வெள்ளை மாளிகையில் ஊடுருவிய நபர்! "அலறிய அலாரம்.." பதறிய சீக்ரெட் சர்வீஸ்.. கடைசியில் செம காமெடி
வாஷிங்டன்: அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் யாரோ உள்ளே நுழைந்துவிட்டதாக அலர்ட் சென்றுள்ளது. உடனே பதறியடித்துக் கொண்டு சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகள் அங்கே சென்றுள்ளனர். கடைசியில் யார் உள்ளே நுழைந்தது என்பது தான் பெரிய ட்விஸ்ட்டாக இருந்துள்ளது.
உலகிலேயே மிகவும் பாதுகாக்கப்பட்ட இடங்களில் ஒன்றாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை கருதப்படுகிறது. அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் இருக்கும் வெள்ளை மாளிகையில் பாதுகாப்பு எப்போதும் உச்சத்தில் இருக்கும்.

வெள்ளை மாளிகை தான் அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமாகும்.. அமெரிக்க அதிபராகத் தேர்வாகும் நபர் தனது பதவிக் காலம் முழுக்க இங்கே தான் இருந்து பணியாற்றுவார்கள்.
வெள்ளை மாளிகை: இதன் காரணமாகவே வெள்ளை மாளிகையில் பாதுகாப்பு உச்சத்தில் இருக்கும். வெள்ளை மாளிகைக்கு மேல் டிரோன் தொடங்கி எந்தவொரு விமானம் பறந்தாலும் சுட்டு வீழ்த்திவிடுவார்கள். வெள்ளை மாளிகை சுற்றிப் பார்க்கும் வசதி இருந்தாலும் கூட, அவர்கள் தீவிர சோதனைக்குப் பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். அனுமதி இல்லாமல் யார் உள்ளே வந்தாலும் அவ்வளவுதான். சீக்ரெட் சர்வீஸ் அலர்ட்டாகிவிடும்.
நொடிகளில் அந்த நபரை வந்து அலேக்காக தூக்கிக் கொண்டு போய்விடுவார்கள். அந்தளவுக்கு கடும் கட்டுப்பாடுகள் நிறைந்த ஒரு பகுதியாகவே வெள்ளை மாளிகை இருக்கிறது. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு, வெள்ளை மாளிகையில் வினோதமான ஒரு நிகழ்வு நடந்துள்ளது. அன்றைய தினம் மதிய நேரம் திடீரென சீக்ரெட் சர்வீஸுக்கு அலர்ட் சென்றுள்ளது. சீக்ரெட் சர்வீஸ் தான் அமெரிக்க அதிபரின் பாதுகாப்பை முழுமையாகக் கையாள்வார்கள்.

சீக்ரெட் சர்வீஸ்: வெள்ளை மாளிகையில் யாரோ அனுமதி இல்லாமல் முறைகேடாக நுழைந்துள்ளதாக சீக்ரெட் சர்வீசுக்கு அலர்ட் பறந்துள்ளது. இதனால் பதறிய அதிகாரிகள், உடனடியாக அலர்ட் வந்த இடத்திற்குச் சென்று பார்த்துள்ளனர். ஆனால், அங்கே சிறு குழந்தை தவழ தெரியாமல் தவழ்ந்து கொண்டு இருந்துள்ளது. அது பின்னர் தான் தெரிந்துள்ளது. இதையடுத்து அலாரத்தை ஆப் செய்துவிட்டு குழந்தையை அழைத்துச் சென்றுள்ளனர்.
அதாவது அமெரிக்க அதிபர் மாளிகையைச் சுற்றிலும் பாதுகாப்பிற்கு வேலி (fence) அமைத்திருப்பார்கள். அந்த வேலிக்கு இடையே இருக்கும் சின்ன கேப்பில் புகுந்து தான் இந்த குழந்தை உள்ளே நுழைந்துள்ளது. வெள்ளை மாளிகையில் வடக்கு சைட்டில் தான் குழந்தை உள்ளே நுழைந்துள்ளது. அதன் அருகே தான் அவர்களின் பெற்றோர் இருந்துள்ளனர். அந்த குழந்தையின் பெற்றோர்களும் இதைக் கவனிக்காமல் விட்டுள்ளனர். இதனால் அந்த குழந்தை நைசாக உள்ளே நுழைந்துவிட்டது.
விரிவான விசாரணை: இது குறித்து சீக்ரெட் சர்வீஸ் சார்பில், "வெள்ளை மாளிகையின் வடக்கு வேலி சைட்டில் ஆர்வமாக நுழைந்த இளம் பார்வையாளரை சீக்ரெட் சர்வீஸ் பிடித்தனர். வெள்ளை மாளிகையின் பாதுகாப்பு அமைப்புகள் உடனடியாக இது குறித்து சீக்ரெட் சர்வீஸுக்கு தகவல் தெரிவித்துள்ளது. சீக்ரெட் சர்வீஸ் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையை மீட்டுப் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
குழந்தையைப் பெற்றோரிடம் ஒப்படைக்கும் முன்பு, அவர்களிடம் விரிவான விசாரணை நடத்தப்பட்டது. மேலும், குழந்தையைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும்படி அறிவுறுத்திய சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகள் அதன் பின்னரே குழந்தையை ஒப்படைத்தனர்.
பாதுகாப்பு கெடுபிடி: வெள்ளை மாளிகையில் அடிக்கடி பாதுகாப்பு குளறுபடிகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து சமீபத்தில் தான் அங்கே இருந்த வேலி இரட்டிப்பாக்கப்பட்டது. இப்போது இரண்டு கம்பிகளுக்கு இடையே வெறும் 12.7 சென்டிமீட்டர்கள் தான் சராசரியாக இடைவெளி இருக்கிறது. ஆனால், அதிலும் இந்த குழந்தை புகுந்துள்ளது. வேலியை அப்டேட் செய்த பிறகு குழந்தை ஒன்று உள்ளே நுழைவது இதுவே முதல்முறையாகும்.
முன்னதாக கடந்த 2014இல் அப்போதைய அதிபர் பராக் ஒபாமா ஈராக் குறித்துப் பேசும் சமயத்தில் இதேபோல குழந்தை ஒன்று உள்ளே வந்துவிட்டது. இதனால் அப்போது அங்கு மினி லாக்டவுன் போடும் அளவுக்குக் கெடுபிடி இருந்தது. ஆனால், நல்வாய்ப்பாக இந்த முறை அவ்வளவு கெடுபிடிகள் இல்லை.
-
முறிந்த பேச்சுவார்த்தை.. முளைக்கும் புது நம்பிக்கை! ஒரே ரூமில் அமர்ந்து பேச அமெரிக்கா- ஈரான் சம்மதம் -
"5 vs 20.." விட்டு கொடுக்காத ஈரான்.. விடாப்பிடியாக இழுக்கும் அமெரிக்கா.. அடுத்து என்ன நடக்கும்? -
அமெரிக்கா - ஈரான் மோதலால் இந்தியாவுக்கு 7 பெரும் சவால்கள்! அபாய மணியடிக்கும் வளைகுடா -
"எல்லை மீறி போறீங்க.." டெல்லி சாலைகளில் ஓடும் டிரம்ப் ஆட்டோக்கள்.. அப்படி என்ன காரணம் தெரியுமா? -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி?












Click it and Unblock the Notifications