விமானம் மீது மோதிய பஸ்..பயணிகள் ‘ஷாக்’.. 5 பேர் காயம்.. அமெரிக்காவில் பரபர! விசாரணைக்கு உத்தரவு
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் விமானம் மீது பேருந்து மோதியது. இதில் 5 பேர் காயம் அடைந்தனர்.
வாஷிங்டன்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் நின்று கொண்டிருந்த விமானம் மீது பேருந்து மோதியது. எப்போதும் பிசியாக காணப்படும் விமான நிலையத்தில் நடைபெற்ற இந்த விபத்து தொடர்பாக விசாரணைக்கு அமெரிக்காவின் விமான போக்குவரத்து நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த விபத்து பற்றிய விவரங்களை இங்கே காணலாம்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ளது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம். அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் ஒன்றான லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
உள்நாட்டு வெளிநாட்டு பயணிகள் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த விமான நிலையத்தை பயன்படுத்துண்டு. இதனால், விமானம் தரையிறங்குவதும் டேக் ஆப் செய்வதும் என பிசியாக காணப்படும்.

விமானம் மீது மோதிய பஸ்
இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் மீது விமான நிலையத்திற்குள் பயன்படுத்தப்படும் பேருந்து (shuttle bus) மோதியது. இரவு 10 மணியளவில் டேக்சிவே பகுதிக்கு விமானம் இழுத்துச் செல்லப்பட்ட போது இந்த விபத்து நடைபெற்றுள்ளது. விமான நிலையத்தில் இரு முனையங்களுக்கு (terminal) இடையே பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து எதிர்பாராத விதமாக விமானத்தின் மீது மோதியிருக்கிறது.

5 பயணிகள் காயம்
இந்த விபத்தில் பேருந்தில் இருந்த பயணிகள் உள்பட 5 பேர் காயம் அடைந்துள்ளனர். விமானத்தை இழுத்து செல்லும் டக் வாகனத்தின் ஒட்டுநரும் லேசான காயம் அடைந்ததுள்ளார். விமானத்தில் பயணிகள் யாரும் இல்லை. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக பயணிகள் பரபரப்பாக பேசிக்கொண்டனர். உடனடியாக அந்த விமானம் பார்க்கிங் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த லேசான விபத்தால் விமான நிலையத்தில் விமான சேவை எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை என்று விமான நிலையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிறுவனம் விளக்கம்
இந்த விபத்து குறித்து அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் கூறுகையில், "விபத்து நடைபெறும் போது விமானம் கமர்ஷியல் விமானசேவைக்கு பயன்படுத்தவில்லை. இதனால் விமானத்தில் பயணிகள் யாரும் இல்லை. விமானம் பார்க்கிங் பகுதிக்கு டோ செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டது. விமான நிலைய பணிகளில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. விமான நிலையத்திற்குள் நடைபெற்ற இந்த விபத்து தொடர்பாக அமெரிக்காவின் விமான போக்குவரத்து நிர்வாகமான எப்.ஏ.ஏ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது" என்று தெரிவித்தது.

ஏற்கனவே ஒரு விபத்து
சமீப காலமாக அமெரிக்காவில் விமான நிலையங்களில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த 4ஆம் தேதி டெக்சாடில் உள்ள ஆஸ்டின் - பெர்க்ஸ்ட்ரோம் சர்வதேச விமான நிலையத்தில் இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதுவது நூலிழையில் தவிர்க்கப்பட்டது. அதாவது சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானத்திற்கு டேக் ஆப் செய்வதற்கு அனுமதி கிடைத்த அதே நேரத்தில் சரக்கு விமானம் ஒன்றிற்கும் தரையிறங்க இருந்தது. எனினும், கடைசி நேரத்தில் சரக்கு விமானம் தரையிறங்குவது ரத்து செய்யப்பட்டது. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

விபத்தில் சிக்கும் நிகழ்வுகள்
இது மட்டுமின்றி முந்தைய நாள் அதாவது பிப்ரவரி 3 ஆம் தேதி யுனிட்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 787 விமானம் டோ செய்து இழுத்து செல்லப்பட்ட போது ஏற்கனவே நிறுத்தப்பட்டு இருந்த விமானத்தின் இறக்கை மீது மோதியது. இப்படி அமெரிக்காவில் கடந்த சில வாரங்களில் விமானங்கள் சிறு சிறு விபத்துக்களில் சிக்கும் நிகழ்வுகள் அதிகரித்து வருவது பயணிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
-
3ம் உலகப்போர் வாசலில் நிற்கும் உலகம்? ஈரானை வீழ்த்த அணு குண்டை கையில் எடுக்கும் இஸ்ரேல், அமெரிக்கா? -
வல்லரசின் அஸ்தமனம்! அமெரிக்காவின் 20 ஆண்டு உழைப்பை நொறுக்கிய ஈரான்! ஈராக்கில் இருந்து US வெளியேறியது -
Hormuz: ஹார்முஸ் ஜலசந்தி திறக்குமா? திறக்காதா? 48 மணி நேரம் கெடு விதித்த டிரம்ப்.. ஈரான் அளித்த ரிப்ளை -
ஈரானிடம் தோல்வி அடைந்த அமெரிக்கா? ஹார்முஸில் இருந்து 'டாடா' காட்டும் ட்ரம்ப்.. எல்லாம் முடிந்தது? -
எல்லா பிரச்சினைக்கும் டிரம்ப் தான் காரணம்.. சரியா திட்டமிடல.. சிஐஏவின் ex தலைவர் காட்டம் -
இனி விமானம் பயணம் கனவுதான்.. நாளை முதல் விமான டிக்கெட் விலை கட்டுப்பாடு நீக்கம்.. உயரும் கட்டணம்! -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா?












Click it and Unblock the Notifications