இந்தியாவை அழிப்பார்களாம்.. முகேஷ் அம்பானி படத்தோடு மிரட்டிய பாக். ராணுவ தளபதி.. பின்னணி

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அடுத்த முறை போர் வந்தால் இந்தியாவை இப்படித்தான் அழிப்போம் என்று குரானில் இருக்கும் குட்டிக்கதையை சுட்டிக்காட்டி பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீர் அமெரிக்காவில் பேசியிருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் குரானில் இருப்பதை அவர் சுட்டிக்காட்டி அசீம் முனீர் பேசியிருப்பது பரபரப்பை கிளப்பி உள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நம் நாடு பாகிஸ்தானை பந்தாடியது. மே 7 முதல் மே 10ம் தேதி வரை நடந்த போரில் பாகிஸ்தான் கதிகலங்கியது. நம் நாடு அடித்த அடியில் பாகிஸ்தான் கதறியது. கடைசியில் மே 10ம்தேதி எங்களை தாக்க வேண்டாம் என்று காலில் விழுந்து கதறியது.

quranic-verse-with-the-picture-of-mukesh-ambani-how-pakistan-army-chief-asmi-munir-threatens-to-tar

இதையடுத்து பாவம் பார்த்து நம் நாடு பாகிஸ்தானை அழிக்காமல் விட்டது. ஆனால் இப்போது பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீர் பாகிஸ்தானுடன் சேர்ந்து கொண்டு நம்மை சீண்ட தொடங்கி உள்ளான்.

அமெரிக்காவில் அசீம் முனீர்

பாகிஸ்தானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான உறவு தற்போது அதிகரித்துள்ளது. நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் முடிந்த சில வாரங்களிலேயே டொனால்ட் டிரம்ப், பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீரை வெள்ளை மாளிகைக்கு அழைத்து மதிய விருந்து வழங்கினார்.

இது நம் நாட்டுக்கு எச்சரிக்கை மணியாக பார்க்கப்பட்டது. இப்போது மீண்டும் அசீம் முனீர் பாகிஸ்தான் சென்றுள்ளார். புளோரிடா மாகாணம் டம்பாவில் புலம்பெயர் பாகிஸ்தானியர்கள் நடத்திய டின்னர் நிகழ்ச்சியில் அசீம் முனீர் பங்கேற்றான்.

அணுஆயுத மிரட்டல்

அதன்பிறகு மூடிய அரங்கில் அசீம் முனீர் வாய்ச்சவடால் விடுத்தான். நம் நாட்டுக்கு எதிராக விஷம வார்த்தைகளை உதிர்ந்தான். அதோடு, அணுஆயுத மிரட்டலும் விடுத்தான். அதில் அசீம் முனீர் பேசுகையில், ‛‛சிந்து நதியின் குறுக்கே இந்தியா அணை கட்டட்டும் என்று காத்திருக்கிறோம். அந்த அணையை கட்டி முடித்ததும் 10 ஏவுகணைகளை வைத்து தகர்ப்போம்.

சிந்து நதி என்ன இந்தியாவின் குடும்ப சொத்தா. பாகிஸ்தானிடம் ஏவுகணைகளுக்கு பஞ்சம் இல்லை. ஒருவேளை பாகிஸ்தான் வீழ்த்தப்படுவதாக நாங்கள் நினைத்தால், எங்களுடன் சேர்ந்து உலகின் பாதி நாடுகளை அழித்து விடுவோம். ஏனென்றால் பாகிஸ்தான் அணு ஆயுத நாடு'' என நம்மிடம் மண்டியிட்டதை மறந்து வாய்க்கொழுப்புடன் பேசினான்.

குரானை சுட்டிக்காட்டி..

மேலும் அவன், இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை சுட்டிக்காட்டி நம் நாட்டுக்கு எதிராக பேசினான். குரானில் வரும் சூரா ஃபில் மற்றும் தொழிலதிபர் முகேஷ் அம்பானி படத்தை குறிப்பிட்டு இந்தியாவை தாக்குவோம். விலை மதிப்பற்ற வளங்களை குறிவைத்து தாக்குவோம்.

இந்தியாவுடன் மோதல் ஏற்படும் போது அடுத்து பாகிஸ்தான் என்ன செய்யப்போகிறது என்பதை மனதில் வைத்து இந்த வார்த்தையை கூறினான். அதாவது குஜராத் ஜாம் நகரில் கடலையொட்டி முகேஷ் அம்பானியின் கச்சா எண்ணெய் சுத்திகரிகரிப்பு மையம் உள்ளது. கடல் மற்றும் வான்வெளி தாக்குதல் மூலமாக இந்த இடத்தை எளிதாக தாக்க முடியும் என்று அசீம் முனீர் கூறியுள்ளான்.

சூரா ஃபில் என்பது என்ன?

மேலும் சூரா ஃபில் என கூறியதன் பின்னணியில் முக்கிய மேட்டர் உள்ளது. இஸ்லாமியர்களின் குரானில் சூரா ஃபில் என்று ஒரு அம்சம் இருக்கிறது. 105வது அத்தியாயத்தில் சூரா ஃபில் வருகிறது. சூரா ஃபில் என்றால் யானைகளை குறிக்கும். இது வான்வெளி தாக்குதலின் மகத்துவதை குறிக்கும் வகையில் உள்ளது. அதாவது சுமார் கிபி 573ம் ஆண்டில் ஏமன் நாட்டின் மன்னர் அப்ரகா தனது வீரர்கள் மற்றும் யானை படையுடன் படையெடுத்து செல்வார்.

இஸ்லாமியர்களின் புனித இடமான காபாவை அழிக்க வேண்டும் என்று முன்னேறி போவார். அப்போது அல்லா அந்த யானை படையை வீழ்த்த பறவைகள் கூட்டத்தை அனுப்பி வைத்ததாகவும், இந்த பறவைகள் சிறிய கற்களுடன் வானில் பறந்து அதனை யானைகள் மீது வீசியதாகவும், இதில் யானை படைகள் பயந்து ஓடியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விளக்கம் இதுதான்

இதன்மூலம் இந்தியாவின் பொருளாதாரத்தை அழிப்போம் என்பதை தான் அவர் குரான் வசனத்துடன் ஒப்பிட்டு சொல்லி உள்ளான். இதை தான் இந்தியாவுக்கு நினைவுப்படுத்தும் விதமாக சூரா ஃபீல், அம்பானி படத்தை சேர்த்து கூறியுள்ளார்.

அதாவது, அம்பானி இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர். அவரை நம் நாட்டின் பொருளாதாரத்துக்கு உவமையாக சுட்டிக்காட்டினார். சூரா ஃபில் யானை கூட்டத்தை சிறிய பறவைகள் எப்படி அழித்தனவோ, அதே போல் இந்தியாவின் பெரும் பொருளாதாரத்தை பாகிஸ்தான் அழிக்கும் என்பதை தான் அசீம் முனீர் கூறியுள்ளான்.

முதல் முறையாக இப்படி..

மேலும் தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ஆர்ஐஎல் எனும் கச்சா எண்ணெய் சுத்திரிகரிப்பு மையம் அமைந்துள்ளது. இங்கு தாக்குதல் நடத்துவோம் என்பதை தான் அசீம் முனீர் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளான். நம் நாட்டின் பொருளாதாரத்துக்கான உள்கட்டமைப்பை குறிவைத்து அசீம் முனீர் பேசுவது இதுதான் முதல் முறை. குறிப்பாக கச்சா எண்ணெய் சுத்தகிரிப்பு மையத்தை அவன் டார்க்கெட் செய்துள்ளான்.

இதனால் நம் நாடு சுதாரித்து அசீம் முனீரின் வாய்ச்சவடாலுக்கு செக் வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இப்படி பேசி உள்ள பேசிய அசிம் முனீர் ஒரு மத பழமைவாதி. இது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளதால் நம் நாடு சுதாரித்து அசீம் முனீரின் வாய்ச்சவடால் மட்டும் பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+