‛முதலிடத்தில் மோடி’.. உலகளவில் டாப் 10 பிரபல தலைவர்கள் இவர்கள் தான்.. மாயமான பைடன் - புதின் - ஜி

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: உலகின் பிரபலமான டாப் 25 தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். மார்னிங் கன்சல்ட் என்ற அமெரிக்க ஆய்வு நிறுவனம் வெளியிட்ட இந்த முடிவில் டாப் 10 இடங்களுக்குள் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இடம்பெறாத நிலையில் டாப் 25 லிஸ்ட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீனா அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்டவர்கள் இடம்பெறவில்லை.

உலகின் மிகவும் பிரபலமான தலைவர்கள் யார் என்பது குறித்து அவ்வப்போது சர்வேக்கள் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது அமெரிக்காவின் ஆய்வு நிறுவனமான மார்னிங் கன்சல்ட் சர்வே ஒன்றை நடத்தி முடித்துள்ளது.

narendra modi

அதன்படி 2024ம் ஆண்டில் உலகளவில் மிகவும் பிரபலமான 25 தலைவர்கள் யார் ? என்பது பற்றிய சர்வேயை ஜூலை 8 முதல் 14ம் தேதி வரை மேற்கொண்டு தற்போது முடிவை அறிவித்துள்ளது.

இந்த லிஸ்ட் என்பது "ஒவ்வொரு நாட்டு தலைவர்களுக்கும் அந்த நாட்டை சேர்ந்த மக்கள் அளித்த அப்ரூவல் ரேட்டிங் அடிப்படையிலான தரவுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒவ்வொரு நாட்டின் மாதிரி அளவும் வேறுபடுகிறது'' என மார்னிங் கன்சல்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி இந்த லிஸ்ட்டில் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் உள்ளார். இவர் மொத்தம் 69 சதவீதம் மக்களின் ஆதரவை பெற்றுள்ளார். இந்த பட்டியலில் கடந்த ஆண்டும் பிரதமர் மோடி முதலிடம் வகித்தார். இந்நிலையில் தான் தற்போதும் அவர் அந்த இடத்தில் தொடர்ந்து வருகிறார். அதேவேளையில் கடந்த ஆண்டை விட இந்த முறை பிரதமர் மோடிக்கு மக்கள் வழங்கிய Approval Rating என்பது லேசாக சரிந்துள்ளது.

இதற்கு அடுத்ததாக 2வது இடத்தில் 63 சதவீத ஆதரவுடன் மெக்சிகோ அதிபர் ஆன்ட்ரஸ் மேனுவேல் உள்ளார். 3வது இடத்தில் 60 சதவீத ஆதரடன் அர்ஜென்டினா அதிபர் ஜாவியர் மிலேய் இருக்கிறார். 4வது இடத்தில் 52 சதவீத ஆதரவுடன் ஸ்விட்சர்லாந்தின் ஃபெடரல் கவுன்சிர் விலோலா அம்ஹெர்ட், 5வது இடத்தில் 47 சதவீத ஆதரவுடன் அயர்லாந்து அமைச்சர் சைமன் ஹாரிஸ் உள்ளார்.

6வது இடத்தில் 45 சதவீத ஆதரவுடன் பிரிட்டனின் புதிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் உள்ளார். 7 வது இடத்தில் 45 சதவீத ஆதரவுடன் போலாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் டொனால்ட் டஸ்க் உள்ளார். 8 வது இடத்தில் 42 சதவீத ஆதரவுடன் ஆஸ்திரேலியா பிரதமர் அன்டனி அல்பென்ஸ், 9 வது இடத்தில் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்சீஸ், 10 வது இடத்தில் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி ஆகியோர் உள்ளனர்.

இந்த டாப் 10 பட்டியலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்டவர்கள் இடம்பெறவில்லை. அமெரிக்க அதிபர் ஜோபைடன் இந்த பட்டியலில் 39 சதவீத ஆதரவுடன் 12வது இடத்தில் உள்ளார். இந்தியாவுடன் வம்பிழுக்கும் கனடா பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ 29 சதவீத ஆதரவுடன் 20வது இடத்தில் உள்ளார். அதேவேளையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் டாப் 25 லிஸ்ட்டுக்குள் வரவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+