டிரம்பிடம் ரஷ்ய அதிபர் புதின் வைத்த டிமாண்ட்.. வாய்ப்பே இல்லை என சொன்ன ஜெலன்ஸ்கி.. என்ன நடந்தது?
வாஷிங்டன்: உக்ரைனின் முக்கிய பகுதிகளில் ஒன்றாக உள்ள டொனெட்ஸ்க் (Donetsk) பிராந்தியத்தை முழுவதுமாக அந்த நாடு விட்டுத்தர வேண்டும் என்று புதின் கூறியதாகவும், இதனை ஏற்க உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மறுத்துவிட்டதாகவும் பரபர தகவல் வெளியாகியுள்ளது. டிரம்ப் - ஜெலன்ஸ்கி சந்திப்பு நாளை நடைபெற உள்ள சூழலில், நாளை போர் நிறுத்தம் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் எதும் வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
உக்ரைன் மீது கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா போர் தொடுத்தது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போரை தொடங்கியது. 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

டிரம்ப் புதின் பேச்சுவார்த்தை
அந்த வகையில், டிரம்பும் - புதினும் அமெரிக்காவின் அலாஸ்காவில் நேற்று முன் தினம் பேச்சுவார்த்தை நடத்தினர். உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து ஆலோசித்தனர். இந்த சந்திப்பு சுமார் 2½ மணி நேரம் நடந்தது. டிரம்ப் - புதின் இடையேயான பேச்சுவார்த்தையில் உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக என்ன முடிவுகள் வெளியாகும் என்று உலகம் முழுவதும் மிகவும் எதிர்பார்ப்பு நிலவியது.
ஆனால் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்த சந்திப்பு முடிவு ஏதும் எட்டப்படாமலேயே நிறைவு பெற்றது. அதே வேளையில் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதாக இரு தலைவர்களும் தெரிவித்தனர். மூடிய அறைக்குள் நடந்த பேச்சு வார்த்தைக்கு பிறகு டிரம்பும், புதினும் கூட்டாக பேட்டி அளித்தனர். எங்களது பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
எல்லாம் ஜெலன்ஸ்கி கையில் தான் உள்ளது
முடிவு எட்ட வேண்டுமானால் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் நான் பேச வேண்டும். அவர் உடன்பாட்டுக்கு ஒத்துக்கொண்டால் அனைத்தும் முடிவுக்கு வரும். இனி எல்லாம் ஜெலன்ஸ்கியின் கையில் உள்ளது என்று டிரம்ப் கூறியிருந்தார். தொடர்ந்து அவர் அடுத்தக்கட்ட கூட்டம் பற்றி பேசும்போது, குறுக்கிட்ட புதின், அடுத்த சந்திப்பு மாஸ்கோவில் நடக்கும் என்று கூறினார். அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புதின் இடையே நடக்கும் பேச்சுவார்த்தை உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் என்று அனைவரும் எதிர்பார்த்து இருந்தனர்.
ஆனால் எந்த முடிவும் எட்டப்படாதது ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாக உலக தலைவர்கள் கருதுகிறார்கள். இதற்கிடையே, டிரம்பிடம் நடந்த பேச்சுவார்த்தையின் போது புதின் சில முக்கியமான கோரிக்கைகளை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது உக்ரைனின் தொழில் துறை பகுதியாக உள்ள டொனெட்ஸ்க் பகுதியை உக்ரைன் விட்டுக்கொடுத்தால், போரை நிறுத்த தயார் என்று புதின் கூறியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
திட்டவட்டமாக மறுத்த ஜெலன்ஸ்கி
இதை ஜெலன்ஸ்கியிடம் எடுத்துக்கூறிய போது அவர் திட்டவட்டமாக மறுத்துவிட்டார் எனவும் கூறப்படுகிறது. அதாவது, ஜெலன்ஸ்கியிடம் பேசிய டிரம்ப், டோன்ஸ்டேக்கில் இருந்து உக்ரைன் பின் வாங்கினால், ரஷ்ய படைகள் மேற்கொண்டு முன்னேறாது என்று புதின் கூறியதை கூறினாராம். ஆனால் இதனை ஏற்க முடியாது என்று ஜெலன்ஸ்கி கூறியிருக்கிறார். உக்ரைனின் 20 சதவீத பகுதிகளை ரஷ்யா தற்போது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
டிரம்ப் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை
இதற்கிடையே, டிரம்ப் சனிக்கிழமை அளித்த பேட்டியில் கூறுகையில், "ரஷ்யா சக்தி வாய்ந்த நாடு. எனவே, ரஷ்யாவுடன் போரை நிறுவத்துவது தொடர்பாக உக்ரைன் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும்" என்றார். உக்ரைனின் ஐந்தில் ஒரு பகுதியை ஏற்கனவே ரஷ்யா தனது கட்டுப்பாடில் வைத்துள்ளது. டொனெட்ஸ்க் மாகாணத்திலும் பெருமளவு பகுதியை ரஷ்யா தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இங்கு 2014 ஆம் ஆண்டு ரஷ்யா நுழைந்துள்ளது.
டிரம்பை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நாளை சந்தித்து பேச இருக்கிறார். வாஷிங்டன்னில் இந்த சந்திப்பானது நடைபெறுகிறது. இந்த சந்திப்பின் போது புதினிடம் பேசியது தொடர்பாக நேரடியாக ஜெலன்ஸ்கியிடம் பேச இருக்கிறார்.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications