வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரஷ்யா சீனா... தடுப்பு மருந்து...கொரோனாவை கட்டுப்படுத்தாது... வல்லுநர்கள் கருத்து!!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: ரஷ்யா, சீனா கண்டுபிடித்து இருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகளில் போதிய எதிர்ப்பு சக்தி இல்லை என்று தெரிய வந்துள்ளது. இந்த மருந்துகள் சாதாரண சளியை உருவாக்கும் வைரஸ்களில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸை கட்டுப்படுத்தாது என்று மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சீனாவில் கேன்சைனோ கண்டுபிடித்து இருக்கும் கொரோனா தடுப்பு மருந்து தற்போது அந்த நாட்டின் ராணுவ வீரர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பு மருந்து சளியை உருவாக்கும் சாதாரண வைரஸான adenovirus type 5ல் இருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இன்னும் இறுதிக்கட்ட சோதனையை முடிப்பதற்கு முன்பாக பல்வேறு நாடுகளுடன் இந்த மருந்துக்கான ஒப்பந்தத்தில் சீனா ஈடுபட்டு இருக்கிறது.

Russia and China covid 19 vaccine finds potential shortcomings to cure the disease

இதேபோல் ரஷ்யாவின் கமலியா நிறுவனம் தயாரித்து இருக்கும் தடுப்பு மருந்துக்கும் மாஸ்கோ அனுமதி அளித்துள்ளது. இந்த மருந்தும் சாதாரண சளியை ஏற்படுத்தும் adenovirus type 5ல் இருந்துதான் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுவும் இறுதிக் கட்ட சோதனையில்தான் இருக்கிறது.

இதுகுறித்து ஹாப்கின்ஸ் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர் அன்னா டர்பின் கூறுகையில், ''adenovirus type 5க்கு எதிராக பலருக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது. அவர்களது தந்திரம் என்னவென்பது எனக்குத் தெரியவில்லை. இந்த மருந்துகளால் 70% எதிர்ப்பு சக்தி கூட கிடைக்காது. இந்த மருந்துகளில் 40% நோய் எதிர்ப்பு சக்தி வேண்டுமானால் கிடைக்கலாம். நல்ல மருந்து சந்தைக்கு வரும் வரை இந்த மருந்தே சிறந்தது என்று நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்'' என்று தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு 8,45,000 பேரை இழந்து இருக்கும் நிலையில் விரைவில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. ஆனால், கொரோனா வைரஸ் உருமாற்றம் அல்லது பிறழ்வு காரணமாக இது சாத்தியமில்லாமல் இருக்கிறது.

இது என்னங்க அநியாயம்.. அவருக்கு அத்தனை கோடி.. எனக்கு இவ்ளோ கம்மியா? கொதித்தெழுந்த பிரபல நடிகர்!

இந்த நிலையில் ரஷ்யாவில் இருந்து வெளிவர இருக்கும் இரண்டு கொரோனா தடுப்பு மருந்துகளும் கொரோனாவை முழுவதும் கட்டுப்படுத்தாது. சாதாரண சளியை உண்டாக்கும் வைரஸில் இருந்துதான் உருவாக்கப்பட்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது. ரஷ்யாவின் கமாலியா சீனாவின் கேன்சைனா இரண்டும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக எபோலாவுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் இறங்கியுள்ளன.

English summary
Russia and China covid 19 vaccine finds potential shortcomings to cure the disease
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X