மேற்காசிய போருக்கு நடுவே.. திடீரென பிரதமர் மோடிக்கு போன் போட்ட டிரம்ப்.. ஆலோசித்தது என்ன?
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் திடீரென பிரதமர் மோடிக்கு போன் போட்டு பேசியுள்ளார். அப்போது மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது என்பது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எடுத்துரைத்தார். மேலும் இந்திய மக்களை நேசிப்பதாகவும் டிரம்ப் கூறியுள்ளார். மேற்காசிய போருக்கு நடுவே இரு தலைவர்களும் சுமார் 40 நிமிடங்கள் பேசியிருப்பது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையே கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது இரண்டு வாரத்திற்கு தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. எனினும் இது தொடர்பாக பாகிஸ்தானில் நடந்த அமைதி பேச்சுவார்த்தை தோல்வியிலேயே முடிந்தது. இதனால் இன்னும் அமைதி திரும்பவில்லை.
இந்த பரபரப்புக்கு இடையே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பிரதமர் மோடியுடன் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார். இரு தலைவர்களும் சுமார் 40 நிமிடங்கள் உரையாடியுள்ளனர். ஈரான் - அமெரிக்கா இடையே தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு இரு தலைவர்களும் பேசுவது இதுவே முதல் முறையாகும். பாகிஸ்தானில் அண்மையில் ஈரான் - அமெரிக்கா இடையே 21 மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

ஆலோசித்தது என்ன?
இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், ஹார்முஸ் ஜலந்தியை முடக்குவதாக டிரம்ப் அறிவித்தார். இதனால், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மேற்காசியாவில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், டிரம்புடன் பிரதமர் மோடி மேற்கொண்ட உரையாடல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதற்கு முன்பாக கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி டிரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசினார். பின்னர், கடந்த மார்ச் 24 ஆம் தேதி இருதலைவர்களும் ஆலோசனை மேற்கொண்டனர். இன்று நடைபெற்ற உரையாடலில் என்ன விவரங்கள் பேசப்பட்டது என்ற விவரம் தற்போது வரை வெளியிடப்படவில்லை. எனினும், மேற்காசிய போர் விவகாரம், எண்ணெய் விநியோகம் பாதிப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
பிரதமர் மோடி ட்வீட்
பிரதமர் மோடி இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:- எனது நண்பர் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிடம் இருந்து போன் கால் வந்தது. நாங்கள் இருவரும் பல்வேறு துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்பின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தோம்.
அனைத்து துறைகளிலும் எங்கள் முழுமையான உலகளாவிய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த உறுதிபூண்டுள்ளோம். மேற்கு ஆசியாவின் நிலைமை குறித்தும் பேசினோம். ஹார்முஸ் திறந்தும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டிய முக்கியத்துவத்தை வலியுறுத்தினோம்" இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
இந்திய மக்களை நேசிப்பதாக சொன்ன டிரம்ப்
இந்தியாவுக்கான அமெரிக்க தூதரும் இரு தலைவர்களும் தொலைபேசி வாயிலாக உரையாடியதை உறுதி செய்தார். இது தொடர்பாக அமெரிக்க தூதர் கூறுகையில், சில நிமிடங்களுக்கு முன்பாக போனில் டிரம்ப் மற்றும் மோடி பேசினர். மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது என்பது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எடுத்துரைத்தார். அமெரிக்கா - இந்தியா இடையேயான முக்கிய விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்திய மக்களை நேசிப்பதாக இந்த தொலைபேசி உரையாடலின் போது அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார்" இவ்வாறு அவர் கூறினார்.
-
ஜெயித்தே ஆகணும்.. இளம் வாக்காளர்களை விடாதீர்கள்.. பாஜக பூத் கமிட்டிக்கு பிரதமர் மோடி போட்ட உத்தரவு -
அமெரிக்கா - ஈரான் மோதலால் இந்தியாவுக்கு 7 பெரும் சவால்கள்! அபாய மணியடிக்கும் வளைகுடா -
அதிருப்திக்கு நடுவே.. திடீரென தமிழகம் மீது போகஸை திருப்பிய மோடி! நாளை முக்கிய மீட்டிங்.. பின்னணி -
ஜனநாயகன் லீக்.. குற்றவாளிகளை சும்மா விடக்கூடாது! பிரதமர் மோடி தலையிடணும்.. IMPPA சங்கம் டிமாண்ட் -
அதிபர் பதவியை இழக்கும் டிரம்ப்? களத்தில் இறங்கிய அந்த 70 பேர் + மாஜி அமெரிக்க உளவு துறை தலைவர்! -
அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை ரத்தகளறி! தங்கம் - பங்குகள் வீழ்ச்சி, எண்ணெய் உயர்வு? -
கிளைமாக்ஸ் இல்லாத இஸ்லாமாபாத் ‘த்ரில்லர்’: ரிட்டர்ன் ஆன ஜே.டி. வேன்ஸ்.. ஈரான் போர் முடியாது? -
ஈரான் -அமெரிக்கா பேச்சுவார்த்தை! டெல்லிக்குக் கிடைக்காத பவர் பிளே! பாகிஸ்தான் தட்டி சென்றது எப்படி -
அமைதிப் புறா பறக்கவில்லை! அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வி.. அடுத்து என்ன! 4 ஆப்ஷன்கள் -
அமெரிக்கா vs ஈரான்.. இஸ்லாமாபாத்தில் நடக்கும் 'மைண்ட் கேம்'. மிரட்டிய ட்ரம்ப்! பேச்சுவார்த்தை தோல்வி -
கண்கள் சிவந்த டிரம்ப்.. திடீரென சீனா பக்கம் திரும்பி நேரடி வார்னிங்.. உற்று பார்க்கும் உலக நாடுகள் -
ஈரான் பிடிவாதம்.. விடாமல் காய் நகர்த்திய டிரம்ப்.. உலகையே உலுக்கிய அந்த 20 மணி நேரம்.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications