வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குவாட்.. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு: கொரோனா குறித்து ஆலோசனை

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட, நான்கு நாடுகளின் குவாட் தலைவர்கள் நேற்று அமெரிக்கா தலைநகர் வாஷிங்டன்னில் முதன்முறையாக நேரில் சந்தித்தனர். அங்கு அவர்கள் கோவிட் -19 முதல் பருவநிலை மாற்றம் வரை உலகம் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் குறித்து விவாதித்தனர்.

உரையை ஆரம்பித்து வைத்த, பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் ஜோ பிடனுக்கு குவாட் கூட்டத்தை நடத்தியதற்கு நன்றி தெரிவித்தார்.

ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் மற்றும் ஜப்பானியப் பிரதமர் யோஷிஹைட் சுகா ஆகியோரும் இதில், கலந்து கொண்டனர்.

அஞ்சு பைடன் இந்தியாவுல.. அமெரிக்க அதிபர் சொன்ன ஜோக்.. உடனே செம்ம கவுண்டர் கொடுத்த மோடி அஞ்சு பைடன் இந்தியாவுல.. அமெரிக்க அதிபர் சொன்ன ஜோக்.. உடனே செம்ம கவுண்டர் கொடுத்த மோடி

பிரதமர் மோடி பேச்சு

பிரதமர் மோடி பேச்சு

பிரதமர் மோடி கூறுகையில், "இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கு உதவுவதற்காக நமது நான்கு நாடுகளும் 2004ம் ஆண்டு, சுனாமிக்குப் பிறகு முதல் முறையாக சந்தித்துள்ளோம். இன்று, உலகம் கொரோனா தொற்றுநோய்க்கு எதிராக போராடும் போது, ​​நாம் மீண்டும் மனிதகுல நலனுக்காக ஒன்றிணைந்து வந்துள்ளோம்" என்று மோடி அப்போது கூறினார்.

இந்தோ பசிபிக்

இந்தோ பசிபிக்

"நமது குவாட் அமைப்பு, தடுப்பூசி சப்ளை விஷயத்தில் இந்தோ-பசிபிக் நாடுகளுக்கு பெரிதும் உதவும். குவாட்டில் நமது பங்களிப்பு உலகில் அமைதியையும் செழிப்பையும் நிலைநாட்டும் என்ற நம்பிக்கை உள்ளது." என்றும் மோடி தெரிவித்தார்.

Recommended Video

    Modi US Visit | மோடியின் Boeing 777-க்கு Pakistan அனுமதி | Oneindia Tamil
    ஜோ பிடன்

    ஜோ பிடன்

    அமெரிக்க அதிபர் ஜோ பிடன், தனது தொடக்க உரையில், நான்கு ஜனநாயக நாடுகளான அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான், கொரோனா முதல் காலநிலை வரை பொதுவான சவால்களை எதிர்கொள்ள ஒன்றாக வந்துள்ளன என்றார். "எப்படி செயல்படுவது என்று நமக்கு தெரியும், சவாலை எதிர்கொண்டு வருகிறோம்," என்று அவர் கூறினார்.

    ஆஸ்திரேலிய பிரதமர்

    ஆஸ்திரேலிய பிரதமர்

    ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் பேசுகையில் "இந்தோ-பசிபிக் பெரும் சவால்களைக் கொண்டுள்ளது. சவால்களை சமாளிக்க வேண்டும். குவாட் நாடுகளின் கடைசி சந்திப்பு முடிந்து 6 மாதங்களில் நிறைய சாதிக்கப்பட்டுள்ளது. பசிபிக் மண்டலத்தில் நாம் ஒற்றுமையாக உள்ளோம்" என்று தெரிவித்தார்.

    English summary
    Quad leaders from four countries, including Indian Prime Minister Narendra Modi, met for the first time in the US capital, Washington, yesterday. There they discussed the major challenges facing the world from Govt-19 to climate change.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X