பெட்ரோல் விலை ஏறும்! சவுதி போடும் சீக்ரெட் பிளான்.. பின்னணியில் ரஷ்யா தான்! விளாசும் அமெரிக்கா

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க உள்ளதாக ஒபெக் நாடுகள் அறிவித்து உள்ள நிலையில், இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

கொரோனா சமயத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மல மடங்கு சரிந்தது. அப்போது கச்சா எண்ணெய்யை நம்பி இருக்கும் நாடுகள் கடும் நஷ்டத்தைச் சந்தித்தன.

அதன் பின்னர் கொரோனா ஊரடங்கை ஒவ்வொரு நாடும் படிப்படியாக விலக்கிக் கொள்ளவே கச்சா எண்ணெய் தேவையும் மீண்டும் அதிகரித்தது. இதனால் விலையும் மெல்ல உயரத் தொடங்கியது.

கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய்

தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 85-90 டாலர்களில் வர்த்தகமாகி வருகிறது. இது சரியான விலை தான் என்றாலும் கூட கொரோனா காலத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்யும் வகையில் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்கச் சவுதி தலைமையிலான ஒபெக் + நாடுகள் முடிவு செய்தன. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

உற்பத்தி குறைப்பு

உற்பத்தி குறைப்பு

உற்பத்தி குறைவு என்றால் சில ஆயிரம் பேரல்கள் இல்லை.. வரும் நவம்பர் மாதம் முதல் தினசரி 20 லட்சம் பேரல்கள் உற்பத்தியைக் குறைக்க முடிவு செய்து உள்ளன. இது அமெரிக்காவை கடும் கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது. ஏற்கனவே அமெரிக்காவில் வரலாறு காணாத அளவுக்கு விலைவாசி உயர்ந்து உள்ள நிலையில், இந்த அறிவிப்பு மற்றொரு அதிர்ச்சியாகவே அமெரிக்காவுக்கு அமைந்தது.

அமெரிக்கா கோபம்

அமெரிக்கா கோபம்

சவுதியின் இந்த நடவடிக்கை ரஷ்யாவுக்கே உதவும் வகையில் இருப்பதாக அமெரிக்கா சாடியுள்ளது. உக்ரைனில் போர் மீண்டும் உச்சமடையத் தொடங்கி உள்ள நிலையில், இந்தக் குற்றச்சாட்டைச் சவுதி மறுக்கும் வகையில் செய்திக்குறிப்பு ஒன்றை வியாழக்கிழமை வெளியிட்டது. இருப்பினும், இந்த முடிவு ரஷ்யா மீதான பொருளாதாரத் தடையை மழுங்கடித்து, அதன் வருவாயை அதிகரிக்கும் வகையில் இருக்கும் என்று அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி பதிலடி கொடுத்து உள்ளார்.

சர்வதேச உறவு

சர்வதேச உறவு

சவுதி தலைமையிலான ஒபெக் நாடுகளின் இந்த முடிவு அமெரிக்காவுக்குச் சிக்கல் தான். கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைத்தால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மறு மதிப்பீடு செய்ய உள்ளதாக அமெரிக்கா தெரிவித்து உள்ளது. ஏற்கனவே பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி கொலை சம்பவத்தில் அமெரிக்கா சவுதி மீது கடுமையான நிலைப்பாட்டை எடுத்தது. அந்த விவகாரம் இப்போது தான் ஓய்ந்த நிலையில் இப்போது மீண்டும் சர்ச்சை ஏற்பட்டு உள்ளது.

திசை திருப்பும் முயற்சி

திசை திருப்பும் முயற்சி

சவுதி பல்வேறு காரணங்களைச் சொல்லித் திசைதிருப்ப முயன்றாலும் இந்த உற்பத்தி குறைப்பு ரஷ்யாவுக்கு ஆதரவாகவே இருப்பதாகவும் உக்ரைன் போரில் உலகமே உக்ரைனுக்குப் பின்னால் அணிதிரண்டு வரும் நிலையில், சவுதி நிலைப்பாட்டை வேறு வழியின்றி மற்ற ஒபெக் நாடுகள் பின்பற்ற வேண்டி இருப்பதாகவும் ஜான் கிர்பி தெரிவித்து உள்ளார். அமெரிக்காவில் அடுத்த மாதம் முக்கியமான தேர்தல் நடைபெறும் நிலையில், கச்சா எண்ணெய் உயர்வு பைடனுக்கு சிக்கலைத் தரும்.

ரஷ்யாவுக்கு சாதகம்

ரஷ்யாவுக்கு சாதகம்

இருப்பினும், இது போன்ற குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக மறுத்துள்ள சவுதி ஒபெக் நாடுகளின் பொருளாதாரத்தைக் கணக்கில் கொண்டு மட்டுமே இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்து உள்ளது. அதேநேரம் சவுதியின் இந்த முடிவு நிச்சயம் ரஷ்யாவுக்குச் சாதமாகவே இருக்கும். ரஷ்யாவின் பொருளாதாரம் குறிப்பிடத் தகுந்த அளவுக்குக் கச்சா எண்ணெய்யை நம்பியே இருக்கும் நிலையில், இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+