கூகுள் உள்பட அமெரிக்காவின் டாப் "டெக்" நிறுவன சிஇஓக்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு.. பேசியது என்ன?
வாஷிங்டன்: மூன்று நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். நியூயார்க்கில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றிய மோடி, அதன்பிறகு அமெரிக்காவின் முன்னணி தொழில் நுட்ப நிறுவன சிஇஓக்களுடன் ஆலோசனை நடத்தினார்.
பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவியேற்ற பிறகு அமெரிக்காவிற்கு முதல் முறையாக நேற்று முன் தினம் புறப்பட்டு சென்றார். குவாட் உச்சி மாநாடு, ஐ.நா. பொதுச்சபை கூட்டம் உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக இந்த பயணம் அமைந்து இருந்தது. இதில் குவாட் உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் சொந்த மாகாணமான டெலவரில் நடந்த இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

அப்போது, குவாட் கூட்டமைப்பு தலைவர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து நியூயார்க் சென்ற மோடி, அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் உடன் கலந்துரையாடினார். இந்த நிகழ்வில் ஏராளமான அமெரிக்க வாழ் இந்தியர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, "உங்கள் அன்பு எனது அதிர்ஷ்டம்" என அமெரிக்க வாழ் இந்தியர்களிடம் கூறினார்.
அதன்பிறகு நேபாள பிரதமர் கேபி சர்மா ஒலி, பாலஸ்தீனிய அதிபர் மஹ்மூத் அப்பாஸ், ஆகியோரையும் சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள முன்னணி தொழில் நுட்ப நிறுவனங்களுடன் பிரதமர் மோடி இன்று ரவுண்ட் டேபிள் எனப்படும் வட்ட மேஜை மாநாடு நடத்தினார். நியூயார்க்கில் உள்ள லாட்டே பாலேஸ் ஹோட்டலில் இந்த கூட்டம் நடைபெற்றது.
இந்தியாவின் வளர்ந்து வரும் தொழில் நுட்பத்துறை சந்தையில் புதுமை மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. எம்.ஐ.டி ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங் நிறுவனம் ஏற்பாடு செய்து இருந்த இந்த வட்ட மேஜைக் கூட்டத்தில், செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கம்ப்யூட்டிங், செமி கண்டக்டர் மற்றும் பயோடெக்னாலஜி துறையில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர். கூகுள் நிறுவனத்தின் சி இ ஒ சுந்தர் பிச்சை, நிவிடியா நிறுவனத்தின் ஜென்சென் ஹூவாங் மற்றும் அடோப் நிறுவனத்தின் சாந்தனு நரயேன் ஆகியோரும் பங்கேற்றனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications