அமெரிக்காவில் சர்வதேச விமான நிலையம் அருகே பயங்கரம்... திடீர் துப்பாக்கி சூட்டில் 8 பேர் பலி
வாஷிங்டன்: அமெரிக்காவின் இண்டியானாபோலிஸ் நகரில் சர்வதேச விமான நிலையத்தின் அருகே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவைப் போல அமெரிக்காவில் துப்பாக்கி வாங்குவதற்கு லைசென்ஸ் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் இல்லை. இதனால் அங்குத் துப்பாக்கி கலசாரம் அதிகமாகவே இருக்கும்.

துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் அமெரிக்காவில் அவ்வப்போது நடைபெற்றுவருகிறது. முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாகூட துப்பாக்கி கலாசாரத்தைக் கட்டுப்படுத்த புதிய சட்டத்தைக் கொண்டுவர முயன்றார். இருப்பினும், நாடாளுமன்றத்தில் அந்தச் சட்டத்தை அவரால் நிறைவேற்ற முடியவில்லை,
இந்நிலையில், மற்றுமொறு துயர சம்பவமாக அமெரிக்காவின் இண்டியானாபோலிஸ் நகரில் மற்றுமொரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபரும் தற்கொலையால் உயிரிழந்தாக போலீசார் தெரிவித்தனர். இதனால் மொத்த உயிரிழப்பு எட்டாகப் பதிவாகியுள்ளது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு 30க்கும் மேற்பட்ட போலீஸ் வாகனங்கள் குவிக்கப்பட்டுள்ளன. துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இடத்தை ஆராய்ந்த போலீசார், துப்பாக்கியால் சுட்ட நபர் உயிரிழந்துவிட்டார் என்றும் இனிமேல் அங்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் இண்டியானாபோலிஸ் நகரின் அருகேயுள்ள ஃபெடெக்ஸ் மையத்தில் நடைபெற்றுள்ளது. அந்த மையத்தில் சுமார் 4000 ஃபெடெக்ஸ் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நல்லவேளையாக அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications