வடகொரியா! மகளுடன் நேரில் பார்த்த கிம்
பியாங்யாங்: ஈரானில் புதிய தலைவராக மொஜ்தபா கமேனி தேர்வு செய்யப்பட்டதை மதிக்கிறோம் என்று தெரிவித்த வடகொரியா, பிராந்திய அமைதிக்கு கேடு விளைவிப்பதாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை கண்டித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில் வடகொரியா சக்தி வாய்ந்த ஏவுகணை சோதனையையும் நடத்தியது. இந்த சோதனையை தனது மகளுடன் சேர்ந்து கிம் ஜாங் உன் பார்வையிட்டார்.
ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நடத்தி வரும் தாக்குதல் இரண்டாவது வாரத்தை எட்டியுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா கடுமையான தாக்குதலை நடத்தி வரும் நிலையில் பதிலுக்கு வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா
இஸ்ரேல் மீதும் குண்டு மழை பொழிந்து வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஈரான் அமெரிக்கா மோதல் நாளுக்கு நாள் வலுத்துக்கொண்டே செல்லும் நிலையில், ஈரானில் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா கமேனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஈரானின் புதிய தலைவருக்கு வடகொரியா ஆதரவு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, அமெரிக்காவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் வடகொரியா , ஈரானுக்கு ஆதரவு கொடுத்து இருப்பது மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த தகவல் வெளியான சற்று நேரத்தில் வடகொரியா ஏவுகணை சோதனையை நடத்தி மிரள வைத்துள்ளது. வடகொரியாவின் மேற்கு பகுதியில் உள்ள சோ ஹியன் நகரில் இருந்து இந்த நவீன ஏவுகணை சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மகளுடன் பார்வையிட்ட கிம் ஜாங் உன்
கடற்படை கப்பலில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை விண்ணை பிளந்தபடி சீறிப்பாய்ந்ததை தனது மகளுடன் சேர்ந்து கிம் ஜாங் உன் பார்வையிட்டார். கடந்த ஒரு வாரத்தில் வடகொரியா மேர்கொள்ளும் இரண்டாவது ஏவுகணை சோதனை இதுவாகும். முன்னதாக ஈரானின் புதிய தலைவருக்கு ஆதரவு தெரிவித்த வடகொரியா, அமெரிக்காவையும் கடுமையாக கண்டித்தது.
வடகொரியா வெளியுறவு செய்தி தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், "அலி கமேனியின் மகன் மொஜ்தபா கமேனியை புதிய தலைவராக தேர்வு செய்த ஈரான் முடிவை வடகொரியா மதிக்கிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அத்துமீறலை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். ஈரானுக்கு எதிராக தொடுக்கப்பட்ட சட்டவிரோதமான பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்புக்கான அடிப்படைகளை சிறுமைபடுத்தும் விதமாக அமைந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications