முரண்டு பிடிக்கும் டிரம்ப்.. எதிர்பாராத நேரத்தில் அமெரிக்காவுக்கு ரஷ்யா அனுப்பிய டீல்? என்ன மேட்டர்
மாஸ்கோ: மத்திய கிழக்கில் மோதல் 4வது வாரமாகத் தொடரும் சூழலில், இந்த மோதலில் ஈரானுக்கு ரஷ்யா உளவுத் தகவல்களைக் கொடுத்து வருவதாகச் சொல்லப்படுகிறது. இதற்கிடையே உளவுத் தகவல்கள் தருவதை நிறுத்த ரஷ்யா சில கண்டிஷன்களை முன்வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து நாம் பார்க்கலாம்!
அமெரிக்கா- இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் தொடர்ந்து நடந்து வருகிறது. கமேனி உயிரிழந்த உடனேயே இந்த மோதல் முடிவுக்கு வந்துவிடும் என அமெரிக்கா எதிர்பார்த்தது. இருப்பினும், ஈரான் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருவதால் போர் தொடர்கிறது. ஈரான் முக்கியமான இலக்குகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி வருகிறது.

ஈரானுக்கு உதவும் ரஷ்யா
சமீபத்தில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கத் தளங்களைக் குறிவைத்து ஈரான் துல்லியமாகத் தாக்கியது. இந்த தாக்குதல் பலருக்கும் ஆச்சரியத்தையே கொடுத்தது. ஏனென்றால் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கத் தளங்களை இந்தளவுக்குத் துல்லியமாகக் குறிவைக்கும் அளவுக்கு ஈரானுக்கு உளவுத் தகவல்கள் எப்படிப் போனது என்பதே பலருக்கும் மிகப் பெரிய கேள்வியாக இருந்தது. இந்த இடத்தில் தான் ஈரானுக்கு ரஷ்யா உதவி இருக்குமோ என்று அஞ்சப்படுகிறது.
அதாவது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் குறித்த தகவல்களை ஈரானிடம் ரஷ்யா கொடுத்துத் தாக்குதலுக்கு உதவி இருக்கும் என அஞ்சப்படுகிறது. இதற்கிடையே அமெரிக்காவிடம் ரஷ்யா மிக முக்கியமான ஒரு டீலை கொடுத்துள்ளது. அதாவது உக்ரைனுக்கு உளவுத் தகவல்களை அமெரிக்கா நிறுத்திவிட்டால்.. ஈரானுக்கு உளவுத் தகவல்களை ரஷ்யா தராது என டீல் பேசப்பட்டதாகத் தெரிகிறது.
இரு பேரும் போர்கள்
அதாவது இப்போது உலகில் இரு முக்கிய போர்கள் நடந்து வருகிறது. ஒரு பக்கம் ரஷ்யாவும் உக்ரைனும் சண்டையிட்டு வருகிறது. கடந்த 2022ல் ஆரம்பித்த இந்த மோதல் இன்னும் தொடர்கிறது. இதை முடிவுக்குக் கொண்டு வரப் பலரும் முயன்று பார்த்தார்கள். டிரம்ப் கூட இதில் தலையிட்டார். ஆனாலும் முடிவுக்குக் கொண்டு வரவில்லை. இதில் உக்ரைனுக்குத் தேவையான ஆயுதங்களையும் உளவு டேட்டாவையும் அமெரிக்கா தொடர்ந்து வழங்கி வருகிறது.
இன்னொரு பக்கம் தற்போது தீவிரமடைந்துள்ள அமெரிக்கா- இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மோதல். இந்த போரில் ஈரானுக்குப் பின்னணியில் ரஷ்யா இருப்பதாகவும் உளவுத் தகவல்களைத் தருவதாகவும் நம்பப்படுகிறது. இந்தச் சூழலில் தான் ரஷ்யா இப்படியொரு டீலை முன்வைத்து இருக்கிறதாம்.
டீல்
அமெரிக்க ஊடகமான பொலிடிகோ இது குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது. கடந்த வாரம் மியாமியில் டிரம்ப்பின் நிர்வாகத் தூதர்களான ஸ்டீவ் விட்கோஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோரை ரஷ்ய அதிபர் புதினின் தூதர் கிரில் டிமிட்ரிவ் சந்தித்திருந்தார். அப்போது தான் இந்த டீல் முன்வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த டீலை அமெரிக்கா ஏற்க மறுத்துவிட்டதாகவும் பொலிடிகோ செய்தி வெளியிட்டுள்ளது.
மறுப்பு
அதேநேரம் இந்த தகவல்களை புதின் தூதர் டிமிட்ரிவ் திட்டவட்டமாக மறுத்துள்ளார். அதேபோல அமெரிக்காவைச் சேர்ந்த பல டாப் அரசியல்வாதிகளும் இதை மறுத்துள்ளனர். இது குறித்து டிரம்ப் கட்சியின் எம்பி அன்னா பவுலினா லூனா, "வெள்ளை மாளிகை அல்லது ரஷ்யாவுடனான விவாதங்கள் அல்லது அமைதிப் பேச்சுவார்த்தைகளில் என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது. ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பதட்டத்தை அதிகரிக்கும் முயற்சிகளைப் புறக்கணிக்க வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications