பூமியை தாக்கும் ராட்சத விண்கல்.. பூமி மொத்தமாக அழியும் அபாயம்! எச்சரிக்கும் இஸ்ரோ தலைவர் சோம்நாத்
பெங்களூர்: இந்த விண்வெளியில் பல லட்சம் சிறுகோள்கள் சுற்றி வரும் நிலையில், இவை பூமியில் மோதினால் மிக பெரிய பேரழிவு ஏற்படும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் எச்சரித்துள்ளார். குறிப்பாக 100 மீட்டர் விட்டமுள்ள சிறுகோள் நம்மைத் தாக்கினால் அது ஒரு நாட்டையே அழிந்துவிடும் என்றும் 2 கிமீ விட்டம் கொண்ட சிறுகோள் பூமியைத் தாக்கினால் அது பூமியை மொத்தமாக அழிக்கும் ஆபத்து இருப்பதாக சோம்நாத் எச்சரித்துள்ளார்.
இஸ்ரோ வெற்றிகரமாக பல விண்வெளி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் சர்வதேச விண்வெளி ஆய்வில் இந்தியாவுக்கு என தனி இடம் இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

சிறுகோள்: இதற்கிடையே இப்போது இஸ்ரோ அடுத்த கட்டமாக asteroids எனப்படும் சிறுகோள்கள் குறித்த ஆய்வில் இறங்கியுள்ளன. பொதுவாக சிறுகோள் குறித்த ஆய்வுகளை அமெரிக்கா தான் அதிகம் மேற்கொள்ளும்..
சரியாக இன்னும் 14 ஆண்டுகளில் அதாவது 2038ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி சிறுகோள் ஒன்று பூமியை தாக்க 72% வரை வாய்ப்புள்ளதாக நாசா எச்சரித்து இருந்தது. இது சர்வதேச அளவில் பரபரப்பை கிளப்பியிருந்த நிலையில், இதே சிறுகோள்கள் தொடர்பாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் சில முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளார்.
சோம்நாத்: இஸ்ரோ நிர்வாகம் இந்த சிறுகோள்கள் குறித்து ஆய்வு நடத்துவதாகவும் பூமியை நெருங்கினாலும் அது அதை அழித்து பூமியை எப்படி பாதுக்காக்க வேண்டும் என்பது குறித்தும் ஆய்வு செய்து வருவதாக இஸ்ரோ தலைவர் எஸ் சோமநாத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், "335 மீட்டர் பெரிதான 99942 அபோஃபிஸ் என்ற சிறுகோளை இப்போது கண்காணித்து வருகிறோம். இது பூமியைத் தாக்க வாய்ப்பு உள்ளதாகவே கருதப்படுகிறது. இந்த சிறுகோள் 2029ம் ஆண்டு பூமிக்கு மிக நெருக்கமாக சுமார் 32,000 கிமீ அருகில் கடக்க உள்ளது. இந்த சிறுகோளை கண்காணிக்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளது. இந்த சிறுகோளில் இருந்து பூமியை காப்பாற்ற எப்படி உதவலாம் என்பது குறித்து ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம், ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் மற்றும் அமெரிக்காவின் நாசா உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
பூமியே அழியும்: ஒரு சிறுகோள் பூமியைத் தாக்கினால் கூட அது பேரழிவை ஏற்படுத்தும். நாம் நமது கிரகத்தை பாதுகாப்பாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சுமார் 100 மீட்டர் விட்டமுள்ள சிறுகோள் நம்மைத் தாக்கினால் கூட அது பேரழிவை ஏற்படுத்தும்.. ஒட்டுமொத்த தேசமே அழிந்துவிடும். 2 கிமீ விட்டம் நம்மை தாக்கினால், முழு பூமியும் அழியும் ஆபத்து இருக்கிறது.
"பூமியை நோக்கி வரும் சிறுகோள்.." சரியாக இந்த நாளில் தான் மோத போகுது.. நம்மால் தடுக்கவே முடியாதாம்
வரும் காலத்தில் நம்மால் நிச்சயம் ஒரு சிறுகோள் மீது சாக்கெட்டை தரையிறக்க முடியும்.. அந்த சிறுகோள் பூமியில் தாக்கினால் என்ன ஆபத்து ஏற்படும் என்பதை ஆய்வு செய்து தற்காப்புக்குத் தயாராகலாம். ஏற்கனவே இந்த திறனை கொண்டுள்ள பிற நாடுகள் மற்றும் அமைப்புகளுடன் இந்த விவகாரத்தில் இணைந்து செயல்பட விரும்புகிறோம்.
இந்தியா: சந்திரனில் தரையிறங்கும் ஆற்றல், சூரியனின் லாக்ரேஞ்ச் புள்ளியில் செயற்கைக்கோளை நிலைநிறுத்தும் திறன் கொண்ட நாடாக இப்போது இந்தியா இருக்கும் நிலையில், அடுத்த கட்டமாக சிறுகோள்கள் குறித்து ஆய்வு செய்வதில் ஆர்வமாக உள்ளது.
விண்வெளியில் பல லட்சம் சிறுகோள்கள் உள்ளன.. அதில் பெரும்பாலான சிறுகோள்கள் செவ்வாய் மற்றும் வியாழன் கிரங்களுக்கு நடுவே தான் உள்ளன.. அளவு சிறியதாக இருந்தாலும், அவை வேகமாக பயணிப்பதால் பூமியில் மோதினால் மிக மோசமான பாதிப்பு ஏற்படும்.. எனவே, பூமியை பாதுகாக்க இது குறித்த ஆய்வு முக்கியமானதாக இருக்கிறது" என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications