வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனாவால் குண்டாக இருப்பவர்களே அதிகம் பலி.. அதிர்ந்த அமெரிக்கா,,, ஷாக் பின்னணி!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் குண்டாக இருப்பவர்கள் தான் அதிகம் பேர் பலியாகி உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அங்கு குண்டாக இருப்பவர்களில் 90 சதவீதம் பேர் தொற்றால் பலியாகி உள்ளனர்.

Recommended Video

    தொப்பையை குறைக்க நினைப்பவர்கள் உணவில் இதைக் கண்டிப்பாக சேர்த்திடுங்கள்!- வீடியோ

    அமெரிக்காவில் கொரோனா தொற்றால் இதுவரை 56 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இதுவரை 1,76,070 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் ஒரே நாளில் 707 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் இன்று அதிகாலை நிலவலப்படி ஒரே நாளில் 34,020 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இறப்பு எண்ணிக்கையும் பாதிப்பு எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து வருகிறது. ஆரம்பத்தில் தினசரி ஆயிரம், 2 ஆயிரம் பேர் பலியாகி வந்தனர். எதிர்ப்பு சக்தி குறைவு காரணமாக பலியானதாக ஆய்வுகளில் கூறப்பட்டது.

    இந்தியாவில் 30 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. தட்டையாகாத 'கிராப்..' சோதனைகள் அதிகரிப்புதான் ஆறுதல்இந்தியாவில் 30 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. தட்டையாகாத 'கிராப்..' சோதனைகள் அதிகரிப்புதான் ஆறுதல்

    உயிரிழப்பு அதிகம்

    உயிரிழப்பு அதிகம்

    கொரோனாவால் இறந்தவர்களில் பலர் வயதானவர்கள் என்றாலும், அவர்களை தவிர குண்டானவர்களும் பெரும்பாலும் உயிரிழந்தனர். உடல் பருமன் கொரோனா பாதிப்பு இறப்புக்கு முக்கிய காரணமாக இருப்பதை மருத்துவ ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

    யாருக்கு அதிக பாதிப்பு

    யாருக்கு அதிக பாதிப்பு

    கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவல் அமெரிக்காவில் நியூயார்க், நியூஜெர்சில் அதிகமாக இருந்தது. பாதிப்பு அதிகரித்துக்கொண்டே இருந்த நிலையில், வேகமாக ஐசியு வார்டுகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இதற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்த போது, மருத்து ஆய்வாளர்களின் கவனத்தை பெற்ற ஒரு விஷயம், உடல் பருமன் தான்.

    உடல் பருமன் உள்ளவர்கள்

    உடல் பருமன் உள்ளவர்கள்

    கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் பலர் குண்டாக இருந்தனர். உயிரிழந்த 90 சதவீதம் பேர் குண்டாக இருந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. அமெரிக்காவில் உடல் பருமனுடன் ஒரு கோடியே 30 லட்சம் பேர் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவர்களி கணிசமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உடல் பருமன் பிரச்சனை தான் அமெரிக்காவில் பல ஆண்டுகளாக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இவர்களுக்கு தடுப்பூசி பலன் அளிப்பது இல்லை. ப்ளூ காய்ச்சல், எலிக்காய்ச்சல் டெட்டன்ஸ் போன்றவற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடித்து பயன்படுத்திய போது உடல் பருமன் உள்ளவர்களுக்கு பலன் அளிப்பது இல்லையாம். எனவே கொரோனா தடுப்பூசி பலன் அளிக்குமா என்ற சந்தேகமும் உள்ளது.

    சுகாதார அதிகாரிகள்

    சுகாதார அதிகாரிகள்

    இதனிடையே பிஎம்ஐ 30க்கு மேல் இருப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும், 40 வயதை கடந்தவர்கள் கண்டிப்பாக மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேணடும் என்றும் அமெரிக்க சுகாதார அதிகாரிகள் அந்நாட்டு மக்ககளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர், மருத்துவர்களின் எச்சரிக்கை காரணமாக உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். உடல் எடையை எப்படியாவது குறைத்துவிட வேண்டும் என்று கடுமையாக முயற்சித்து வருகிறார்கள்.

    English summary
    Studies show that obesity people who are covid 19 disease be died more in the United States. About 90 percent of those who are obese there are infected.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X