தடுப்பூசி அளிக்கும் பணிகளில் பாதிப்பு... 500 தடுப்பூசி டோஸ்களை வீணாக்கியவர் அமெரிக்காவில் கைது
வாஷிங்டன்:அமெரிக்காவில் வேண்டுமென்றே சுமார் 500 கொரோனா தடுப்பு மருந்துகளை ஒருவர் வீணாக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் ஃபைசர் மற்றும் மாடர்னா தடுப்பு மருந்துகளின் அவசரக்கால பயன்பாட்டிற்குக் கடந்த மாதம் அனுமதியளிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து அந்நாடு முழுவதும் தடுப்பு மருந்து அளிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அதன்படி அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்திலுள்ள அரோரா மருத்துவ மையத்தில் தடுப்பு மருந்துகள் சேமிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

தடுப்பு மருந்துகள் வீண்
இந்நிலையில், அரோரா மருத்துவ மையத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் அங்கிருந்த சுமார் 57 தடுப்பூசி குப்பிகளை வீணாக்கியுள்ளார். ஒரு குப்பியில் 10 தடுப்பு மருந்து டோஸ்கள் இருக்கும். அவர் அந்த குப்பிகளைக் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து வெளியே எடுத்து வைத்துள்ளார். முதலில் ஏதோ தவறுதலாக இச்செயலை அவர் செய்துள்ளார் என்றே அங்கிருந்தவர்கள் கருதியுள்ளனர்.

வேண்டுமென்றே செய்தார்
இருப்பினும், மீண்டும் ஒரு முறை அவர் இதே செயலில் ஈடுபட்டதால், இது குறித்து உயர் அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின்போது அவர் வேண்டுமென்றே தடுப்பு மருந்துகளை வீணாக்கும் செயல்களில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் அரோரா மருத்துவ மையத்திலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.

எஃப்.பி.ஐ விசாரணை
அந்த நபர் குறித்த கூடுதல் தகவல்கள் வெளியிடப்படவில்லை. மேலும், தற்போது வரை அவர் ஏன் இந்த மாதிரியான செயல்களில் ஈடுபட்டார் என்பதற்கான காரணங்களும் கண்டறியப்படவில்லை. இது குறித்து அவரிடம் விசாரணை நடத்த, எஃப்.பி.ஐ அதிகாரிகள் மருத்துவ மையத்திற்கு விரைந்துள்ளனர்.

மாடர்னா தடுப்பு மருந்து
அவர் மாடர்னா நிறுவனத்தின் தடுப்பு மருந்து குப்பிகளை வீணாக்கியுள்ளார். மாடர்னா நிறுவனத்தின் தடுப்பு மருந்தை மிகக் குறைந்த வெப்ப நிலையில் ஆறு மாதங்கள் வரை சேமிக்க முடியும், சாதாரண பிரிட்ஜ்களில் சுமார் 30 நாட்கள் வைத்திருக்க முடியும். அதேபோல அறையின் வெப்ப நிலையில் சுமார் 12 மணி நேரம் வரை வைத்திருக்க வேண்டும். ஆனால், ஒரு முறை அதை வெளியே எடுத்துவிட்டால், மீண்டும் அதை பிரிட்ஜில் வைத்து உறைய வைக்க முடியாது. இந்த மாடர்னா நிறுவன்தின் 57 குப்பிகளை அவர் பிரிட்ஜில் இருந்து வெளியே எடுத்துள்ளார். அவற்றில் மிகச் சிலவற்றைத் தவிர மற்றவற்றைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் விஸ்கான்சின் மாகாணத்தில் சுமார் 3,810 பேருக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த மாகாணத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்தை தாண்டியுள்ளது. அதேபோல கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் ஐந்தாயிரத்தைத் தாண்டியுள்ளது.

சிறு பின்னடைவு
கடந்த 12 நாட்களில் மட்டும் சுமார் 17 ஆயிரம் பேருக்குத் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாக அரோரா சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த நபரின் செயலால் தடுப்பு மருந்து வழங்கும் பணிகளில் தற்காலிகமாகச் சிறு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
அமெரிக்க பொருளாதாரம் அபாயத்தில் உள்ளதா? ஜகா வாங்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்.. வெளியானது முக்கிய அறிகுறி! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications