கோடி கோடியாய் ஏப்பம் விட்ட நபர்.. வரி ஏய்ப்பு புகாரில் 509 மில்லியன் டாலர் அபராதம்.. கோர்ட் அதிரடி
509 மில்லியன் அபராதம் செலுத்தி உள்ளார் ரஷ்ய கோடீஸ்வரர்
வாஷிங்டன்: அமெரிக்காவில் வரி ஏய்ப்பு செய்ததால் ரஷ்ய கோடீஸ்வரர் ஒலெக் டிங்கோவ் $509 மில்லியன் டாலர் அபராதமாக செலுத்த வேண்டும் என்று அமெரிக்க நீதித்துறை உத்தரவிட்டுள்ளது.
சில மாதங்களுக்கு அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் புலனாய்வு பத்திரிகையான 'புரோபப்ளிகா' அமெரிக்காவின் பெரும் செல்வந்தர்களின் வரி விவரங்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதில் அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் பெசோஸ், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலன் மாஸ்க் போன்ற பெரும் பணக்காரர்கள், பல வருஷமாக எந்தவித வரியும் செலுத்தாமல் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக கூறப்பட்டிருந்தது.
அதாவது 25 பணக்கார அமெரிக்கர்கள் தங்களின் மிகப்பெரிய சொத்துடன் ஒப்பிடுகையில், வருமான வரியை மிகக்குறைவாகவே செலுத்துவதாகவும்,மொத்த வருமானத்தில் சராசரியாக 15.8 சதவீதத்துக்கும் குறைவாகவே வரி செலுத்துகிறார்கள் என்றும், சில சமயங்களில் எதுவுமே செலுத்துவதில்லை என்றும் தெரிவித்திருந்தது.
இதையடுத்து பல்வேறு விமர்சனங்களும் கருத்துக்களும், விவாதங்களும் எழ ஆரம்பித்தன.. இப்படிப்பட்ட தொழிலதிபர்கள் வரி ஏய்ப்பு செய்வது சட்டவிரோதமானது என்று வெள்ளை மாளிகையும் கருத்து தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஒரு தொழிலதிபர் வரிஏய்ப்பு செய்ததால், $509 மில்லியன் டாலர் அபராதமாக செலுத்த வேண்டும் என்று அமெரிக்க கோர்ட் நீதித்துறை உத்தரவிட்டுள்ளது.
அவர் பெயர் டிங்கோ டிக்காப்.. இவர் அமெரிக்காவில் மிகப்பெரிய கோடீஸ்வரர் ஆவார்... கிரெடிட் சர்வீசஸின் நிறுவனராக உள்ளார்.. இதைதவிர, ஆன்லைன் வங்கி உட்பட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருபவர்.. ரஷ்யாவில் பிறந்த இவருக்கு வயது 53 வயதாகிறது.. 1996ம் ஆண்டு அமெரிக்க குடியுரிமை பெற்றதாக நீதித்துறை தெரிவித்துள்ளது.
2013-ம் ஆண்டு தனது அமெரிக்க குடியுரிமையை கைவிட்ட ஒலெக் டிங்கோவ், $1 பில்லியனுக்கும் அதிகமான வருமானத்தை மறைத்ததாக கூறப்படுகிறது... இதன்பின்பு அவர் பிரிட்டன் சென்றார்... இதனை கண்டுபிடித்த அமெரிக்க நீதித்துறை ஒலெக் டிங்கோவ்வை நாடு கடத்த ஆண்டு பிரிட்டனிடம் கோரிக்கை விடுத்து இருந்தது .. இது தொடர்பாக விசாரணையும் நடந்து வந்த நிலையில், ஏய்ப்பு செய்ததை கோடீஸ்வரர் ஒலெக் டிங்கோவ் ஒப்புக் கொண்டார். இதனால் அவருக்கு $509 மில்லியன் டாலர் அபராதம் தற்போது விதிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications