ஆட்சிக்கே முடிவு கட்டி விடுவோம்.. கிம் ஜாங் உன்னிற்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஜோ பைடன்..என்னாச்சு
வாஷிங்டன்: வடகொரியாவின் அத்து மீறல் தொடர்ந்து கொண்டு இருக்கும் நிலையில், அந்த நாடு அணு ஆயுத தாக்குதலில் ஈடுபட்டால் ஆட்சிக்கு முடிவு கட்டிவிடுவோம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பகிரங்க எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
உலகின் மர்ம தேசமாக அறியப்படும் நாடு வடகொரியா. அந்த நாட்டில் என்ன நடக்கிறது என்றே வெளி உலகத்திற்கு தெரியாது.

வடகொரியாவில் இருந்து தப்பி வரும் நபர்கள் கூறும் தகவல் மற்றும் தென்கொரிய உளவு அமைப்புகள் சொல்லும் தகவல்களை வைத்தே வடகொரியாவில் நடக்கும் ஒரு சில தகவல்கள் கசிந்து வருகின்றன. அண்டை நாடான தென்கொரியா, ஜப்பான் மட்டுமின்றி உலக வல்லரசு நாடான அமெரிக்காவிற்கே வடகொரியா சவால் விடுத்து வருகிறது.
அந்த நாட்டின் அதிபராக இருக்கும் கிம் ஜாங் அன் தனது அடாவடி செயல்பாடுகளால் அமெரிக்காவையும் மிரட்டி வருகிறார். கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை, அணு ஆயுத சோதனை, கடலுக்குள் செயற்கை சுனாமி ஏற்படுத்தும் சோதனை உலக நாடுகளை அதிர வைத்து வரும் கிம் ஜான் அன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் எச்சரிக்கையும் துளியும் மதிப்பது இல்லை.
வாரத்திற்கு ஒருமுறையாவது ஏவுகணை சோதனைகளை நடத்தி தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறார். வடகொரியாவிற்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், அந்த நாட்டில் வறுமை கோர தாண்டவம் ஆடுகிறது. ஆனாலும் இந்த வறுமையை மீறி தனது ஆயுத பலத்தை அதிகரிப்பதில்தான் வடகொரியா ஆர்வம் காட்டி வருகிறது.
வடகொரியாவின் அத்து மீறல் தொடர்ந்து கொண்டு இருக்கும் நிலையில், அந்த நாடு அணு ஆயுத தாக்குதலில் ஈடுபட்டால் ஆட்சிக்கு முடிவு கட்டிவிடுவோம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பகிரங்க எச்சரிக்கையை விடுத்துள்ளார். தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் சென்றுள்ளார். இந்த பயணத்தின் போது அமெரிக்க அதிபர் ஜோ பைடனையும் யூன் சுக் யோல் சந்தித்துப் பேசினார்.
ஓவல் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது தொடர்ந்து பாலிஸ்டிக் ஏவுகணைகளை பரிசோதித்து வரும் வடகொரியாவிற்கு எவ்வாறு பதிலடி கொடுப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த சந்திப்புக்குப் பிறகு வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஜோ பைடன், வடகொரிய தனது ஆயுதங்களை பயன்படுத்தினால் அணு ஆயுத தாக்குதலை எதிர்கொள்வதோடு ஆட்சியின் தலைமையும் முடிவுக்கு வரும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
இது தொடர்பாக ஜோ பைடன் கூறியதாவது:- அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு எதிராக வடகொரியா அணு ஆயுத தாக்குதலை முன்னெடுத்தால் அதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அப்படி ஒரு நடவடிக்கை எடுத்தால் அந்த ஆட்சிக்கு முடிவு கட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
-
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications