பெருந்தொற்று அலர்ட்! இனி அடிக்கடி வரக்கூடும்.. கொடியதாக இருக்கலாம்.. வெளியான ஷாக் ரிப்போர்ட்
வாஷிங்டன்: அதிக அளவிலான பெருந்தொற்றுக்கள் வரும் காலங்களில் அடிக்கடி வெளிப்படும் என்று Airfinity என்ற அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. பருவநிலை மாற்றம், சர்வதேச பயணங்கள் அதிகரிப்பு, அதிக மக்கள் தொகை, விலங்குகளிடம் இருந்து மனிதனுக்கு தொற்று அதிகம் பரவுதல் ஆகிய காரணங்களால் அதிக அளவில் பெருந்தொற்றுக்கள் பரவலாம்.
சீனாவின் உகான் நகரில் கடந்த 2019- ஆம் ஆண்டு முதன் முதலாக வெளிப்பட்ட கொரொனா உலகம் முழுவதும் ஆட்டி படைத்தது. பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்திய இந்த கொரோனா கடுமையான பொருளாதார பாதிப்பையும் ஏற்படுத்தியது. உலகம் இந்த நூற்றாண்டில் கண்டிராத ஒரு பெரிய கொள்ளை நோயாக கொரோனா பெருந்தொற்று இருந்தது.

தொற்று பரவல் கண்டறியப்பட்டு 4 ஆண்டுகள் நெருங்கிவிட்ட போதும் இன்னும் கூட கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் முழுமையாக அகலவில்லை. உருமாற்றம் அடைந்து பல அலைகளாக கொரோனா பரவி மீண்டும் மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இருந்தாலும் தற்போது நோயின் தீவிரத்தன்மை குறைந்துவிட்டதால் கொரோனா எண்டமிக் நிலையை எட்டிவிட்டதாக மருத்துவ நிபுணர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.
இது ஆறுதல் அளிக்கும் விஷயமாக பார்க்கப்பட்டாலும் அடுத்த 10 ஆண்டுகளில் மீண்டும் ஒரு பெருந்தொற்றை உலகம் காணப்போவதாக ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியிருக்கிறது. இது தொடர்பாக Airfinity என்ற அமைப்பு வெளியிட்டு இருக்கு அறிக்கையில், அதிக அளவிலான பெருந்தொற்றுக்கள் வரும் காலங்களில் அடிக்கடி வெளிப்படும். பருவநிலை மாற்றம், சர்வதேச பயணங்கள் அதிகரிப்பு, அதிக மக்கள் தொகை, விலங்குகளிடம் இருந்து மனிதனுக்கு தொற்று அதிகம் பரவுதல் ஆகிய காரணங்களால் அதிக அளவில் பெருந்தொற்றுக்கள் பரவலாம்.
எனவே, வைரஸ் பரவலை தடுப்பதற்காக உலக நாடுகள் தடுப்பூசிகளை துரிதமாக கண்டறிவது அவசியம் ஆகும். ஜிகா, மார்பர்க் போன்ற வைரஸ்களுக்கு இன்னும் கூட உலக நாடுகள் தடுப்பூசிகளை கண்டறியவில்லை. திடீரென வெளிப்படும் இந்த நோய்களை கட்டுப்படுத்துவதற்கு உலக அளவில் வலுவான தொற்று நோய் தயார்நிலை அமைப்புகளை ஏற்படுத்துவதுதான் சிறந்த வழியாகும்.
கொரோனா மற்றும் அதுபோன்ற பெருந்தொற்றுக்களுக்கு உலக அளவில் ஒரு தயார் நிலையை அமைப்பை ஏற்படுத்துவதுதான் காப்பீடு போன்றதாக இருக்கும். உண்மையான அபாயங்களை நாங்கள் கணக்கிட்டு இருக்கிறோம். அதேபோல், அபாயங்களை குறைப்பதற்கான சாத்தியங்களையும் கணக்கிட்டு இருக்கிறோம். இது மக்களை பாதுகாக்க உதவும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications