தலைகீழாக சுற்ற தொடங்கும் பூமியின் மைய பகுதி.. திடீரென நடந்த மாற்றம்.. என்ன தான் நடக்கிறது!
வாஷிங்டன்: பூமியின் மையப் பகுதியில் அமைந்துள்ள இன்னர் கோர் சுற்றி வந்த நிலையில், அதில் முக்கிய மாற்றங்களை இப்போது ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதாவது இத்தனை ஆண்டுகளாகப் பூமி ஒரு பக்கம் சுற்றிய நிலையில், இப்போது அது திடீரென தனது திசையை மாற்றி வேறு திசையில் சுற்றத் தொடங்கியுள்ளதாம். இதற்கு என்ன காரணம்.. இதன் பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
நமது பூமியின் மையத்தில் ஒரு திடமான உலோகப் பந்து இருக்கிறது. அவை உள்ளே தனியாகச் சுற்றிக்கொண்டு இருக்கிறது. பூமியின் சுழற்சிக்கும் இதற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. இவை சுயாதீனமாகச் சுற்றி வருகிறது.

சுற்றும் இன்னர் கோர்: அதாவது நமது பூமி ஒட்டுமொத்தமாக ஒரு சைட்டில் சுழலும் நிலையில், அதற்கு எந்தவொரு தொடர்பும் இல்லாமல் இது தனியாகச் சுற்றி வருகிறது. 1936இல் டென்மார்க் நாட்டை சேர்ந்த நில அதிர்வு நிபுணர் இங்கே லெஹ்மான் கண்டுபிடித்தார். அப்போது முதலே இந்த இன்னர் கோர் குறித்தே ஆய்வாளர்கள் தொடர்ந்து பல விய ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக இந்த இன்னர் கோரின் சுழற்சி வேகம் மற்றும் திசை ஆகியவை குறித்துத் தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருகிறது. முதலில் இந்த இன்னர் கோர் கண்டறியப்பட்டதில் இருந்து இதன் சுழற்சி கணிசமாக மாறிவிட்டதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இருப்பினும், உள்ளே என்ன நடக்கிறது.. ஏன் இந்த மாற்றம் நடக்கிறது என்பதில் ஆய்வாளர்களிடையே இரு வேறு கருத்துகளே நிலவுகிறது.
பூமியை தாக்கும் ராட்சத விண்கல்.. பூமி மொத்தமாக அழியும் அபாயம்! எச்சரிக்கும் இஸ்ரோ தலைவர் சோம்நாத்
முக்கியமான சவால்: இதை ஆய்வு செய்வதில் முக்கியமான சவால் என்னவென்றால்.. இந்த இன்னர் கோரை எந்தவொரு ஆய்வாளராலும் நேரடியாகக் கண்காணிக்க முடியாது. பிறகு எப்படி அதை ஆய்வு செய்கிறார்கள் எனக் கேட்கிறீர்களா.. பூமியில் பெரிய நிலநடுக்கங்கள் ஏற்படும் போது அப்போது ஏற்படும் அலைகள் எப்படி வருகிறது.. எந்த திசையில் வருகிறது என்பதை வைத்தே இந்த இன்னர் கோர் குறித்த ஆய்வுகளை மேற்கொள்வார்கள்.

இது தொடர்பாக ஆய்வாளர்கள் கூறுகையில், "முதலில் இன்னர் கோர் ஒரே திசையில் தான் சுற்றும் என்றே ஆய்வாளர்கள் கருதினர். 1970களில் தான் முதல்முறையாக இன்னர் கோர் சுழலும் திசை அவ்வப்போதும் மாறும் என்ற கோட்பாடு முன்வைக்கப்பட்டது. ஆனால், அப்போது அதைப் பலரும் ஏற்கவில்லை.. ஆனால் 90களில் இன்னர் கோர் திசை மாறுவதற்கான ஆதாரங்கள் நமக்குக் கிடைத்தன" என்றார்.
மாறிய திசை: இப்போது இது தொடர்பாகவே ஆய்வுகள் நடந்து வருகிறது. இதற்கிடையே இது தொடர்பாக புதிய ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. அதாவது முதலில் அந்த இன்னர் கோர் பூமியை விட வேகமாகச் சுற்றிக் கொண்டு இருந்துள்ளது. அதன் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு அது பூமியின் வேகத்திலேயே சுற்றிக் கொண்டு இருந்துள்ளது. அதன் பிறகு அதன் வேகம் மேலும் குறைந்த நிலையில், இறுதியில் அது தனது திசையை முழுமையாக மாற்றிச் சுற்றிக் கொண்டு இருக்கிறது.
இது குறித்த விரிவான ஆய்வு முடிவுகள் நேச்சர் இதழில் வெளியாகியுள்ளது. அதில் இன்னர் கோர் திசை மாறி இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், அந்த இன்னர் கோர் 70 ஆண்டுகளுக்கு ஒரு முறை திசையை மாற்றிச் சுற்றுவதாகவும் அந்த ஆய்விதழில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இதை அனைத்து ஆய்வாளர்களும் ஏற்கவில்லை. ஒரு தரப்பினர் இன்னர் கோர் திசையை மாற்றி உள்ளது என்பதற்குக் கூடுதல் ஆதாரங்கள் தேவை எனக் கூறி வருகிறார்கள்.
இன்னர் கோர்: இந்த இன்னர் கோர் பூமியின் உள்ளே சுமார் 5,180 கிமீ ஆழத்தில் உள்ளது. வெளியே திரவ உலோகம் இருக்கும் நிலையில், இதன் உள்ளே திட உலோகம் உள்ளது. இது பெரும்பாலும் இரும்பு மற்றும் நிக்கல் ஆகியவற்றால் ஆனது என்றே கூறப்படுகிறது. உட்புறம் இருக்கும் இந்த திட உலோகத்தின் வெப்பம் சுமார் 9,800 டிகிரி பாரன்ஹீட்டாக இருக்கும் என்றே ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications