ஷாக்கிங்.. தடுப்பூசி போடாத ஊழியர்களுக்கு ரூ.15 ஆயிரம் சம்பள பிடித்தம்.. பிரபல நிறுவனம் அறிவிப்பு
தடுப்பூசி போடாத ஊழியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்யப்படுகிறது
வாஷிங்டன்: கொரோனா தடுப்பூசி போடாத ஊழியர்களுக்கு, வரும் நவம்பர் மாதம் 1ம் தேதி முதல் சம்பளத்தில் 200 அமெரிக்க டாலர்கள் பிடித்தம் செய்யப்படும் என்று டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது... இது ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர்களை கலக்கம் அடைய செய்துள்ளது.
அமெரிக்காவில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது... உலகிலேயே தொற்று பாதிப்பில் அமெரிக்காதான் முதலிடத்தில் உள்ளது..
நாளுக்கு நாள் அங்கு டெல்டா வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது... எனவே, கொரோனா தடுப்பூசி போடும் பணியை துரிதப்படுத்தி உள்ளனர்..

தடுப்பூசி
அத்துடன், தடுப்பூசி போட பொது மக்களுக்கு விழிப்புணர்வும், தடுப்பூசி செலுத்தி கொண்டால் பரிசும் வழங்கப்பட்டு வருகிறது. எனினும் தடுப்பூசியை செலுத்தி கொள்ள சிலர் முன்வராமலும் உள்ளனர். எனவே, மக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நிலையில், சில நிறுவனங்கள் தடுப்பூசி கட்டாயமாக செலுத்திக் கொள்ள வேண்டும் என்று நிபந்தனைகளை விதித்தும் வருகின்றன...

சம்பள பிடித்தம்
அந்த வகையில், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் விமான நிறுவனமான டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் ஒரு புதுவித அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. அதன்படி, கொரோனா தடுப்பூசி போடாத ஊழியர்களுக்கு, வரும் நவம்பர் மாதம் 1ம் தேதி முதல் சம்பளத்தில் 200 அமெரிக்க டாலர்கள் பிடித்தம் செய்யப்படும் என அறிவித்துள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 15 ஆயிரம் ரூபாய் ஆகும்...
Recommended Video

டெஸ்ட்
கொரோனா தடுப்பூசியை ஊழியர்கள் போட்டுக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையிலேயே இப்படி ஒரு கறார் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் காரணம் கூறுகிறது.. வரும் 12-ம் தேதி முதல், முழுமையாக கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ளாத ஊழியர்களுக்கு வாரம் ஒரு முறை கொரோனா டெஸ்ட் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது...

நடவடிக்கை
அதுமட்டுமல்ல, கொரோனாவால் பாதித்த ஊழியர்களின் சிகிச்சைக்கு 37 லட்சம் ரூபாய் செலவாகிறது என்பதால் அனைத்து ஊழியர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வண்ணம் இந்த நடவடிக்கை எடுக்க உள்ளதாக அந்த நிறுவனம் விளக்கமளித்துள்ளது... சம்பளத்தில் இருந்து 15,000 ரூபாய் பிடித்தம் செய்யப்படும் என்ற செய்தியை கேட்டு, எர்லைன்ஸ் நிறுவன ஊழியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications