‛‛ஓரினச்சேர்க்கை’’.. நண்பரை திருமணம் செய்து கொண்ட ‛‛சாட் ஜிபிடி’’ நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேன்!
வாஷிங்டன்: சாட் ஜிபிடி எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த ஓபன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓவான சாம் ஆல்ட்மேன் இன்று தனது நெருங்கிய நண்பரை திருமணம் செய்து கொண்டார். சாம் ஆல்ட்மேன் ஓரினச்சேர்க்கையாளர் என கூறப்படும் நிலையில் அவர் திருமணம் செய்து கொண்ட நபரின் பின்னணி குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது தொழில்நுட்பம் என்பது தொடர்ந்து வளர்ந்து கொண்டே செல்கிறது. தற்போது ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் எனும் ஏஐ தொழில்நுட்பம் தான் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் தான் ஓபன் ஏஐ நிறுவனம் கண்டுபிடித்த ‛சாட்ஜிபிடி' மக்களின் வேலையை பறிக்கும் அளவுக்கும் உள்ளது.

இந்த ‛சாட் ஜிபிடி' செயற்கை நுண்ணறிவை உருவாக்கிய நிறுவனம் தான் ஓபன் ஏஐ. இந்த நிறுவனத்தின் சிஇஓவாக சாம் ஆல்ட்மேன் செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் அவர் நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் மீண்டும் அந்த பொறுப்பில் சேர்த்து நியமனம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் தான் சாம் ஆல்ட்மேன் நேற்று திருமணம் செய்து கொண்டார். ஓரினச்சேர்க்கையாளராக அவர் தன்னை அடையாளப்படுத்தி வந்த நிலையில் அவர் தனது நண்பர் ஆலிவர் முல்ஹெரினை கரம் பிடித்துள்ளார். இருவரும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர். ஹவாயில் இந்த திருமண விழா மிகவும் எளிமையான முறையில் நடந்தது. இதில் சாம் ஆல்ட்மேனின் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
சாம் ஆல்ட்மேனை கரம் பிடித்த ஆலிவர் முல்ஹெரின் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர். மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் சாப்ட்வேர் என்ஜினீயர் படிப்பை முடித்தார். அப்போது கேம் தொடர்பான தொழில்நுட்பத்தில் ஆர்வம் காட்டினார். ப்ரோகிராமராக தொழில்நுட்ப துறையில் நுழைந்தார். தற்போது ஐஓடி எனும் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் துறையில் நிபுணத்துவம் பெற்று விளங்குகிறார்.
கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றார். அப்போது அங்கு முன்னணி நிறுவனங்களின் தலைவர்களுக்கு டின்னர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தார். இதில் சத்யா நாதெல்லா-அனு நாதெல்லா, சுந்தர் பிச்சை-அஞ்சலி ஜோடி உள்பட பலர் பங்கேற்றனர். இதில் சாம் ஆல்ட்மேன்-ஆலிவர் முல்ஹெரினும் பங்கேற்றனர். அன்றைய தினம் முதல் இருவரும் மிகமிக நெருக்கமான நண்பர்கள் என்பது உலகுக்கு தெரியவந்தது.
இந்நிலையில் தான் சாம் ஆல்ட்மேனுடன் திருமணத்தின்போது எடுத்து கொண்டே போட்டோவை ஆலிவர் முல்ஹெரின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், ‛‛எனது சிறந்த நண்பரையும், என் வாழ்க்கையின் காதலையும் திருமணம் செய்து கொண்டேன்'' என தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர்களுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications