"அது பெர்சனல் மேட்டர்.." அதானி விவகாரம் குறித்த கேள்விக்கு.. அமெரிக்காவில் இருந்தபடி மோடி பதில்
வாஷிங்டன்: பிரதமர் நரேந்திர மோடி இப்போது அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார். அங்கு பல்வேறு தலைவர்களைச் சந்தித்துப் பேசிய பிரதமர் மோடி, இன்று அதிபர் டிரம்பை சந்தித்தார். இரு தரப்பு சந்திப்பின் போது அதானி விவகாரம் குறித்து ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இது தொடர்பான முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றுள்ள டிரம்ப் தொடர்ச்சியாகப் பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். இதற்கிடையே பல சர்வதேச தலைவர்களையும் அவர் சந்தித்து வருகிறார்.

பிரதமர் மோடி:
அதன்படி இந்தியப் பிரதமர் மோடி இப்போது அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார். அங்கு விவேக் ராமசாமி, எலான் மஸ்க் உள்ளிட்ட பலரையும் பிரதமர் மோடி சந்தித்தார். அதேபோல வெள்ளை மாளிகைக்குச் சென்ற பிரதமர் மோடி, அதிபர் டிரம்பையும் சந்தித்தார். அப்போது இரு தலைவர்களும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் ஆலோசித்தனர். மேலும், முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தானது. அப்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதானி குழுமம் மீது அமெரிக்க அதிகாரிகள் ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருந்த நிலையில், அது தொடர்பாகச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார். இது தொடர்பாகப் பேசிய பிரதமர் மோடி, "நான் முதலில் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். இந்தியா ஒரு ஜனநாயக நாடு.. 'வசுதைவ குடும்பம்', அதாவது உலகம் முழுவதும் ஒரு குடும்பம் என்பதே எங்கள் கலாச்சாரம்.
அதானி விவகாரம்:
அதேநேரம் அதானி விவகாரம் என்பது பெர்சனல் மேட்டர்.. அது ஒரு தனிப்பட்ட நிறுவனம் தொடர்பானது. இரு நாடுகளின் தலைவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தும் போது இதுபோல தனி நபர்கள் குறித்த விஷயத்தில் எதையும் விவாதிக்க மாட்டார்கள்" என்பதுடன் முடித்துக் கொண்டார். மேலும், அந்த செய்தியாளர் சந்திப்பில் வேறு எந்த இடத்திலும் அவர் அதானி விவகாரம் குறித்து எதுவும் பேசவில்லை. செய்தியாளர் சந்திப்பின் போது அதிபர் டிரம்ப் இந்த வழக்கு பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.
புகார் என்ன:
இந்தியாவின் டாப் பணக்காரர்களில் ஒருவரான அதானி குழுமத்திற்குச் சொந்தமான நிறுவனம் ஒன்று இந்தியாவில் உள்ள அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலர்களுக்கு மேல் லஞ்சம் கொடுத்தது என்பதே ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் புகார். இந்தியாவுக்குள் நடந்த லஞ்ச விவகாரத்தை அமெரிக்க அதிகாரிகள் ஏன் விமர்சிக்கிறார்கள் என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். அந்த குறிப்பிட்ட அதானி நிறுவனம் அமெரிக்கப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு இருந்தது. எனவே, அமெரிக்க முதலீட்டாளர்களிடம் பொய் சொல்லி ஏமாற்றியதாகவே அந்த அதிகாரிகள் குற்றஞ்சாட்டி இருந்தனர்.
பின்னணி:
அமெரிக்க முதலீட்டாளர்களின் நலனைக் காப்பாற்றும் பொறுப்பு தங்களுக்கு இருப்பதாலேயே இந்த விவகாரம் குறித்து விசாரிப்பதாகக் கூறியிருந்தனர். இதில் அதானி மீது கிரிமினல் குற்றச்சாட்டைச் சுமத்தி இருந்தனர். இருப்பினும், இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட போதே அது குறித்து பல கேள்விகள் எழுந்திருந்தன. ஏனென்றால் அதானியை விசாரிக்க வேண்டும் என்றால் முதலில் அவரை இந்தியாவில் இருந்து நாடு கடத்த வேண்டும். அதன் பிறகே விசாரணைக்கு எல்லாம் வாய்ப்பு இருந்தது.
மேலும், டிரம்ப் அதிபரான பிறகு இந்த ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை தொடருமோ என்பதே சந்தேகம் எனப் பலரும் கூறியிருந்தனர். அதேபோல டிரம்ப் அதிபரான பிறகு இந்த விவகாரம் அப்படியே கிடப்பில் போடப்பட்டுவிட்டது.












Click it and Unblock the Notifications