"அமெரிக்காவின் அத்துமீறல்.. ஆதாரம் கூட இல்லை.." அதானி மீதான குற்றச்சாட்டுக்கு நார்வே கடும் எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அதானி லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்க அதிகாரிகள் கடந்த வாரம் குற்றஞ்சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே இந்த குற்றச்சாட்டுகள் அமெரிக்காவின் அத்துமீறல் என்றும் இதுபோன்ற அத்துமீறலை நிறுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் நார்வே தூதர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் கடந்த வாரம் அதானி குழுமத்தினர் மீது சில பரபர குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

adani america norway

அதானி மீது புகார்:

அதாவது சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா உடனான தனது ஒப்பந்தத்தைக் காப்பாற்றிக் கொள்ள அதானி நிறுவனம் சுமார் ரூ.2000 கோடி லஞ்சம் கொடுத்துள்ளது என்பதே பிரதான புகாராகும். இந்த விவகாரத்தில் மொத்தம் ரூ. 2000 கோடி லஞ்சம் கொடுத்ததாகவும் சிலரை அதானி நேரடியாகச் சந்தித்து லஞ்சப் பணம் தொடர்பாக உறுதி அளித்ததாகவும் அமெரிக்க அதிகாரிகளின் புகாரில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அதானி மீது கிரிமினல் மற்றும் சிவில் என இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே அதானி குழுமம் மீதான அமெரிக்க அதிகாரிகளின் இந்த குற்றச்சாட்டு குறித்து நார்வே தூதரும் முன்னாள் ஐ.நா.சுற்றுச்சூழல் திட்ட நிர்வாக இயக்குநருமான எரிக் சொல்ஹெய்ம் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

நார்வே அதிகாரி:

இதை "அமெரிக்காவின் அத்துமீறல்" என்று குறிப்பிட்டுள்ள எரிக் சொல்ஹெய்ம், அமெரிக்காவின் அத்துமீறல் எப்போது தான் நிறுத்தப்படும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இந்த குற்றச்சாட்டுகளில் லஞ்சம் கொடுக்கப்பட்டது அல்லது அதானியின் உயர்மட்ட தலைவர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர் என்பதைக் குறிக்கும் ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும் சொல்ஹெய்ம் குறிப்பிட்டார்.

அமெரிக்க அதிகாரிகளின் இதுபோன்ற நடவடிக்கைகள் பசுமை எரிசக்தி நோக்கி இந்தியா செல்வதைத் தடுத்து நிறுத்தும் வகையில் இருப்பதாகவும் இது இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனத்தைச் சீர்குலைக்கும் வகையில் இருப்பதாகவும் சொல்ஹெய்ம் கூறினார்.

அமெரிக்க அத்துமீறல்:

அவர் இது தொடர்பாக மேலும் கூறுகையில், "அமெரிக்காவின் அத்துமீறல் எப்போது நிறுத்தப்படும்? கடந்த வாரம் அதானி குழுமத்தின் மீது அமெரிக்க அதிகாரிகள் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கை குறித்தே சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதுபோன்ற அமெரிக்க அத்துமீறல் எப்போது நிறுத்தப்படும் என்று உலகம் கேட்கத் தொடங்கும் நேரம் வந்துவிட்டது.

நீங்கள் யோசித்துப் பாருங்கள்.. அமெரிக்காவில் நடந்ததாகக் கூறப்படும் குற்றங்கள் தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் மீது இந்திய நீதிமன்றம் குற்றஞ்சாட்டினால் எப்படி இருக்கும். அதை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளுமா.. அமெரிக்க ஊடகங்கள் அதை எப்படிக் கவர் செய்வார்கள்.

குற்றச்சாட்டுகள் இல்லை:

அதானியின் உயர்மட்ட தலைவர்களான கவுதம் அதானி மற்றும் சாகர் அதானி மீது குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை என்பது இப்போது தெளிவாகிறது. அதானி நிர்வாகிகள் இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததற்கான ஆதாரமும் இல்லை. லஞ்சம் தருவதாக உறுதி அளிக்கப்பட்டது. அல்லது விவாதிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டுகள் மட்டுமே இருக்கிறது.

அமெரிக்காவின் இந்த அத்துமீறல் மக்களின் நிஜ வாழ்க்கையை பாதிக்கிறது.. இந்த குற்றச்சாட்டுகள் அதானி நிர்வாகத்தின் வளங்களைச் சூரிய ஒளி மின்சாரத்திற்குப் பதிலாக நீதிமன்றத்தில் வீணடிக்க வைக்கிறது. அமெரிக்காவின் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் இது" அவர் கூறினார்.

இந்திய எம்பி:

முன்னதாக இந்த மூத்த வழக்கறிஞரும், முன்னாள் இந்திய எம்.பி.யுமான மகேஷ் ஜெத்மலானி, அமெரிக்க அதிகாரிகள் இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றது என நிராகரித்தார். மேலும், அதானி மீதான இந்த குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று என்றும் அமெரிக்க நீதித்துறை இந்தியாவை ஸ்திரமின்மையைப் பிரச்சினையில் தள்ளுவதாகவும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+