புதிது புதிதாக தோன்றும் ஓமிக்ரான் வேரியண்ட்கள்.. ஒரிஜினல் ஓமிக்ரானை விட வேகமாக பரவுகிறதாம்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ஓமிக்ரான் பரவல் தற்போது தான் மெல்லக் குறைந்து வரும் சூழ்நிலையில், ஓமிக்ரானில் சில புதிய வேரியண்ட்கள் குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவ. மாத இறுதியில் ஓமிக்ரான் என்ற புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டது. இது டெல்டாவை காட்டிலும் மிக வேகமாகப் பரவுவதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

அதன்படி இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் இந்த ஓமிக்ரான் கொரோனா 3ஆம் அலையை ஏற்படுத்தியது. இருப்பினும், இந்த ஓமிக்ரான் பெரும்பாலும் லேசான கொரோனா பாதிப்பையே ஏற்படுத்துவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்,

ஓமிக்ரான்

ஓமிக்ரான்

மேலும், இந்த ஓமிக்ரான் குறித்த ஆய்வுகள் உலகெங்கும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே ஓமிக்ரான் கொரோனாவிலும் சில புதிய வேரியண்ட்கள் தோன்றியுள்ளதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த புதிய வேரியண்ட்கள் முதலில் கண்டறியப்பட்ட ஓமிக்ரானை விட வேகமாகப் பரவுவதாகவும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல ஏற்கனவே கொரோனாவில் இருந்து குணமடைந்தோருக்கும் இந்த ஓமிக்ரான் பாதிப்பு மீண்டும் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

கோரிக்கை

கோரிக்கை

உலகின் பல்வேறு நாடுகளிலும் ஓமிக்ரான் அலையுடன் இந்த பெருந்தொற்று முடிந்துவிடும் என்றே மக்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில், இந்த ஆய்வு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. மறுபுறம் கொரோனா பரவல் காரணமாகத் தொடர்ந்து அமல்படுத்தப்படும் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளால் பொதுமக்கள் மிகவும் சோர்வடைந்துவிட்டனர். எனவே, கொரோனாவையும் மற்ற எண்டமிக் நோய்களைப் போல கருதி ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அதிகரித்து வருகிறது.

 ஆன்டிபாடிகள்

ஆன்டிபாடிகள்

அதேபோல ஓமிக்ரான் பரவல் ஏற்படும் நோயாளிகளின் உடலில் ஏற்படும் ஆன்டிபாடிகள் வைரசின் தீவிரதன்மையை பொறுத்தும் மாறுகிறது என்று கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, ஓமிக்ரானில் இருந்து மீண்ட நபர்களுக்கும் கூட மீண்டும் வைரஸ் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல நோயில் இருந்து குணமடையும்போது பெறப்படும் இயற்கையான நோயெதிர்ப்பு சக்தியும் வேக்சின் தடுப்பாற்றலுடன் ஒப்பிடுகையில் மூன்றில் ஒரு பங்காகவே உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆதிக்கம்

ஆதிக்கம்

அதேபோல மற்றொரு ஆய்வில் புதிதாக கண்டறியப்பட்டுள்ள ஸ்டெல்த் ஓமிக்ரான் எனப்படும் BA.2 ஓமிக்ரான் வகை தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட ஓமிக்ரானை விட வேகமாகப் பரவுவதாகவும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். டென்மார்க் நாட்டின் சில பகுதிகளில் ஏற்கனவே இந்த ஸ்டெல்த் ஓமிக்ரான் ஆதிக்கம் செலுத்தும் கொரோனா வகையாக மாறிவிட்டதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 பூஸ்டர் டோஸ்

பூஸ்டர் டோஸ்

குறிப்பாக வேக்சின் போட்டுக் கொள்ளாதவர்கள் மத்தியில் தான் இந்த வகை ஓமிக்ரான் பாதிப்பு மிக அதிகமாக உள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக கடந்த வாரம் இங்கிலாந்து சுகாதார அதிகாரிகள் வெளியிட்ட ஆய்வு முடிவுகளிலும் இந்த ஸ்டெல்த் ஓமிக்ரான் முந்தைய வகைகளுடன் ஒப்பிடுகையில் வேகமாகப் பரவுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், பூஸ்டர் டோஸ் ஸ்டெல்த் ஓமிக்ரானுக்கு எதிராக நல்ல முறையில் பாதுகாப்பு அளிப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Recommended Video

    NeoCov எப்படிப்பட்டது? | Data Analyst Vijayanand | Oneindia Tamil
     கொரோனா வேக்சின்

    கொரோனா வேக்சின்

    உலகெங்கும் தற்போது வரை தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட BA.1 ஓமிக்ரான் வகை தான் ஆதிக்கம் செலுத்தும் வகையாக உள்ளது. இருப்பினும், சமீப காலங்களில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, டென்மார்க் உள்ளிட்ட சில நாடுகளில் இந்த BA.2 ஸ்டெல்த் ஓமிக்ரான் பாதிப்பு அதிகரித்தே வருகிறது. தற்போது வரை வேக்சின் போட்டுக் கொண்டவர்களுக்குத் தீவிர பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் குறைவாகவே ஏற்படுவதால் அனைவரும் விரைவில் வேக்சின் போட்டுக் கொள்ள வேண்டும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்,

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+