புதினால் ஏமாந்த அமெரிக்கா. ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்த முடியலை.. தோல்வியை ஒப்புக்கொண்ட டிரம்ப்
வாஷிங்டன்: உக்ரைன் - ரஷ்யா போரை நிறுத்துவது எளிதாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் கடினமானதாக உள்ளது. நான் நினைத்ததை விட கடினமானதாக இருக்கிறது'' என டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இதன்மூலம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முதல் முறையாக போரை நிறுத்த முடியவில்லை என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது குடியரசு கட்சிகளை சேர்ந்த எம்பிக்களுக்கு நேற்று வெள்ளை மாளிகையில் விருந்து அளித்தார். வெள்ளை மாளிகையில் புதிதாக புதுப்பிக்கப்பட்ட ரோஸ் கார்டனில் டின்னர் விருந்து வழங்கினார்.

அதன்பிறகு டொனால்ட் டிரம்ப் கட்சி எம்பிக்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: "கடந்த 7 மாதத்தில் நாம் செய்ததை இதற்கு முன்பு யாரும் செய்யவில்லை. இந்த காலக்கட்டத்தில் 7 போர்களை நிறுத்தி உள்ளோம். ஆனால், எளிதானதாக இருக்கும் என்று நான் நினைத்த ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் மிகவும் கடினமானது. நான் நினைத்ததை விட கடினமாதாக உள்ளது.
ரஷ்ய அதிபர் புதினுடனான உறவு காரணமாக அந்த போரை நிறுத்துவது எளிதானதாக இருக்கும் என்று நான் நினைத்தேன். ஆனால், அது மிகவும் கடினமானதாக முடிந்தது. ஒரு போர் 31 ஆண்டுகளாக நடந்து கொண்டிருந்தது. அது தடுக்க முடியாதது என்று கூறப்பட்டது.
நான் அதை சுமார் 2 மணி நேரத்தில் செய்து முடித்தேன். இன்னொன்று 35 ஆண்டுகளாகவும், இன்னொன்று 37 ஆண்டுகளாகவும் நடந்தது. அவற்றையும் முடித்து வைத்தேன். நான் சில போர்களை முடித்து வைப்பதற்கு முன்பு, சிலர் என்னிடம் அவற்றை தீர்த்து வைக்க முடியாது என்று சொன்னார்கள். நான் அவற்றைத் தீர்த்து வைத்தேன்.
உக்ரைன் - ரஷ்யா போரும் மிகவும் கடினமாக மாறியுள்ளது. ஆனால் நாங்கள் அதைச் சரிசெய்வோம். நாங்கள் அதைத் தீர்த்து வைப்போம்." என்றார். முன்னதாக கடந்த ஆண்டு அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது டொனால்ட டிரம்ப் மக்கள் மத்தியில், ‛‛நான் அதிபராக இருந்திருந்தால் உக்ரைன் - ரஷ்யா போர் வந்திருக்காது. இருப்பினும் அதிபரானால் அடுத்த 24 மணிநேரத்தில் போரை நிறுத்துவேன்'' என்று வாய்ச்சவடால் விட்டார். ஆனால் தற்போது வரை டிரம்பால் போரை நிறுத்த முடியவில்லை.
போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி ஆகியோருடன் நேரிலும், தொலைபேசியிலும் டிரம்ப் பேசி வருகிறார். ஆனாலும் போர் நிறுத்தம் கைகூடவில்லை.
தொடர்ந்து உக்ரைன் மீது ரஷ்யா போர் புரிந்து வருகிறது. அதேபோல் உக்ரைனும், ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இருநாடுகள் இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே தான் செல்கிறது.
முன்னதாக நம் நாட்டுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த போரை டிரம்ப் நிறுத்தியதாக பெருமையாக கூறி வருகிறார். ஆனால் நம் நாடு அதனை ஏற்க மறுத்தது. பாகிஸ்தான் கெஞ்சியதால் தான் போரை நிறுத்தியதாக மத்திய அரசு பலமுறை கூறிவிட்டது. ஆனாலும் டிரம்ப் விடவில்லை. நேற்றைய பேச்சின்போதும் இந்தியா, பாகிஸ்தான் பெயரை குறிப்பிடாத டிரம்ப் இருநாடுகள் இடையே அணுஆயுத போர் வராமல் தடுத்தேன் என்று பெருமையடித்து கொண்டது கவனிக்கத்தக்கது.
-
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications