அதிரடியில் இறங்கிய அமெரிக்கா.. ரஷ்ய விமானங்களுக்கு தடை! நேரடியாக முஷ்டி முறுக்குவதால் பரபரப்பு
வாஷிங்டன்: ‛‛அமெரிக்க வான்வெளியில் ரஷ்ய விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது'' என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து போர் தொடுத்து வருகிறது. இருநாட்டு வீரர்களுக்கும் இடையே சண்டை வலுத்துள்ளது. போர் தொடர்பாக ரஷ்யா-உக்ரைன் இடையே முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்தாலும் அதில் சுமூக முடிவு எட்டப்படவில்லை.
இதனால் இன்று 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இருப்பினும் ரஷ்ய படைகள் தொடர்ந்து உக்ரைன் நகர்களை கைப்பற்றி வருகிறது. உக்ரைன் வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தி வருவதால் அங்கு மோசமான சூழல் நிலவுகிறது. பொதுமக்கள் பாதுகாப்பு கருதி வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.

ஜோ பைடன் கடும் கோபம்
அமெரிக்காவின் அதிபர் ஜோபைடன் பலமுறை வலியுறுத்தியும் ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதின் போர் நடவடிக்கையை கைவிடாமல் தொடர்ந்து வருகிறார். இதனால் ஜோபைடன் கடும் கோபத்தில் உள்ளது. மேலும் அவர் உக்ரைனுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருக்கிறார். இதன் காரணமாக உலகில் உள்ள பிறநாட்டு தலைவர்களுடன் பேசி ரஷ்யாவுக்கு எதிராகவும், உக்ரைனுக்கு ஆதரவான நிலைப்பாட்டையும் எடுக்க அமெரிக்க வலியுறுத்தி வருகிறது.

பொருளாதார தடைகள்
மேலும் ரஷ்யாவை தனித்து விட அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதன்படி அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதித்து வருகிறது. பிற நாடுகளில் உள்ள ரஷ்யாவின் சொத்துக்களை முடக்கி வருகிறது. மேலும் உக்ரைனுக்கு டாலர் மூலமாகவும், ஆயுதங்கள் வழங்கியும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உதவி செய்து வருகின்றன.

விமானங்களுக்கு தடை
ரஷ்யாவை தனித்து விடுவதில் ஜோ பைடன் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதன் ஒருபகுதியாக அமெரிக்க வான்வெளியில் ரஷ்ய விமானங்கள் பறக்க ஜோபைடன் தடை விதித்துள்ளது. இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையின் ஜோபைடன் பேசுகையில், ‛‛ரஷ்யாவின் விமானங்கள் அமெரிக்காவின் வான்வெளியில் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா விமானங்களுக்கு எங்களது வான்வழியை மூடுவதன் மூலம் நட்பு நாடுகளுடன் இணைந்துள்ளோம். ரஷ்யாவை இன்னும் தனிமைப்படுத்தி, பொருளாதாரத்தின் மீது கூடுதல் சுமையை வழங்குவோம்''என்றார்.
Recommended Video

பொதுமக்கள் சிரமம்
இதேபோல் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவின் விமானங்களை தடை விதித்துள்ளது. இதனால் ரஷ்யாவின் விமான போக்குவரத்துக்கு கடும் சவால் ஏற்பட்டுள்ளது. மேலும் போர் முடிவடைந்தாலும் கூட பிற நாடுகள் தாங்கள் விதித்த தடையை உடனே விலக்க வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது. இதனால் ரஷ்யாவின் விமான போக்குவரத்தும், பொதுமக்களும் பெரும் சிரமத்தை சந்திப்பது உறுதியாகி உள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications