Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஏதோ பெரிசா நடக்க போகுது.." பென்டகனில் எக்குத்தப்பாக அதிகரித்த பீட்சா ஆர்டர்.. பரபரக்கும் அமெரிக்கா

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க ராணுவ தலைமையிடத்தில் வழக்கத்திற்கு மாறாக இப்போது திடீரென பீட்சா ஆர்டர்கள் அதிகரித்துள்ளதாம். பென்டகன் அருகே பீட்சா ஆர்டர் அதிகரிப்பது என்பது அமெரிக்க ராணுவம் பெரிதாக ஏதோ ஒன்றைத் திட்டமிடுவதையே காட்டுகிறது. இதனால் அமெரிக்கா எப்போது வேண்டும் என்றாலும் ஈரான் மீது தாக்குதலை நடத்தும் என அச்சம் ஏற்பட்டுள்ளது.

மத்தியக் கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரானில் அங்குள்ள கமேனி அரசுக்கு எதிராக மிகப் பெரிய போராட்டம் வெடித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்கா- ஈரான் இடையேயான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் ஈரான் பெரிதாக ஏதோ ஒன்றைத் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Pentagon Pizza Trackers Sudden Movement Sparks Tensions Linked to Iran Crisis What trackers says

அதிகரித்த பீட்சா ஆர்டர்

அதாவது அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை தலைமையகமான பென்டகனில் இப்போது பீட்சா ஆர்டர் அதிகரித்துள்ளதாம். பென்டகன் பீட்சா ஆர்டருக்கும் அமெரிக்க ராணுவத்தின் ஆக்ஷனுக்கும் என்ன தொடர்பு என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம்.

பென்டகனில் எப்போது எல்லாம் பீட்சா ஆர்டர்கள் அதிகரிக்கிறதோ.. அப்போதெல்லாம் அமெரிக்கப் பாதுகாப்புப் படை ஏதோ பெரிதாகத் திட்டமிடுகிறது என்று அர்த்தம். அதாவது பெரிய மிஷன் குறித்துத் திட்டமிடும்போது பாதுகாப்பு ஊழியர்களால் வீடுகளுக்குச் செல்ல முடியாது. பென்கடன் அலுவலகத்திலேயே பல மணி நேரம் இருக்க நேரிடும். அதுபோன்ற இரவு நேரங்களில் ஓவர்டைம் வேலை செய்யும்போது பீட்சா ஆர்டர் செய்வார்களாம். அப்போதெல்லாம் அமெரிக்கா ஏதோ ஒன்றை பிளான் செய்வதாகவே அர்த்தம்.

ஈரான்

இப்போது ஒரு பக்கம் மத்தியக் கிழக்கு நாடான ஈரானில் போராட்டங்கள் உச்சத்தில் இருக்கிறது. போராட்டங்களை ஒடுக்க அந்நாட்டு ராணுவம் முயலும் நிலையில், உயிரிழப்புகள் 1000ஐ கடந்துள்ளது. அமைதியாகப் போராடுவோர் மீது அடக்குமுறைகளைப் பயன்படுத்தினால் அமெரிக்கா அதைப் பார்த்துக் கொண்டு வேடிக்கை பார்க்காது என டிரம்ப் ஏற்கனவே கூறியிருந்தார். இதற்கிடையே கடந்த புதன்கிழமை ஈரான் டிவி சேனல் டொனால்ட் டிரம்ப் மீது கொலை மிரட்டல் விடுத்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.

ஏதோ நடக்க போகுது

இதன் காரணமாகவே பென்டகன் பீட்சா டிராக்கர் 'இப்போதும் எதுவும் நடக்காது' என்பதிலிருந்து 'ஏதோ ஒன்று நடக்கக்கூடும்' என உயர்ந்தது. ஈரான்-அமெரிக்கா பதற்றம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'ஏதோ ஒன்று நடக்கக்கூடும்' என பென்டகன் பீட்சா குறியீடு மாறியதும், ஈரானில் மேலும் பதற்றம் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

மேலும், சமூக வலைத்தளங்களிலும் இது தொடர்பாக விவாதம் நடந்து வருகிறது. பென்கரன் அருகே பீட்சா ஆர்டர்கள் 256% அதிகரித்துள்ளதாகவும் இதனால் ஈரான் விவகாரத்தில் அமெரிக்கா பெரிதாக ஏதோ ஒன்றைத் திட்டமிட்டு வரலாம் என்றும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள். இன்னும் சிலர் ஈரான் விவகாரத்தில் அமெரிக்கா இனியும் தாமதம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பதிவிட்டு வருகிறார்கள்.

பீட்சா டிராக்கர்

பென்டகன் பீட்சா டிராக்கர் என்பது பென்டன் அருகிலுள்ள பீட்சா கடைகளில் எந்தளவுக்கு ஆர்டர் செல்கிறது என்பதை வைத்துக் கணக்கிடப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே இந்தக் கடைகளில் ஆர்டர்கள் வழக்கத்தை விட அதிகரித்துள்ளதாம். இதுவே இணையத்தில் இந்த விவாதம் எழப் பிரதானக் காரணமாக இருக்கிறது. அதேநேரம் அமெரிக்க அரசு அல்லது பென்டன் ஈரான் விவகாரத்தில் தலையிடுமா என்பது குறித்து எந்தவொரு விளக்கத்தையும் இப்போது வரை அளிக்கவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+