இந்த ஏஐ மாடல் மனித குலத்திற்கே ஆபத்து! சாட்ஜிபிடி அடுத்த பாய்ச்சல் Q*.. உருவாக்கியவர்களே பரபர கடிதம்
வாஷிங்டன்: ஏஐ மாடல்கள் அடுத்தடுத்து பாய்ச்சலை நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், இது மனிதக் குலத்திற்கே ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என்று அந்த நிறுவனத்தின் ஊழியர்களே வார்னிங் கடிதம் எழுதியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாட்ஜிபிடி நிறுவனத்தின் நடக்கும் சம்பவம் குறித்து சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள செய்தி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. சாட் ஜிபிடியை உருவாக்கிய ஓபன் ஏஐ நிறுவனத்தில் இப்போது பரபர சம்பவம் நடந்துள்ளது.

அங்கே பணியாற்றும் சில ஆய்வாளர்களே அந்த நிறுவனம் சமீபத்தில் உருவாக்கியுள்ள சக்திவாய்ந்த செயற்கை நுண்ணறிவு மாடல் குறித்து கவலை எழுப்பியுள்ளனர். இது மனிதக் குலத்திற்கே சவால் விடுப்பதாக இருந்துவிடுமோ என்பதே அவர்கள் அச்சம்.
சாட்ஜிபிடி: ஓபன் ஏஐ நிறுவனத்தில் பணிபுரியும் ஆய்வாளர்கள் இப்போது Q* எனப்படும் மாடலை உருவாக்கியுள்ளனர். இந்த மாடல் இதுவரை இல்லாத வகையில் பல சிக்கலான மற்றும் குழப்பும் கணித சிக்கல்களைத் தீர்த்துள்ளது. சாதாரண கணக்கு தானே என்று நினைக்க வேண்டாம். இது ஏஐ உலகில் மிகப் பெரிய சாதனையாகவே கருதப்படுகிறது.
இந்த Q* குறித்து ஓபன் ஏஐ நிறுவனம் தனது இணையத்தில் விளக்கியுள்ளது Q ஸ்டார் என்று அழைக்கப்படும் இந்த ஏஐ மாடல் இதுவரை உருவாக்கிய ஏஐ மாடல்களில் இருந்து வேறுபட்டே இருக்கிறது. சிக்கலான கணித கணக்குகளையும் அடிப்படை கணிதத்தையும் இது எளிமையாக கையாள்கிறது. இதுவரை ஏஐ மாடல்கள் எதுவும் இதைச் செய்ததே இல்லை. இது ஓபன் ஏஐ ஊழியர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர்கள் இது தொடர்பாக சாம் ஆல்ட்மேனுக்கு கடிதமும் எழுதியுள்ளனர்.
மனிதக் குலத்திற்கே சிககல்: இந்த ஏஐ மாடலை கவனமாகக் கையாளாவிட்டால் அது மனிதக் குலத்திற்கே எதிரானதாக மாறிவிடும் என்று அவர்கள் எச்சரிக்கிறார்கள். இவை எல்லாம் சாம் ஆல்ட்மேன் ஓபன் ஏஐ சிஇஓ பதவியில் இருந்து நீக்கப்படுவதற்கு முன்பு நடந்தவை.
ஓபன் ஏஐ ஊழியர்கள் அனைவரும் ராஜினாமா செய்யப் போவதாக எச்சரித்த நிலையில், சாம் ஆல்ட்மேன் மீண்டும் சிஇஓவாக நியமிக்கப்பட்டார். இது தனிக் கதையாக இருந்தாலும் Q* குறித்து அதே ஊழியர்கள் எழுதிய கடிதம் தான் இப்போது பேசுபொருளாக இருக்கிறது.
அந்த நிறுவனத்திற்கு வெளியேயும் கூட பொதுவாகவே ஓபன்ஏஐ போன்ற நிறுவனங்கள் செயற்கை பொது நுண்ணறிவை உருவாக்குவதில் அவசரம் காட்டுவதாகப் பல வல்லுநர்கள் கவலைப்படுகிறார்கள். இந்த ஏஐ மனிதர்களைச் செய்யும் செயல்கள் மட்டுமின்றி மனிதர்களைச் செய்யவே முடியாத செயல்களையும் அசால்டாக செய்கிறது. இதனால் எங்கே மனிதர்களுக்கு எதிராகவே இந்த ஏஐ மாடல்கள் செயல்படுமோ என்ற அச்சம் இருந்து கொண்டே தான் இருக்கிறது.
Q* மாடல்: ஏஐ மாடல்களை பொறுத்தவரைக் கணித சிக்கல்களைச் சரி செய்வது என்பது மிக பெரிய காரியம். இந்த Q* மாடல் வளர்ச்சி குறித்து சாம் ஆல்ட்மேன் சில வாரங்களுக்கு முன்பே கூட்டம் ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். தற்போது தாங்கள் புதிய ஏஐ மாடலை உருவாக்கியுள்ளதாகக் குறிப்பிட்ட சாம் ஆல்ட்மேன், இது ஏஐ மாடல்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்பதில் சந்தேகமே இல்லை என்றும் குறிப்பிட்டார்
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications